Home
News

சீனாக்காரன் வாலை ஓட்ட நறுக்கிய இந்தியா.. போலி பவர்பேங்க் பேட்டரி விற்பனை.. 2 நிறுவனங்களுக்கு ஆப்பு.. யார் அது?

இந்தியா (India) எப்படி ஸ்மார்ட்போன் (smartphone) விற்பனைக்கான முக்கியமான சந்தையாக பார்க்கப்படுகிறதோ, அதேபோல தான், ஸ்மார்ட்போன் ஆக்சஸரீஸ் (smartphone accessories) மற்றும் எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் (electronic gadgets) சந்தைக்கும் முக்கிய இடமாக திகழ்கிறது. இதனால் தான், பல நாடுகளின் இருந்து பல புதிய தயாரிப்புகள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பவர்பேங்க் (powerbank) சாதனங்கள் மீது ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பவர் பேங்க் (power bank) சாதனங்களில் பல சாதனங்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியானவை என்று கூறும் பொழுது, இந்தியாவில் மலிவு விலையில் வாங்கப்படும் ஒரு 10,000mAh திறன் கொண்ட பவர்பேங்க் (10,000mAh powerbank) சாதனம் உண்மையில் 10,000mAh திறனை வழங்காமல், வெறும் 4000mAh அல்லது அதிகபட்சமாக வெறும் 5000mAh திறனை மட்டுமே வழங்கும் விதத்தில் உருவாக்கப்ட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாக்காரன் வாலை ஓட்ட நறுக்கிய இந்தியா.. போலி பவர்பேங்க் விற்பனை..

சீனாக்காரன் வாலை ஓட்ட நறுக்கிய இந்தியா.. போலி பவர்பேங்க் பேட்டரி விற்பனை:

மோசமான தரத்தில் பவர் பேங்க் பேட்டரிகளை இந்தியாவில் விற்பனை செய்த நிறுவனங்கள் எது என்று ஆராய்ந்த பொழுது, 3 சீன நிறுவனங்கள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளன. இதில் இரண்டு சீன பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களின் (china battery manufacturing companies) பேட்டரி திறன்களை சோதனை செய்து பார்த்ததில், அவற்றின் 10,000mAh பேட்டரிகள் வெறும் 50% முதல் 60% வரை மட்டுமே சார்ஜ்ஜை (charge) ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்டவையாக இருந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனங்கள் சீன சப்ளையர்களிடமிருந்து குறைந்த விலையில் இந்த தரம் குறைந்த பேட்டரிகளை வாங்குகின்றன. இது மலிவான பொருட்களை விற்கவும் சந்தையில் நியாயமற்ற முறையில் போட்டியிடவும் அனுமதிக்கிறது. இது ஆரோக்கியமான போட்டியை பாதிப்பது மட்டுமல்லாமல், இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துகிறது. இந்த மாத தொடக்கத்தில், இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) இரண்டு சீன பேட்டரி சப்ளையர்களை முடக்கம் செய்துள்ளது.

எந்த இரண்டு சீன நிறுவனங்கள் மீது இந்தியா நடவடிக்கை?

இதில் Guangdong Cvasun New Energy Technology மற்றும் Ganzhou Novel Battery Technology ஆகிய இரண்டு நிறுவனங்களின் லைசன்ஸை ரத்து செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரி செல்களில் தரத்தை குறைந்து இந்தியாவிற்குள் விற்பனை செய்துள்ளன. மூன்றாவது நிறுவனமான Ganzhou TaoYuan New Energy, தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சப்ளையர்கள் மீதான ஒடுக்குமுறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட சீரற்ற சோதனைகளைத் தொடர்ந்து, பெரும்பாலான பவர்பேங்க்கள் அவற்றின் விளம்பரப்படுத்தப்பட்ட திறன்களை பூர்த்தி செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த சீன நிறுவனங்கள் BIS தரசான்றுதலை பெரும் பொழுது, சரியான கொள்ளளவு கொண்ட பேட்டரிகளை சோதனைக்கு வழங்கியுள்ளதும், சோதனைக்கு பிறகு இந்த சீன நிறுவனங்கள் தரம் குறைந்த பவர்பேங்க் பேட்டரிகளை (bad quality powerbank device) விற்பனைக்கு இறக்குமதி செய்துள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் இப்போது தரமான பவர் பேங்க் சாதனங்கள் ரூ.1000 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தரம் குறைந்த பேட்டரி திறன் கொண்ட பவர்பேங்க் சாதனங்கள் பெரும்பாலும் ரூ. 300 விலை புள்ளி முதல் ரூ. 600 விலைக்குள் விற்பனை செய்யப்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இனி புதிதாக பவர்பேங்க் வாங்கினால், சிறந்த பிராண்டை தேர்வு செய்வது சிறந்த முடிவாக பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Government bans two Chinese powerbank companies with supplying fake batteries in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X