Home
News

4G தெரியும்.. 5G தெரியும்.. இந்தியாவில் எப்போ 1G அறிமுகம் ஆச்சுன்னு தெரியுமா? 6G எப்போ வரும்னு தெரியுமா?

100எம்பி, 500எம்பி மொபைல் டேட்டாவை (100MB, 500MB Mobile Data) வைத்து கொண்டு ஒரு மாதம் முழுவதுமான இண்டர்நெட் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு வந்த பெரும்பாலான இந்தியர்களில் நீங்களும் ஒருவராக இருக்க அதிக வாய்ப்புண்டு. ஏனென்றால் 2016ல் தான் நமக்கு 4ஜி கிடைத்தது!

2016ல் தான் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸானது, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி (Reliance Jio 4G) சேவையை அறிமுகம் செய்தது. அதுநாள் வரையிலாக மெகாபைட்ஸ் (Megabytes) அளவில் மொபைல் டேட்டாவை பயன்படுத்திய இந்திய மக்கள் ஜிகாபைட்ஸில் (Gigabytes) டேட்டாவை பயன்படுத்த தொடங்கின; அதுவும் முற்றிலும் இலவசமாக!

இந்தியாவில் எப்போ 1G அறிமுகம் ஆச்சுன்னு தெரியுமா?

ஜியோ 4ஜி அறிமுகமானது இந்திய டெலிகாம் சந்தையில் (Indian Telecom Market) எவ்வளவு பெரிய புரட்சியை உண்டாக்கியது என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. அதேபோல கடந்த சில மாதங்களில், 5ஜி சேவைகளானது (5G Service) காட்டுத்தீ போல இந்தியா முழுவதும் பரவி விட்டதை பற்றியும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம்.

ஆனால் இதெற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது எதுவென்று உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது 1ஜி (1G) என்று சுருக்கமாக அழைக்கப்படும் முதல் தலைமுறை மொபைல் நெட்வொர்க் (1st Generation Mobile Network) ஆனது எப்போது இந்தியாவில் அறிமுகமானது என்று உங்களுக்கு தெரியுமா?

1980களில் தான் இந்தியா அதன் ஆரம்ப கால செல்லுலார் டெக்னாலஜி ஜெனரேஷனை (Inaugural Cellular Technology generation) அனுபவித்தது. இது கனெக்டிவிட்டியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டு வந்ததோடு மட்டுமில்லாமல் இந்தியர்கள் மத்தியில் இண்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) பற்றிய புரிதலையும் கொண்டு வந்தது. இருப்பினும் இந்த முதல் தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பத்தின் முதன்மை நோக்கமானது அனலாக் வாய்ஸ் கம்யூனிகேஷனை (Analogue Voice Communication) செயல்படுத்துவதிலேயே இருந்தது.

அடுத்த சகாப்தம் 1990-களில் தொடங்கியது. அப்போது தான் 2ஜி (2G) தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வந்தது. இதன் கீழ் தான் மொபைல் டேட்டா சேவைகள், எஸ்எம்எஸ் மெசேஜ் (SMS Message) மற்றும் டிஜிட்டல் வாய்ஸ் கம்யூனிகேஷன் (Digital Voice Communication) போன்றவைகள் அறிமுகமாகின. இதை தொடேன்ற்து 2000-களின் முற்பகுதியில் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பமான 3ஜி (3G) அறிமுகமாகியது.

அந்த நேரத்தில் 3ஜி சேவையானது இண்டர்நெட் தேவைகளுக்கான மிகப்பெரிய மற்றும் மிக வேகமான பாய்ச்சலாக இருந்தது. 2012 ஆம் ஆண்டு வாக்கில் தான் நான்காவது தலைமுறை தொழில்நுட்பமான 4ஜி பற்றிய பேச்சுக்கள் பொது மக்கள் மத்தியில் அடிபட தொடங்கின. பின்னர் 2016ல் ஜியோவின் வருகை அரங்கேறியது!

இலவச டேட்டா, இலவச அழைப்புகள், இலவச எஸ்எம்எஸ் மற்றும் பிற இலவச சேவைகளை வழங்குவதன் மூலம் ஜியோ 4ஜி ஆனது ஒரு புரட்சிகரமான உத்தியுடன் இந்திய டெலிகாம் சந்தையில் நுழைந்தது. வெறும் இரண்டு ஆண்டுகளில், இந்நிறுவனம் 200 மில்லியன் சந்தாதாரர்களை பெற்றது. அதுமட்டுமல்ல ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளானது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்தது.

இப்படியாக இந்தியா 5ஜிக்கு முன்னேறியது. கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை நெட்வொர்க் ஆன 5ஜி சேவைகள் அதிகாரபூர்வமாக அறிமுகமாகின. இது 4ஜி-ஐ விட மிகவும் வேகமான டேட்டா பரிமாற்ற வேகத்தை வழங்குவதோடு நில்லாமல் விர்ச்சுவல் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி (Virtual and Augmented Reality) இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) போன்ற அதிநவீன பயன்பாடுகளின் வளர்ச்சிக்கும் வித்திடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அடுத்தது ஆறாம் தலைமுறை நெட்வொர்க் ஆன 6ஜி (6G) தான்! இது 5ஜி-ஐ விட 100 மடங்கு வேகமானதாகவும் முறையானதாகவும் இருக்கும். இந்தியாவிடம் 6ஜி தொழில்நுட்பம் தொடர்பான 200 காப்புரிமைகள் (Patents) உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2030 ஆம் ஆண்டிற்குள் 6ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தும் திட்டங்களை இந்திய அரசு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Independence Day 2023 Special 1G to 6G How Indian Telecom Industry Grows Gradually But Powerfully
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X