பட்ஜெட் விலையில் விற்பனைக்குவரும் தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!

ஆண்ட்ராய்டு 4.4 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

|

4கே ஸ்கீரின் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இப்போது சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, எச்டிஆர்(HDR)தொழில்நுட்பம் மற்றும் 4கே தொலைக்காட்சிகளில் பங்குதாரர்களால் பெருமளவில் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து இடங்களிலும் ஒஎல்இடி ஸ்கீரின் கொண்ட டிவி மாடல்கள் கூட அதிக வரவேற்பை பெற்றுள்ளது, ஆனால் இந்த டிவி மாடல்களின் விலை சற்று அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் தொலைக்காட்சி வாங்குபவருக்கு பல்வேறு விருப்பங்கள் உள்ளது, குறிப்பாக பானாசோனிக், வீடியோகான், சாம்சங், வியூ (VU) போன்ற பெரிய நிறுவனங்களின் டிவி மாடல்களும் சிறந்த தொழில்நுட்ப அம்சத்தை கொண்டு வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஆண்ட்ராய்டு இயங்குளம் மற்றும் ஒஎல்இடி ஸ்கீரின் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்ளும் புதுமையான தொழில்நுட்பத்தை சிறப்பாகக் கொண்டிருப்பதோடு சிறந்த மற்றும் அதிவேகமான அனுபவத்தை வழங்குகிறார்கள்.

பட்ஜெட் விலையில் விற்பனைக்குவரும் தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!

வியூ (ஏரு) டெலிவிஷன்ஸ் நிறுவனம் யுஉவiஏழiஉந-திறமையை கொண்ட 43-இன்ச்(42எஸ்யூ128), 49-இன்ச்(49எஸ்யூ131) மற்றும் 55-இன்ச்(55எஸ்யூ138)
போன்ற 4கே ஸ்மார்ட் டிவி மாடல்கள் தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் வியூ (ஏரு) டெலிவிஷன்ஸ் அறிமுப்படுத்தியுள்ள
இந்த டிவி மாடல்களின் தொடக்க விலை ரூ.36,999-ஆக உள்ளது. மேலும் எல்ஜி நிறுவனம் கூட ரூ.19,789-விலையில் 32-இன்ச் எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன்பின்பு பானாசோனிக் மற்றும் பிலிப்ஸ் போன்ற நிறுவனங்களும் ரூ.17,000 விலையில் அட்டகாசமான டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, ஆனால் தற்சமயம்
வெளிவந்துள்ள தாம்சன் டிவி மாடல்கள் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

120 வயதான பிரெஞ்சு தொலைக்காட்சி பிராண்ட், தாம்சன் ஆகும். மிகச் சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சிலவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தன,
தாம்சன் எப்போதும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அணுகுவதை இலக்காகக் கொண்டது. இந்த முறை 3 ஸ்மார்ட் எல்இடி தொலைக்காட்சிகளை சமீபத்தில் இந்திய சந்தையில் மீண்டும் நுழைந்தது, ஏற்கனவே மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயங்களை வென்றுள்ளன தாம்சன், தொலைக்காட்சிகளின் முதல் ஆன்லைன் பிரத்தியேக விற்பனையான #OnlyOnFlipkart மூலம் கொண்டுவந்துள்ளது.

ஆரம்ப விலை

ஆரம்ப விலை

தாம்சன் தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ள மாடல்களின் வரிசை- 43-இன்ச் யூஎச்டி ஸ்மார்ட் டிவி(43டிஎம்4377), 40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099), 32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277). குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களின் ஆரம்ப விலை ரூ.13,499-ஆக உள்ளது. மேலும் 4கே யூஎச்டி போன்ற அசத்தலான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

தாம்சன் அறிமுகப்படுத்தியுள்ள எல்இடி டிவி மாடல்கள தனித்துவமான அம்சங்களையும் குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக
இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் விரும்பும் வகையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவமைப்பு & கட்டமைப்பு:
தாம்சன் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த 43-இன்ச் டிவி மாடல் மிகவும் இலகுரக அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் பிளாஸ்டிக் வெளியே
வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு பாதுகாப்பான மற்றும் வழக்கமான அம்சங்களுடன் இந்த டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

ஆண்ட்ராய்டு 4.4 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்கள், அதன்பின்பு ஸ்மார்ட் டிவியில் தேவைப்படும் பெரும்பாலான பயன்பாடுகள், நெட்ஃபிக்ஸ், யூடியூப், சவுண்ட் கிளவுட் போன்றவை தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்களில் பயன்படுத்த முடியும்.

இந்த ஸ்மார்ட் டிவியில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி-டி720ஜிபியூ ஆதரவு மற்றும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.

ஆடியோ & வீடியோ:

ஆடியோ & வீடியோ:

தாம்சன் 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை எல்ஜி ஐபிஎஸ் பேனல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் எச்டிஆர் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் 4கே திர்மானம
போன்றவை இவற்றில் உள்ள மிகப்பெரிய வசதி என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாம்சன் நிறுவனம் கொண்டுவந்துள்ள 43-இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.27,999-ஆக உள்ளதஅதன்பின்பு.நிச்சயமாக மலிவான விலையில் 4கே யூஎச்டி ஸ்மார்ட் டிவி மாடலை வாங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

40-இன்ச் ஸ்மார்ட் டிவி:

40-இன்ச் ஸ்மார்ட் டிவி:

40-இன்ச் ஸ்மார்ட் டிவி (40டிஎம்4099) மாடல் பொறுத்தவரை கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மாலி டி720எம்பி2 ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார் டிவியின் விலைப் பொறுத்தவரை 19,999-ஆக உள்ளது.

32-இன்ச் ஸ்மார்ட் டிவி(32எம்3277) பொதுவாக சாம்சங் எல்டி பேக்லைட் பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின்விலைப் பொறுத்தவரை ரூ.13,490-ஆக உள்ளது.

நம்பிக்கைக்குரிய விஷயம் என்னவென்றால், தாம்சன் ஐரோப்பாவில் முதன் முதலாக வீட்டு உபயோகப் பிராண்ட் ஆக உயர்வடைந்துள்ளது, குறிப்பாக இது முன்னணி தொலைக்காட்சி உற்பத்தியாளர்களில் ஒருவராக உள்ளது. மேலும் சிறந்த தரம் கொண்டு தாம்சன் பிராண்டுகள் வெளிவருவதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த தாம்சன் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பின்பு பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி மாடல்களை எளிமையாக வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
India Has Chosen It s Favourite Smart LED TV And It Might Not Be What You re Guessing Right Now; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X