இந்தியாவுக்கு எதிராக செய்திகள் பரப்பினால் இது தான் முடிவு.. இந்திய அரசாங்கம் அதிரடி.. 35 சேனல்கள் முடக்கம்..

|

இந்தியாவுக்கு எதிராகத் தவறான செய்திகளைப் பரப்பும் 35 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. டிஜிட்டல் மீடியா மூலம் இந்தியாவுக்கு எதிரான போலிச் செய்திகளைப் பரப்புவதாகக் கூறி இந்தக் கணக்குகள் இப்போது அதிரடியாகத் தடை செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சார்ந்த 35 செய்தி சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்கத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சகத்தால் முடக்கப்பட்ட யூடியூப் கணக்குகளில் மொத்தம் 1 கோடியே 20 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி செய்திகளை பரப்பும் சேனல்கள் மீது இந்திய அரசு அதிரடி நடவடிக்கை

போலி செய்திகளை பரப்பும் சேனல்கள் மீது இந்திய அரசு அதிரடி நடவடிக்கை

குறிப்பாக இந்த தடை செய்யப்பட்ட சேனல்களில் உள்ள வீடியோக்களில் பெரும்பாலான வீடியோக்கள் சுமார் 130 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவுக்கு எதிரான தவறான தகவல்களை இணையத்தில் பரப்பியதற்காக இரண்டு ட்விட்டர் கணக்குகளையும் இரண்டு இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் அரசாங்கம் முடக்கியுள்ளதாகத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகள் பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது.

இந்தியாவை மோசமாகச் சித்தரிக்கும் முயற்சியா?

இந்தியாவை மோசமாகச் சித்தரிக்கும் முயற்சியா?

தேசவிரோதமாக இருப்பதுடன், உலக நாடுகளின் பார்வையில் இந்தியாவை மோசமாகச் சித்தரிக்கும் முயற்சியின் விளைவுதான் இது என்றும், இதனால், இந்தியாவுக்கு எதிராகப் பிற நாடுகளில் இருந்து போலிச் செய்திகள் பரப்பப்படுவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த சமூக ஊடக கணக்குகள் மற்றும் இணையதளங்களை இந்தியப் புலனாய்வு அமைப்புகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இதுபோன்ற கண்காணிப்பு குறித்து அமைச்சகம் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.

உங்கள் ஸ்மார்ட்போனை ஏன் கேஸ் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இது ரிஸ்க்கா இல்ல சாமர்த்தியமா?உங்கள் ஸ்மார்ட்போனை ஏன் கேஸ் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இது ரிஸ்க்கா இல்ல சாமர்த்தியமா?

35 யூடியூப் கணக்குகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவையா?

35 யூடியூப் கணக்குகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவையா?

தடை செய்யப்பட்ட கணக்குகளின் முக்கிய நோக்கம் தவறான தகவல்களை ஒருங்கிணைத்துப் பரப்புவதாகும். இந்த கணக்குகள் தவறான தகவல்களுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட 35 யூடியூப் கணக்குகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவை என்றும், தவறான தகவல்களின் நான்கு முனை நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. இதில் 14 யூடியூப் சேனல்களை இயக்கும் அப்னி துனியா நெட்வொர்க் மற்றும் 13 யூடியூப் சேனல்களை இயக்கும் தல்ஹா பிலிம்ஸ் நெட்வொர்க் ஆகியவை அடங்கும்.

பாகிஸ்தான் தொகுப்பாளர்களால் இந்தியாவில் பரவும் போலி செய்திகள்

பாகிஸ்தான் தொகுப்பாளர்களால் இந்தியாவில் பரவும் போலி செய்திகள்

நான்கு சேனல்களின் ஒரு செட் மற்றும் மற்ற இரண்டு சேனல்களில் ஒரு செட் ஒன்றுடன் ஒன்று ஒத்திசைந்து செயல்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேனல்கள் பொதுவான ஹேஷ்டேக்குகள் மற்றும் எடிட்டிங் ஸ்டைல்களைப் பயன்படுத்தியது மற்றும் அதே நபர்களால் இயக்கப்பட்டது என்று அரசாங்க உளவுத்துறை நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த வலைத்தளங்கள் தங்கள் சொந்த உள்ளடக்கத்தைக் குறுக்கு விளம்பரப்படுத்துகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. சில யூடியூப் சேனல்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி சேனல்களின் தொகுப்பாளர்களால் நடத்தப்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆதார் ஆணையம் அதிரடி: ஆதார் அட்டையை PVC நகல் எடுப்பது செல்லாது.. ஆதார் PVC கார்டை இப்படி தான் ஆர்டர் செய்யணுமா?ஆதார் ஆணையம் அதிரடி: ஆதார் அட்டையை PVC நகல் எடுப்பது செல்லாது.. ஆதார் PVC கார்டை இப்படி தான் ஆர்டர் செய்யணுமா?

படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மரணம் பற்றி போலி தகவலா?

படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மரணம் பற்றி போலி தகவலா?

இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் பிற நாடுகளுடனான இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள் போன்ற விவகாரங்களில் தவறான தகவல்களைப் பரப்பும் சேனல்கள் இப்போது தடை செய்யப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் மரணம் தொடர்பான பல போலிச் செய்திக் கணக்குகளையும் அரசாங்கம் கண்டுபிடித்துள்ளது. யூடியூப் சேனல்கள் ஐந்து இந்திய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஜனநாயக செயல்முறையைக் குழிபறிக்கும் உள்ளடக்கத்தை வெளியிடத் தொடங்கியுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

அரசாங்கம் எல்லோரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறது

அரசாங்கம் எல்லோரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறது

2021 டிசம்பரில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021 இன் கீழ் அவசரக்கால அதிகாரங்களைப் பயன்படுத்தி 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முதன்முறையாக முடக்கியது. இதையடுத்து யூடியூப் சேனல் தடை செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் 35 சேனல்களுக்கு தடை விதித்ததன் மூலம் இந்தியாவுக்கு எதிரான போலிச் செய்திகளைப் பரப்பிய யூடியூப் சேனல்களுக்கு அரசாங்கம் பதிலடி கொடுத்துள்ளது என்பது பாராட்டிற்குரியது. இது போன்ற பிற போலி செய்திகளைப் பரப்பும் யூடியூப் சேனல்கள், டிவிட்டர் கைப்பிடிகள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் ஆணையம் அதிரடி: ஆதார் அட்டையை PVC நகல் எடுப்பது செல்லாது.. ஆதார் PVC கார்டை இப்படி தான் ஆர்டர் செய்யணுமா?ஆதார் ஆணையம் அதிரடி: ஆதார் அட்டையை PVC நகல் எடுப்பது செல்லாது.. ஆதார் PVC கார்டை இப்படி தான் ஆர்டர் செய்யணுமா?

இந்திய அரசாங்கத்திற்கு துணையாக இருக்கும் UIDAI அறிவித்த அதிரடி செய்தி

இந்திய அரசாங்கத்திற்கு துணையாக இருக்கும் UIDAI அறிவித்த அதிரடி செய்தி

இதேபோல் இந்திய அரசாங்கத்திற்கு துணையாக இருக்கும் UIDAI சமீபத்தில் அதிரடியாக போலி PVC ஆதார் அட்டைகள் செல்லாது மற்றும் இது பாதுகாப்பானது இல்லை என்று அறிவித்துள்ளது.இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திறந்த சந்தையில் இருந்து PVC ஆதார் அட்டைகளை நகல் எடுத்துப் பயன்படுத்துவதை நிறுத்தும் படி கடுமையாகக் கண்டித்துள்ளது. UIDAI தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில் இந்த தகவலைக் கூறியுள்ளது. மூன்றாம் நபரிடம் இருந்து நகல் எடுப்பது எந்த பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை என்பதால், இந்த முறையை பொது மக்கள் பின்தொடர்வதை UIDAI கடுமையாக நிறுத்தக்கோரி வலியுறுத்தியுள்ளது. இந்த அதிரடி உத்தரவு பற்றியும், புதிய PVC ஆதார் ஆடைகளை ஆன்லைனில் எப்படி ஆர்டர் செய்வது எனபது பற்றியும் அறிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயன்பெறுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
India Banned 35 Youtube Channels And 2 Social Media Accounts Spreading Anti India Fake News : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X