இந்தியா அதிரடி : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது.!!

By Meganathan
|

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பரிவர்த்தனை 23.3 சதவீதமாக உயர்ந்து 2015 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 100 மில்லியன் கருவிகளை எட்டியிருக்கின்றது. இது அதற்கும் முந்தைய ஆண்டை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 81.1 மில்லியன் கருவிகளாக இருந்ததாக கவுன்டர்பாயின்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவை பின்தள்ளி உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தற்சமயம் இந்தியாவில் சுமார் 220 மில்லியன் ஸ்மாரட்போன் பயனர்கள் இருக்கின்றனர்.

உயர்வு

உயர்வு

இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது மொத்த ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைவாக இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மூத்த ஆய்வாளர் தருன் பதாக் தெரிவித்துள்ளார்.

4ஜி

4ஜி

4ஜி எல்டிஈ கருவிகளின் விற்பனை அதிகரிப்பதால் ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி அக்டோபர் முதல் டிசம்பர் 2015 ஆம் காலாண்டில் சுமார் 15 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

2015 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகரித்தது, எனினும் நவம்பர் மாத மத்தியில் ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி குறைந்ததாக கவுன்டர்பாயின்ட் ஆய்வாளர் பவல் நையா தெரிவித்தார்.

4ஜி

4ஜி

இதே காலக்கட்டத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்ட கருவிகளில் பாதி கருவிகள் எல்டிஈ அம்சம் கொண்டிருந்ததால் எல்டிஈ கருவிகளின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்திருப்பதாக நையா தெரிவித்துள்ளார்.

 வேகம்

வேகம்

இந்தியாவில் 3ஜி சேவை பயன்பாட்டின் உயர்வை ஒப்பீடு செய்யும் போது 4ஜி சேவை அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக கவுன்டர்பாயின்ட் ஆய்வில் எதிர்பார்க்கப்படுகின்றது.

சதவீதம்

சதவீதம்

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டதில் சுமார் 40 சதவீதம் மொபைல் போன்கள் ஸ்மார்ட்போன் கருவிகள் என்பதோடு இவைகளில் பாதி கருவிகள் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே அசம்பிள் செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிறுவனம்

நிறுவனம்

டிசம்பர் 2015 ஆண்டின் காலாண்டு வாக்கில் ஸ்மார்ட்போன் சந்தையில் 28.6 சதவீத பங்குகளுடன் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்திருந்தது. இதனை தொடர்ந்து 14.3% பங்குகளுடன் மைக்ரோமேக்ஸ், 11.4% பங்குகளுடன் லெனோவோ நிறுவனமும், 9.6% பங்குகளுடன் இன்டெக்ஸ் நிறுவனமும் 6.8% பங்குகளுடன் லாவா நிறுவனமும் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.

மொத்த சந்தை

மொத்த சந்தை

இதுவே ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போன்களை வைத்து பார்க்கும் போது மொத்த சந்தையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்திருக்கின்றது. இதனை தொடர்ந்து மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், லாவா மற்றும் லெனோவோ நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
India beats US to become second largest smartphone market Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X