என்ன ஆனாலும்.. இந்த 5 Mobile Offer-ஐ மட்டும் வுட்றாதீங்க.. Amazon சுதந்திர தின விற்பனை ஆரம்பம்!
ஒவ்வொரு ஆண்டும் மிகவும் எதிர்பார்க்கப்படும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் ஆனது ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கியது. வழக்கம் போல முதல் நாள் விற்பனை ஆனது அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாடிக்கையாளர்களுக்கான விற்பனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த ஆண்டுகளை போலவே இம்முறையும் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் 2023-யின் கீழ் பிரம்மாண்டமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் நீங்கள் தவறவிடக்கூடாத 5 மொபைல் ஆஃபர்கள் இதோ:

01. சாம்சங் கேலக்ஸி எம்13 (Samsung Galaxy M13): கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.9,649 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். கூடுதலாக இந்த போனின் மீது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கிடைக்கும்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், 6000 எம்ஏஎச் பேட்டரி, 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட், 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.
02. ஒப்போ எஃப்23 5ஜி (Oppo F23 5G): அமேசானின் இந்த விற்பனையின் போது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.22,499 க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.24,999 ஆகும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 6.72-இன்ச் ஃபுல்எச்டி+ டிஸ்பிளே, 67W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது.
03. ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3): நினைவூட்டும் வண்ணம், இது கடந்த ஜூலை 2023 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அமேசானின் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் 2023-யின் கீழ் இது ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.33,999 ஆகும். அதாவது நீங்கல் ரூ.1000 சலுகையை பெறுவீர்கள்.
இதன் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட், 6.74-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே, 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.
04. ரியல்மி நார்சோ 60 ப்ரோ (Realme Narzo 60 Pro): இந்த ஆண்டு நடக்கும் அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவலில் விற்பனைக்கு வரும் மற்றொரு முக்கியமான ஸ்மார்ட்போன் ரியல்மி நார்சோ 60 ப்ரோ ஆகும். இது ரூ.23,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும்; நினைவூட்டும் வண்ணம் இது ஜூலை 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட், சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000எம்ஏஎச் பேட்டரி, 6.7 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, 100 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2எம்பி என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.
05. சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 5 5ஜி (Samsung Galaxy Z Fold 5 5G): மிகவும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சாம்சங் போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.1,55,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.1,64,999 ஆகும்.


Click it and Unblock the Notifications








