எங்க கிட்டயே வா.. 14 App-களை வைத்து "நரி வேலை" பார்த்த பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. வச்சி செஞ்ச இந்திய அரசு!
"நீ யார்னு எனக்கு தெரியும்.. நான் யார்னு உனக்கு தெரியும்." என்பதை மீண்டும் நிரூபிக்கும்படி பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு (Pakistan terrorists) எதிரான ஒரு தரமான நடவடிக்கையை எடுத்துள்ளது நமது இந்திய அரசாங்கம் (Indian Government). அதென்ன நடவடிக்கை? பாகிஸ்தான் தீவிரவாதிகள் அப்படி என்ன செய்தார்கள்? இதோ விவரங்கள்:
ஜம்மு-காஷ்மீருக்கு (Jammu and Kashmir) தகவல்களை அனுப்புவதற்காக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் ஆப்களை (Mobile Apps) இந்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் எந்தெந்த ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்கிற பட்டியலும் (List of Blocked Apps) வெளியிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள 14 ஆப்களின் பட்டியல்: க்ரிப்வைசர் (Crypviser), எனிக்மா (Enigma), சேஃப்ஸ்விஸ் (Safeswiss), விக்கர்மி (Wickrme), மீடியாஃபையர் (Mediafire), ப்ரையர் (Briar), பிசாட் (BChat(, நந்பாக்ஸ் (Nandbox), கோனியன் (Conion), ஐஎம்ஓ (IMO), எலிமெண்ட் (Element), செக்கென்ட லைன் (Second line) ஸங்கி (Zangi) மற்றும் த்ரீமா (Threema).
கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின்படி, ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஓவர்கிரவுண்ட் வொர்க்கர்ஸ் (Overground workers) அதாவது பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு (Operatives) குறியிடப்பட்ட செய்திகளை (Coded messages) அனுப்ப பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மேற்குறிப்பிட்ட 14 மொபைல் ஆப்களை பயன்படுத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் மொபைல் அப்ளிகேஷன்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, குறிப்பிட்ட 14 ஆப்களும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் "தேவை இல்லாத" மொபைல் ஆப்கள் மீதான ஒடுக்குமுறை, முதல் முறையாக நடக்கும் ஒரு விஷயமல்ல. நினைவூட்டும் வண்ணம் ஏற்கனவே இந்திய அரசாங்கம் பல சீன ஆப்களை தடை செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், "இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு (India's Sovereignty and Integrity), இந்தியாவின் பாதுகாப்பு, மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு பாதகமானவை" என்று கூறி சுமார் 250 சீன ஆப்களுக்கு (Chinese Apps) இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், டிக்டாக் (TikTok), ஷேர்இட்(Shareit) வீசாட் (WeChat), ஹலோ (Helo), லைக்கீ (Likee), யுசி நியூஸ் (UC News), பிகோ லைவ் (Bigo Live) போன்ற சீன ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.
அந்த பட்டியலில் யுசி ப்ரவுஸர் (UC Browser), ஸேன்டர் (Xender), கேம்ஸ்கேனர் (Camscanner), பப்ஜி மொபைல் (PUBG Mobile) மற்றும் கரேனா ஃப்ரீ ஃபையர் (Garena Free Fire) போன்ற பிரபலமான மொபைல் கேம்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட சீன ஆப்களும் உள்ளன.
Source: இந்தியா டூடே


Click it and Unblock the Notifications








