மனிதர்களை 16 நிமிடத்தில் விண்ணுக்குச் செலுத்துவோம்.! இஸ்ரோ தலைவர் சிவன்.!

இந்தியாவின் முதல் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் செயற்கைக் கோள் இஸ்ரோ வெகு விரைவில் அறிமுகம் செய்யுமென்று தெரிவித்துள்ளது.

By Sharath
|

இந்தியாவின் முதல் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் செயற்கைக் கோள் இஸ்ரோ வெகு விரைவில் அறிமுகம் செய்யுமென்று தெரிவித்துள்ளது. இந்தச் செயற்கை கோளின் மூலம் மூன்று இந்திய விஞ்ஞானிகள் 16 நிமிடத்தில் விண்ணுக்குச் பாதுகாப்பாகச் செல்வார்கள் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மனிதர்களை 16 நிமிடத்தில் விண்ணுக்குச் செலுத்துவோம்.!இஸ்ரோ தலைவர் சிவன்

இந்தச் செயற்கை கோள் தயாரிக்க ரூ.10,000 கோடிக்கும் குறைவாக மட்டுமே செலவிடப்படும் என்று உறுதியாகச் சிவன் தெரிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியா மனிதரைத் தாங்கிச் செல்லும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த உள்ளது. இது அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஆன செலவை விட மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணுக்குச் செல்லும் விஞ்ஞானிகளைத் தேர்வு செய்யும் தேர்வை இஸ்ரோ விரைவில் துவங்குமென்று கூறினார். இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ள இஸ்ரோ தலைவர் கே.சிவன், "ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்திய விஞ்ஞானிகளுடன் செல்லும் விண்கலம் 16 நிமிடத்தில் பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் உள்ள புவி தாழ் வட்டப் பாதையில் அவர்களைப் பாதுகாப்பாக இறக்கிவிட்டு, 36 நிமிடத்தில் அரபிக்கடலில் தரையிறங்கும்" எனத் சிவன் தெரிவித்தார்.

இதற்கான துவக்க பணிகள் வரும் 2022ஆம் ஆண்டு தொடங்கி, 40 மாதங்களுக்குள் முடியும் என நம்பிக்கையாகச் சிவன் தெரிவித்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
India to be Fourth Nation to Launch a Manned Space Flight After Russia, US and China : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X