தமிழர் கையில் கூகுள்..!!

By Meganathan

உலகம் தோன்றிய காலம் முதலே தமிழர்கள் பல சாதனைகளை புரிந்து வருவதோடு பல அரிய கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழர் பெருமையை உலகம் முழுவதிலும் கொண்டு சென்றிருக்கின்றார் சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை.

ஃபேஸ்புக், ஃபேஸ்புக், ஃபேஸ்புக், இதான் ஃபேஸ்புக்..!

உலகின் பிரபல தேடுபொறியாக இருக்கும் கூகுள் நிறுவனத்தில் மூத்த துணை தலைவர் பதவியில் இருந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார், இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

சென்னை

சென்னை

சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை ஐஐடி கராக்பூரில் தொழில்நுட்ப பிரிவில் இளநிலை பட்டத்தை பெற்றார்.

அறிவியல்

அறிவியல்

அறிவியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டத்தை சுந்தர் பிச்சை  ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக்கத்தில் பெற்றதோடு முதுகலை வணிக மேலாண்மை பட்டத்தை பென்சில்வேனியா பல்கலைக்கழக்கத்தில் பெற்றார்.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

முன்னதாக சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மற்றும் க்ரோம் பிரவுஸர் பிரிவுகளில் துணை தலைவர் பதவியை வகித்தார்.

ஆல்ஃபாபெட்
 

ஆல்ஃபாபெட்

43 வயதான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட அதே வேலையில் அந்நிறுவனத்தின் புதிய பிரிவாக ஆல்ஃபாபெட் துவங்கப்பட்டுள்ளது.

கூகுள்

கூகுள்

கூகுள் சர்ச் என்ஜின், ஆட்ஸ், மேப்ஸ், ஆப்ஸ், யூட்யூப் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களை சுந்தர் கவனித்து கொள்வார்.

ஆல்ஃபாபெட்

ஆல்ஃபாபெட்

ஆல்ஃபாபெட் பிரிவினை கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான லார்ரி பேஜ் கவனித்து கொள்கிறார்.

லார்ரி பேஜ்

லார்ரி பேஜ்

அதாதி திறமை கொண்ட ஒருவர் பிரிக்கப்பட்ட கூகுள் நிறுவனத்தை நிர்வகிப்பது மகிழ்ச்சியை தருவதோடு, எனது வேலைகளை குறைத்து எனது பணியினை மேலும் சிறப்பாக செய்ய உதவும் என்று லார்ரி பேஜ் ப்ளாஃக் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.

கடமை

கடமை

கூகுள் நிறுவனத்தில் 2004 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வரும் சுந்தர் தனது கடமை மற்றும் அர்ப்பனிப்பு மூலம் என்னை வெகுவாக கவர்ந்தார் என்றும் லார்ரி பேஜ் தெரிவித்திருக்கின்றார்.

உதவி

உதவி

எனக்கு கிடைக்கும் நேரத்தை சுந்தர் பிச்சையுடன் செலவிட்டு அதன் மூலம் நிறுவனத்திற்கு என்னால் முடிந்தவரை உதவியாக இருப்பேன் என்றும் லார்ரி குறிப்பிட்டிருக்கின்றார்.

பொறுப்பு

பொறுப்பு

இனி சுந்தர் பிச்சை கூகுள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உலகளாவிய தயாரிப்பு மேலாண்மை, பொறியியல், ஆய்வுகளை கவனித்து கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

க்ரோம்

க்ரோம்

2008 ஆம் ஆண்டு வெளியான க்ரோம் ப்ரவுஸர் உருவானதில் சுந்தர் பிச்சை முக்கிய பங்காற்றினார்.

பொறியாளர்

பொறியாளர்

கூகுள் நிறுவனத்தில் சேரும் முன் சுந்தர் பிச்சை பொறியாளராக மெக்கன்சி எனும் நிறுவனத்தில் பணியாற்றினார்.

பேஜ்

பேஜ்

மென்மையான குணம், லார்ரி பேஜ் உடன் அதிக நெருக்கம் கொண்டவராக சுந்தார் இருந்தார் என்று அமெரிக்க பத்திரிக்கைகளில் சுந்தர் பிச்சை 
குறிப்பிடப்பட்டுள்ளார்.

லார்ரி பேஜ்

லார்ரி பேஜ்

வரும் காலங்களில் கூகுள் நிறுவனத்தை சிறந்த இடத்திற்கு கொண்டு செல்ல சுந்தர் பிச்சை தான் சரியானவர் என்று லார்ரி பேஜ் குறிப்பிட்டிருக்கின்றார்.

புதுமை

புதுமை

கூகுள் நிறுவனம் புதிய கருவிகளை கண்டறியும் நிலையில் சுந்தர் பிச்சை இதே பாதையில் புதுமையை புகுத்துவார் என்றும் லார்ரி பேஜ் குறிப்பிட்டிருக்கின்றார்.

தகவல்

தகவல்

உலகமே வியக்க வைக்கும் வகையில் பல விஷயங்களை கண்டறிவதில் அதிக கவனம் செலுத்த சுந்தர் அதிக கவனம் எடுத்து கொள்வார் என்றும் லார்ரி பேஜ் குறிப்பிட்டிருக்கின்றார்.

 
Read more about:
English summary
Chennai born, IIT Kharagpur-educated Sundar Pichai became the CEO of the core business of Google.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X