இந்தியாவில் இருமடங்கான ஃபிட்சர் போன் சந்தை: ஜியோ போன் தாக்கமா?

|

2018ம் ஆண்டின் முதல் காலாண்டில், இந்திய மொபைல் போன் சந்தை 48% வளர்ந்த நிலையில், அதன் ஃபிட்சர் போன் (Feature phone) பிரிவு இரு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு காரணம் புதிதாக சந்தைக்கு வந்துள்ள ரிலையன்ஸ் ஜியோபோன் என்கிறது கவுன்டர்பாய்ன்ட் என்ற ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை.

இந்தியாவில் இருமடங்கான ஃபிட்சர் போன் சந்தை: ஜியோ போன் தாக்கமா?

ஃபிட்சர் போனின் ஆச்சர்ய வளர்ச்சி பற்றி தருண் பதாக் கூறுகையில் ,ஜியோ போனிற்கான அதீத தேவை 2018ன் முதல் காலாண்டிலும் தொடர்கிறது. கடந்த ஆண்டு 0% ஆக இருந்த ரிலையன்ஸ் ஜியோ ஃபிட்சர் போனின் சந்தை , தற்போது 36% ஆக இருக்கிறது. ஜனவரியில் ஜியோ போனுடன் ரூ49க்கு அன்லிமிடேட் வாய்ஸ் மற்றும் 1GBடேட்டா தரும் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்பு இந்த ஜியோ ஃபிட்சர்போனுக்கான தேவை மேலும் அதிகரித்துள்ளது.

"இந்தியாவின் இலவச ஸ்மார்ட்போன் " என ஜியோ ஆக்ரோசமாக இந்த போனை பிரபலப்படுத்தி வந்தாலும், எளிமையான ஸ்மார்ட் ஃபிட்சர் போனான இது, 2G பயனர்கள் அதிக அளவில் கவர்ந்திழுத்துள்ளது.

ஸ்மார்ட் போனில் பிரிவில், 2018ன் முதல் காலாண்டில் 31% சந்தை பங்குடன் சியோமி முதலிடம் வகிக்கிறது. சாம்சங் 26% , விவோ 6%, ஓப்போ 6% மற்றும் ஹானர் 3% உடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

2017ன் நான்காம் காலாண்டில் வந்த விழாகாலத்தை தொடர்ந்து 2018ன் தொடக்கத்திலும் சில பிராண்டுகள் எந்த புதிய மொபைலையும் அறிமுகப்படுத்தாமல் ஏற்கெனவே உள்ளவற்றை மட்டுமே காட்சிப்படுத்தின. மேலும் அந்த காலாண்டில் சியோமி மற்றும் சாமசங் தவிர வேறு எந்த பிராண்டும் புதிய மொபைல்களை அவ்வளவாக அறிமுகப்படுத்தவில்லை. தற்போதைய 2018ன் இரண்டாம் காலாண்டில், தேவைகள் அதிகரித்து 2G மற்றும் 3G மொபைல்கள் வேகமாக 4G மொபைலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் 9 லைட் மற்றும் 7X ன் வலுவான செயல்பாடுகளால், முதல்முறையாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 5ம் இடத்தை பிடித்துள்ளது ஹூவாய்-ன் ஹானர்.

இந்த போட்டி சந்தையை பற்றி ரிசர்ச் அனலிஸ்டான அன்சிகா ஜெயின் கூறுகையில், மொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் சியோமி 58% ஐ கைபற்றிவிட்டது. ஆன்லைன் சந்தையில் 57% ஐ கைபற்றிய சியோமி தற்போது ஆப்லைனிலும் வலுவாக கால்பதிக்க முயல்கிறது.

5வது இடத்தை கைப்பற்ற நடக்கும் போட்டியில், லாவா, மைக்ரோமேக்ஸ், ஹானர், நோக்கியா மற்றும் லெனாவோ இடையே போட்டி கடுமையாக உள்ளது. அதே நேரம் 2018ன் முதல்காலாண்டில் ஹானர் 146% , சியோமி 134% மற்றும் ஒன்ப்ளஸ் 112% என வேகமாக வளரும் ஸ்மார்ட்போன் பிராண்டாக இருக்கின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
India feature phone market doubled in Q1 2018 due to strong shipments of JioPhone; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X