54 ஆப்ஸ்களுக்கு இந்தியாவில் ஆப்பு- கரீனா ஃப்ரீ ஃபயர், ஆப் லாக், பியூட்டி கேமரா உள்ளிட்ட செயலிகளுக்கு தடை!
தடைசெய்யப்பட்ட பயன்பாடுகளின் பட்டியலில் உள்ள செயலிகள் குறித்து பார்க்கையில், அவை ஸ்வீட் செல்ஃபி எச்டி, பியூட்டி கேமரா - செல்பி கேமரா, கரீனா ஃப்ரீ பையர்- இலுமினேட், விவா வீடியோ எடிட்டர், டென்சன்ட் எக்ஸ்ரிவர், ஒன்மைஓஜி அரீனா, ஆப்லாக் மற்றும் டூயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்டவை அடங்கும். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

54 செயலிகளுக்கு தடை
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இந்த 54 பயன்பாடுகளும் பல்வேறு முக்கியமான அனுமதிகளை பெறுகின்றன எனவும் முக்கியமான பயனர் தரவைச் சேகரிக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் நிகழ்நேர டேட்டா தவறாக பயன்படுத்தப்பட்டு, விரோத நாட்டில் அமைந்திருக்கும் சர்வர்களுக்கு அனுப்பப்படுவதாகவும் அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கடந்த மே 2020-ல் இருந்து 321 செயலிகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தடைசெய்யப்பட்ட 54 செயலிகளின் பட்டியல்
தடைசெய்யப்பட்ட 54 செயலிகளின் பட்டியல் குறித்து பார்க்கையில், அவை
1. Badlanders
2. APUS Security HD (Pad Version)
3. Astracraft
4. AppLock
5. Barcode Scanner - QR Code Scan
6. RealU: Go Live, Make Friends
7. Beauty Camera: Sweet Selfie HD
8. Beauty Camera - Selfie Camera
9. Rise of Kingdoms: Lost Crusade
10. SmallWorld-Enjoy groupchat and video chat
11. Stick Fight: The Game Mobile
12. Tencent Xriver
13. Twilight Pioneers
14. Conquer Online - MMORPG Game
15. Conquer Online
16.CamCard for SalesForce Ent
17. CuteU Pro
18. Extraordinary Ones
19. Garena Free Fire - IlluminateF
20. FancyU pro - Instant Meetup through Video chat!
21. FunChat Meet People Around You
22.ancyU - Video Chat & Meetup
23. Isoland 2: Ashes of Time Lite
24. Lica Cam - selfie camera app
25. Live Weather & Radar - Alerts

பட்டியலில் எம்பி3 கட்டர், டூயல ஸ்பேஸ் லைட்
26. MoonChat: Enjoy Video Chats
27. DualSpace Lite - 32Bit Support
28. Equalizer - Bass Booster & Volume EQ & Virtualizer
29. Equalizer & Bass Booster - Music Volume EQ
30. Equalizer Pro - Volume 31. Booster & Bass Booster
EVE Echoes
32. MP3 Cutter - Ringtone Maker & Audio Cutter
33. Music Plus - MP3 Player
34. Nice video baidu
35. Music Player - Music, MP3 Player
36.Music Player - Equalizer & MP3
37. Music Player - MP3 Player
38. Notes - Color Notepad, Notebook
39. Onmyoji Arena
40. Onmyoji Chess
41. Parallel Space Lite 32 Support
42. RealU Lite -video to live!
43. CuteU: Match With The World
44. Dual Space - 32Bit Support
45. Dual Space Pro - 32Bit Support
46. Dual Space Lite - Multiple Accounts & Clone App
47.Dual Space - 64Bit Support
48. Dual Space Pro - Multiple Accounts & App Cloner
49. UU Game Booster-network solution for high ping
50. Video Player Media All Format
51. Viva Video Editor - Snack Video Maker with Music
52.Voice Recorder & Voice Changer
53 Volume Booster - Loud Speaker & Sound Booster
54. Wink: Connect Now

கிழக்கு லடாக் எல்லையில் மோதல்
கடந்த மே 15 2020 அன்று இந்தியா மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் வெடித்தது. பாங்காங் ஏரி பகுதிகளில் வன்முறை மோதலைத் தொடர்ந்து இரு தரப்பில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் சம்பவ இடத்தில் விரைந்து தங்களை வரிசைப்படுத்தினர். இந்த ஆண்டு ஜூன்15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த கடுமையான மோதலுக்கு பிறகு இந்த பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சீன செயலிகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தல்
உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியான அறிவிப்பில், தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT குறிப்பிட்ட சீன செயலிகளை நீக்க வேண்டும் என்றும் சில செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கையை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா சீனா பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த செயலிகள் மூலம் பின்வாசல் வழியாக சீனா இந்தியாவுக்குள்ளான தகவல் தொடர்பை துண்டிக்க முயலும் எனவும் கூறப்பட்டு வந்தது.
File Images


Click it and Unblock the Notifications