100 நாடுகளுக்கு இந்தியா தான் உதவிருக்கு- இந்தியாவை புகழ்ந்து பாராட்டிய பில்கேட்ஸ்: காரணம் என்ன தெரியுமா?

|

கோவிட்-19 இன் பாதிப்புகள் "வியத்தகு முறையில் குறைந்துள்ளன" என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் உலகம் மற்றொரு தொற்றுநோயைக் காணும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என எச்சரித்தார், மேலும் இதற்கு தடுப்பூசி உற்பத்தியாளர்களிடையே ஒத்துழைப்பு அவசியம் எனவும் குறிப்பிட்டார். தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவை பாராட்டி, உலகம் முழுவதும் மலிவு விலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கு நாட்டின் உற்பத்தியாளர்களின் முயற்சிகளை பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

இந்தியா அமெரிக்கா இடையே சுகாதார கூட்டாண்மை தொடர்பாக காணொலி

இந்தியா அமெரிக்கா இடையே சுகாதார கூட்டாண்மை தொடர்பாக காணொலி

இந்தியா அமெரிக்கா இடையே சுகாதார கூட்டாண்மை தொடர்பாக காணொலி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பில்கேட்ஸ், கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா 150 மில்லியன் டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு வழங்கியுள்ளது என குறிப்பிட்டார். இந்த தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை என்றாலும் நாங்கள் அடுத்த கட்ட சிந்தனையை நோக்கி செல்கிறோம், அது எதிர்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்களை தொற்றுநோய்களாக மாறுவதற்கு முன்பு தடுக்க தயாராக இருப்பது, அனைத்து தொற்று நோய்களையும் எதிர்த்து போராடுவதும் ஆகும் என பில்கேட்ஸ் குறிப்பிட்டார்.

விஞ்ஞான கண்டுபிடிப்பு மற்ரும் புதிய தயாரிப்புகள்

விஞ்ஞான கண்டுபிடிப்பு மற்ரும் புதிய தயாரிப்புகள்

விஞ்ஞான கண்டுபிடிப்பு மற்ரும் புதிய தயாரிப்புகளை உருவாக்கும் நோக்கில் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமைகளை தொடர்ந்து பயன்படுத்தி உலக சுகாதார முன்னேற்றத்தில் இந்தியாவின் உறுதிப்பாட்டை தீவிமாக்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உரையாடியதாக பில் கேட்ஸ் குறிப்பிட்டார். இந்தியா இரண்டு விஷயங்களில் தனித்து நிற்கின்றன, ஒன்று கேட்ஸ் அறக்கட்டளை உட்பட உலகளாவிய நட்பு நாடுகளுடன் இணைந்து தடுப்பூசிகளை உருவாக்குதல் மற்றும் அந்த தடுப்பூசிகள் விநியோகம் செய்வது ஆகும். இந்தியாவின் தடுப்பூசி விநியோகம் மிகவும் ஈர்க்கக்கூடியது ஆகும், அதைவிட சிறந்தது மிகவும் பணக்கார நாடுகளைவிட இந்தியா மிகவும் தனித்துவமாக இருக்கிறது என கேட்ஸ் குறிப்பிட்டார்.

அபாயங்கள் வியத்தக முறையில் குறைந்துள்ளன

அபாயங்கள் வியத்தக முறையில் குறைந்துள்ளன

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா, ரோடா வைரஸ் போன்றவைகளுக்கு தடுப்பூசிகள் செல்லப்பட்டதாகவும் இதற்கு இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்று எனவும் பில்கேட்ஸ் குறிப்பிட்டார். கோவிட்-19 தொற்று நோயின் அபாயங்கள் வியத்தக முறையில் குறைந்துள்ளன என பில்கேட்ஸ் குறிப்பிட்டார். உலகம் மற்றொரு தொற்றுநோயை காணும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என எச்சரித்தார், இதற்கு தடுப்பூசி உற்பத்தியாளர்களிடையே ஒத்துழைப்பு தேவை எனவும் இதுதான் வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் நெட்வொர்க்குகளை உற்சாகப்படுத்தும் என கூறினார். கோவிட்-19 கடைசி தொற்று நோயாக மாற்ற விரும்பினால், கூட்டு முயற்சிகளில் இப்போது முதலீடு செய்ய வேண்டும் என இதுதொடர்பான அனைவரும் புரிந்து கொள்கிறார்கள் என கேட்ஸ் குறிப்பிட்டார்.

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி

அதேபோல் முன்னதாக 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியாவின் சாதனை குறித்து மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். அதில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியை பகிர்ந்து தனது பாராட்டை தெரிவித்தார். அதில்., இந்தியா 1 பில்லியன் தடுப்பூசி மருந்துகளை வழங்கியுள்ளது எனவும் இது இந்தியாவின் கண்டுபிடிப்பு, உற்பத்தியாளர்களின் திறன் மற்றும் கோவின் மூலம் ஆதரிக்கப்படும் மில்லியன் கணக்கான சுகாதார ஊழியர்களின் முயற்சிகள் எனவும் தெரிவித்தார். அதோடு நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்தியாவில் டிஜிட்டல் தொடர்பான விஷயங்கள்

இந்தியாவில் டிஜிட்டல் தொடர்பான விஷயங்கள்

இந்தியாவில் டிஜிட்டல் தொடர்பான விஷயங்கள் துரிதமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன எனவும் சீனாவை தவிர டிஜிட்டல் துறையில் முன்னேற்றம் கண்டுள்ள அடுத்த நாடு இந்தியாதான் எனவும் முன்னதாக பில்கேட்ஸ் இதேபோல் இந்தியாவை பாராட்டி இருந்தார். இந்தியாவில் டிஜிட்டல் கட்டண முறை பெருமளவு அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

இந்தியாவில் விஷயங்கள் துரிதமாக முன்னேற்றம்

இந்தியாவில் விஷயங்கள் துரிதமாக முன்னேற்றம்

சிங்கப்பூர் ஃபிண்டெக் விழாவில் பங்கேற்ற பில்கேட்ஸ் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம், இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் கொள்கைகளை பாராட்டி கூறினார். அதோடு அனைத்து வங்கிகளுக்கும், ஸ்மார்ட்போன் செயலிக்கும் இடையே பணத்தை அனுப்புவது உட்பட பண பரிவர்த்தனை தளத்தை இந்தியா உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் திறம்பட்ட செயல்பாடானது பண விநியோகத்திற்கான செலவு மற்றும் பண தேக்கத்தை குறைக்கும் எனவும் இந்தியாவின் நிதி பரிமாற்றக் கொள்கைகள் மற்றும் அடையாளங்களாக இருக்கும் லட்சிய தளங்களை பில்கேட்ஸ் பாராட்டினார்.இந்தியாவில் விஷயங்கள் துரிதமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அந்த அமைப்புகளில் இருக்கும் நவீனத்துவம் தனித்துவமானது எனவும் சீனாவைத் தவிர அடுத்து ஒரு நாட்டை கூர்மையாக கவனிக்க வேண்டும் என்றால் அது இந்தியாவாகத் தான் இருக்கமுடியும் என தான் கூறுவதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
India Delivered Over 150 Million Doses to 100 Countries: Bill Gates Praised Indian Vaccine Manufacturers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X