Home
News

மீண்டும் இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல்: பாகிஸ்தான் தீவிரவாதிகள் 300 பேர் சாம்பல்.!

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம் அடியோடு குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் இந்தியா 300 தீவிரவாதிகள் சாம்பல் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய துணை ராணுவத்தின் மீது கடந்த 14ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி கார் வெடி குண்டுடன் மோதி தாக்குதல் நடத்தினார். இதில், 44 வீரர்கள் பலியாகினர். மேலும், 20 பேர் காயமடைந்தனர்.

மீண்டும் இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல்: பாகிஸ்தான் தீவிரவாதிகள்  300 பே

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. உலக நாடுகள் கடும் கண்டம் தெரிவித்தன. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம் அடியோடு குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் இந்தியா 300 தீவிரவாதிகள் சாம்பல் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

புல்வாமா தாக்குதல்:

புல்வாமா தாக்குதல்:

கடந்த 14ம் தேதி இந்திய துணை ராணுவம் (சிஆர்பிஎப்) வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில், புல்வாமா பகுதியில் வீரர்கள் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரம்பி காரை மோத விட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

40 வீரர்கள் பலி:

40 வீரர்கள் பலி:

இந்த தாக்குதல் சம்பவத்தால் 40 வீரர்கள் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பு ஏற்றது. இது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாகும். பாகிஸ்தான் தொடர்ச்சியாக தீவரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றது.

உலக நாடுகள் கண்டனம்:

உலக நாடுகள் கண்டனம்:

இந்தியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலும் தனது முழு ஆதரவை வழங்கின. தன்னை காத்துக் கொள்ளவும் எல்லை கடந்து தாக்குதல் நடத்தவும் இந்தியாவுக்கு அதிகாரம் உள்ளது என்று இஸ்ரேல் கூறியது. இதைத்தொடர்ந்து, இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறியது.

 போர் பதற்றம்:

போர் பதற்றம்:

இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தானுக்கும் போர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா எல்லையில் 100 கம்பெனி போலீசார் குவிக்கப்பட்டனர். எந்த நேரத்திலுகம் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று பாகிஸ்தான் அஞ்சியது. மேலும், இந்தியாவிடம் பல்வேறு அணு ஆயுதங்கள் இருப்பதால் பலமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதிகாலையில் தாக்குதல்:

மிராஜ் 2000 விமானம் மூலம் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மொத்தம் 12 விமானங்கள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சர்ஜிக்கல் தாக்குதல் முறையில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் அதிகாலையில் 3.30 மணிக்கு நடத்தப்பட்டது.

சுமார் 1000 கிலோ வெடிபொருள்:

சுமார் 1000 கிலோ வெடிபொருள்:

சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 200 பேர்- 300 பேர் இறப்பு:

200 பேர்- 300 பேர் இறப்பு:

திட்டமிட்டபடி இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுமார் 300 பேர் வரை பலியாகியுள்ளனர் என்று இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மறுப்பு:

பாகிஸ்தான் மறுப்பு:

இந்தியா நடத்திய தாக்குதலை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இதில் யாரும் பலியாகவில்லை என்றும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

 பாகிஸ்தான் குற்றச்சாட்டு :

பாகிஸ்தான் குற்றச்சாட்டு :

இந்தியா எல்லையை மீறி வந்து தங்கள் நாட்டிற்குள் வந்து தாக்குதல் நடத்தியுள்ளது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

Best Mobiles in India

English summary
india attack pakistan iaf claims 200 300 causalities pakistan side : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X