ஏசி இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு- உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை!

|

ஏசி இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரெப்ரிஜிரிரன்ட்ஸ் எனப்படும் குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்வதற்கு முழுமையான தடையை மத்திய அரசு விதித்துள்ளது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைப்பதற்கும் அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான விதிமுறைகளை இந்தியா கடுமையாக்கி வருகிறது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த மாதம் மோட்டார் சைக்கிள், கார் மற்றும் லாரியில் பயன்படுத்தப்படும் நியூமேட்டிக் டயர்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.

குளிரூட்டிகளுடன் கூடிய ஏசிகளுக்கு தடை

குளிரூட்டிகளுடன் கூடிய ஏசிகளுக்கு தடை

உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக குளிரூட்டிகளுடன் கூடிய ஏசிகளுக்கு தடை விதித்தது அறிவிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டை சந்தையை பொருத்தவரையில் 36 ஆயிரம் கோடி முதல் 42 ஆயிரம் கோடிவரை ஏசிகள் விற்பனையாகின்றன. இந்த ஏசிகளில் பெரும்பான்மையானவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏசிகளே.

இறக்குமதி கொள்கையில் மாற்றம்

இறக்குமதி கொள்கையில் மாற்றம்

இதை மையமாக வைத்தே ஏசி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பை மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிஜிஎஃப்டி(வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம்) வெளியிட்டுள்ளது.

"எம்மா வீட்டை சுத்தப்படுத்து"- உத்தரவு எஜமான்: அட்டகாச ரோபோட் க்ளீனர் அறிமுகம்!

469 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்பிலிட் ஏசிகள் இறக்குமதி

469 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்பிலிட் ஏசிகள் இறக்குமதி

இந்தியாவின் 2019-20 ஆம் நிதியாண்டில் 469 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்பிலிட் ஏசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 241 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்பிலிட் ஏசிகள் சீனாவில் இருந்தும் 189 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்ப்லிட் ஏசிகளும் தாய்லாந்தில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவை.

35 மில்லியன் டாலர் மதிப்புள்ள விண்டோ ஏசிகள்

35 மில்லியன் டாலர் மதிப்புள்ள விண்டோ ஏசிகள்

விண்டோ ஏசி(ஜன்னலில் பொருத்தப்படும் ஏசி) பொருத்தமட்டில் அதே நிதியாண்டில் 35 மில்லியன் டாலர் மதிப்புள்ள விண்டோ ஏசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதிலும் சீனாவில் இருந்து சுமார் 18 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏசிகளும், தாய்லாந்தில் இருந்து 14 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏசிகளும் அடங்கும்.

உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்

உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்

இந்தியாவின் இந்த அறிவிப்பின்மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் எனவும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பலனடைவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சீனா தாய்லாந்து ஆகிய இரு நாட்டு உற்பத்தி நிறுவனங்களும் கடுமையான சிக்கலை சந்திக்கும் என கூறப்படுகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
India Bans Import of Air Conditioners to Increase Domestic Production

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X