நொய்டாவில் வீடியோ கேம் திருவிழா!

By Super
|
நொய்டாவில் வீடியோ கேம் திருவிழா!

டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் இன்று வீடியோ கேம் திருவிழா துவங்குகிறது.. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1.5 கோடிவரை பரிசும் காத்திருக்கிறது. இந்த அறிய நிகழ்வை டபுள்யுடிஎப் ஈவன்ட்ஸ் நடத்துகிறது. மேலும் நொய்டாவில் உள்ள அயட்டி ரிசார்ட்டில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இந்த கேமிங் திருவிழாவில் பங்கெடுக்க இதுவரை 20000க்கும் அதிகமானோர் தமது பெயர்களைப் பதிவு செய்திருக்கின்றனர். இதில் உடல் ரீதியான விளையாட்டு போட்டிகளும் உண்டு. குறிப்பாக 8 பால் பூல் மற்றும் ஸ்னூக்கர் போன்ற விளையாட்டுகளும் இந்த நிகழ்வில் உண்டு.

இந்த மின்னனு விளையாட்டுத் திருவிழா இன்று முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயர்களை இந்த நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

3 லட்சம் பேர் வரை இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று இதன் அமைப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர். சாதாரண விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க நுழைவு கட்டணம் ரூ.150க்கும் குறைவே.

ஒரு நாளுக்கான நுழைவு கட்டணம் ரூ.500 ஆகும். 3 நாள்களுக்கும் சேர்த்து நுழைவுக் கட்டணம் ரூ.1000 ஆகும். போட்டிகளுக்கிடையே கேளிக்கை நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன. அதற்காக பிரபல இந்தி பாப் நட்சத்திரம் திரு. ஹனி சிங் அழைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த திருவிழாவில் என்எப்எஸ் மோஸ்ட் வாண்டட், போர்சா மோட்டோர் ஸ்போர்ட் 4, டெக்கன் 6, சூப்பர் ஸ்ட்ரீட் பைட்டர் IV ஆர்கேட் எடிசன், பிபா சாச்சர், டோட்டா, ஸ்டார் க்ராப்ட் II, பேட்டில் பீல்டு 3, சிஒடி: கவுண்டர் ஸ்ட்ரைக் 1.6, டான்ஸ் சென்ட்ரல் 2 மற்றும் 8 பாட்டில் பூல் மற்றும் ஸ்னூக்கர் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X