ட்ரோன் பறக்கவிட புதிய சட்டம்.! மீறினால் விமானச் சட்டம் 1934 பிரிவின் படி தண்டனை.!
ஆளில்லா ட்ரோன் விமானங்களை இயக்குவதற்கு புதிய விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆளில்லா ட்ரோன் விமானங்களை இயக்குவதற்கு புதிய விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ட்ரோன் பயனர்கள் தங்கள் ட்ரோனைப் பதிவு செய்து, தேவையான அனுமதிகளைப் பெற்றபிறகு மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய மற்றும் பழைய ட்ரோன்களுக்கு தனித்துவமான அடையாள எண்(UIN) மற்றும் ஆளில்லா விமான ஆபரேட்டர் அனுமதிசான்று(UAOP) ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் அனுமதி எல்லை
ட்ரோன்கள் புகைப்படம் எடுத்தல், திருமண புகைப்பட பயன்பாட்டிற்கு மற்றும் பல ஆய்வு விஷயங்களில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுமென்று டி.ஜி.சி.ஏ. அதிகாரி கூறினார். இந்திய எல்லைகள் மற்றும் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள இடங்கள் மற்றும் கடற்கரைக்கு அருகே உள்ள இடங்கள் மற்றும் முக்கியமாக விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் எந்த ட்ரோன்கள் இயக்க அனுமதி கிடையாதென்று அதிகாரி தெளிவாக தெரிவித்துள்ளனர்.

பகல் நேரத்தில் மட்டும் ட்ரோன்
புதிய விதிமுறைப்படி ட்ரோன்கள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன்களை பார்வை வரம்பு எல்லைக்குள் மட்டுமே பறக்க விட வேண்டுமென்ற நிபந்தனையையும் விமான போக்குவரத்து அமைச்சகம் முன்வைத்துள்ளது. அதாவது ட்ரோன்கள் கண்டிப்பாக 450 மீட்டர் உயரத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"5" ட்ரோன் பிரிவுகள்
டி.ஜி.சி.ஏ "5" வெவ்வேறு பிரிவுகளாக ட்ரோன்களை பிரிந்திருக்கிறது.
i) நானோ: 250 கிராம் குறைவாக அல்லது சமமாக இருக்கும் ட்ரோன்கள்.
ii) மைக்ரோ: 250 கிராம் முதல் 2 கிலோ வரை இருக்கும் ட்ரோன்கள்.
iii) சிறியது: 2கிலோ முதல் 25கிலோ வரை இருக்கும் ட்ரோன்கள்.
iv) நடுத்தர: 25கிலோ முதல் 150கிலோ வரை இருக்கும் ட்ரோன்கள்.
v) பெரியது: 150கிலோக்கு அதிகமாக இருக்கும் ட்ரோன்கள்.

அடையாள எண் பெற வேண்டும்
இதில் 250 கிராம் முதல் 2 கிலோ வரையிலான நானோ மற்றும் மைக்ரோ ட்ரோன்கள் குழந்தைகள் விளையாட்டு பொம்மையாக பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் வரும் ட்ரோன்கள் பயன்படுத்த கண்டிப்பாக முறைப்படி பதிவு செய்து அடையாள எண் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் பைலட்கள்
இத்துடன் ட்ரோன் பைலட்கள் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி இருக்க வேண்டும் என்றும் இத்துடன் முக்கிய குறிப்பாக ட்ரோன் பைலட்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 1
டிசம்பர் 1 முதல் இந்த புதிய ட்ரோன் மற்றும் ட்ரோன் பைலட் விதிமுறைகள் அமலுக்கு வருவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளனர். ஐ.பி.சி மற்றும் விமானச் சட்டம் 1934 கீழ் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் இதை மீறுபவர்கள் மீது விதிமீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications