உலகத்தையே இந்தியாவால் தான் காப்பாற்ற முடியும்: பில்கேட்ஸ் நம்பிக்கை!

|

இந்தியாவில் பல பிரதான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன எனவும் இந்திய மருந்தியல் துறை இந்தியாவுக்கு மட்டுமின்றி மொத்த உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியும் என தான் எதிர்பார்ப்பதாக மைக்ரோசாப்ட் இணை இயக்குனர் பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 1,39,30,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 591,865 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ஆறுதல் தரும் செய்தியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 8,265,570 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 5,072,720 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 10 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையானது 25,602 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் 6.35 லட்சத்திற்கும் அதிகமானோர் அல்லது 63.34 சதவீதம் பேர் வரை குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழடி உறைகிணறு கூறும் உண்மை இதுதானா? தமிழருக்கும் சுமேரிய நாகரிகத்திற்கும் தொடர்பா?கீழடி உறைகிணறு கூறும் உண்மை இதுதானா? தமிழருக்கும் சுமேரிய நாகரிகத்திற்கும் தொடர்பா?

முழு ஊரடங்கு அமல்

முழு ஊரடங்கு அமல்

இதில் கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இதனால் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி, சீனாவின் சினோவேக்ஸ், இந்தியாவின் கோவாக்சின் உள்ளிட்ட முக்கியமான தடுப்பு மருந்து சோதனைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மனிதர்கள் மீதான சோதனை கட்டமானது தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ்

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ்

இந்த நிலையில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் வீடியோ கான்பரன்ஷ் மூலம் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அதில் இந்தியாவில் பல பிரதான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன எனவும் இந்திய மருந்தியல் துறையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான உதவிகள் சிறப்பாக செய்து வருகின்றன எனவும் கூறினார்.

உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியும்

உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியும்

இந்தியா மருந்தியல் துறைக்கு பல்வேறு திறமைகள் உள்ளன. இந்திய மருந்தியல் துறை இந்தியாவுக்கு மட்டுமின்றி மொத்த உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியும் என தான் எதிர்பார்ப்பதாக பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா பல்வேறு நோய்க்கு மருந்துகள் கண்டுபிடித்துள்ளன எனவும் பில்கேட்ஸ் தெரிவித்தார்.

ஜியோ அறிமுகம் செய்த ஸ்மார்ட் கண்ணாடி.! என்னென்ன சிறப்பம்சங்கள்!ஜியோ அறிமுகம் செய்த ஸ்மார்ட் கண்ணாடி.! என்னென்ன சிறப்பம்சங்கள்!

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை முயற்சி முடிந்ததும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: firstpost.com

Best Mobiles in India

English summary
India able to produce COVID-19 vaccines for entire world says Microsoft co-founder Bill Gates

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X