இருளில் நடந்த சோதனை வெற்றி: அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் பிரித்வி II ஏவுகணை!

|

ஒடிசா கடற்கரை பகுதியில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் பிரித்வி ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணை

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணை

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனை இரவு நேரத்தில் இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா கடற்கரை பாலசூரில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்ச் (ஐ.டி.ஆர்) பகுதியில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கிய பிருத்வி குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இருளில் சோதனை செய்யப்பட்டது

இருளில் சோதனை செய்யப்பட்டது

அதநவீன ஏவுகணை ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சில் இருந்து இருளில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையான ஒரு வழக்கமான பயிற்சியாக கூறப்படுகிறது. பிருத்வி- II இன் கடைசி இரவு நேர சோதனை 2019 நவம்பர் 20 அன்று ஐ.டி.ஆரிலிருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம்

எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம்

இந்தியா தயாரித்துள்ள பிரித்வி 2 ஏவுகணையானது அனைத்து அளவுருக்களையும் பூர்த்தி செய்வதில் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியது. சோதனை குறித்து பார்க்கையில் ப்ரித்வி 2 ஏவுகணை பாதையை டிஆர்டிஓ ஒடிசா கடற்கரையில் இருந்தபடி ரேடார்கள், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம் மூலமாக கண்காணிக்கப்பட்டது என டிஆர்டிஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இயந்திரங்கள்

இரட்டை இயந்திரங்கள்

பிரித்வி 2-ன் உந்துவிசையானது இரட்டை இயந்திரங்களால் இயக்கப்படுகிறது. அதோடு டிஆர்டிஓ கடந்த ஒரு வாரத்திற்குள் மூன்றாவது சோதனையை நிறைவு செய்துள்ளது. இது டிஆர்டிஓ-வின் சாதனை என கூறப்படுகிறது.

ஆச்சரிய வீடியோ: ஸ்டைலா, கெத்தா சிகரெட் பிடிக்கும் நண்டு- புகையை உள்ளே இழுத்து விடும் அவலம்!

லேசர் வழிகாட்டு டாங்கி எதிர்ப்பு ஏவுகணை

லேசர் வழிகாட்டு டாங்கி எதிர்ப்பு ஏவுகணை

அதேபோல் கடந்த ஒரு வாரத்திற்குள் இந்தியா நடத்திய லேசர் வழிகாட்டு டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை ஆனது வெற்றி அடைந்துள்ளது. குறிப்பாக இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதால் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ கவச வாகனங்களை அழிக்கும்

ராணுவ கவச வாகனங்களை அழிக்கும்

இந்த ஏவுகணை லேசர் வழிகாட்ட சுமார் 4 கி.மீ தொலைவுக்கு சென்று எதிரியின் டாங்கியையும்,ராணுவ கவச வாகனங்களையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது ஆகும். அசத்தலான ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள மூன்றாம் தலைமுறை டாங்கியான அர்ஜூனில் பொருத்தி ஏவி சோதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்த முன்னேற்றங்களுக்கான பாதை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியிருந்தார். அதோடு டிஆர்டிஓ குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது எனவும் எதிர்காலத்தில் இறக்குமதி சார்பு நிலையை குறைக்கும் வகையில் உறுதியுடன் செயல்படுகிற ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் குழுவால் இந்தியா பெருமை கொள்கிறது என்றும் கூறினார்.

source: indiatimes.com

Pic Courtesy: Social Media

Most Read Articles
Best Mobiles in India

English summary
India Successfully Conducted Night Test Fires of Prithvi II

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X