Indane கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் பிரச்சனையா? மாற்று ஏற்பாடுகள் அறிவிப்பு.!

|

கடந்த இரண்டு நாட்களாக இண்டேன் சிலிண்டர்களை ஆன்லைனில் புக் செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இண்டேன் சிலிண்டர்களை புக் செய்யும் இதர வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சமையல் எரிவாயு சிலிண்டர்

சமையல் எரிவாயு சிலிண்டர்

தற்போது நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது. குறிப்பாக முந்தைய காலங்களைப் போல்இல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உடனுக்குடன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..உலக ஹேக்கிங் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம்? நம்பமுடியாத அளவு சைபர் குற்றங்கள் பதிவு..

ஆன்லைன்

ஆன்லைன்

அதாவது எஸ்எம்எஸ், ஆன்லைன், வாட்ஸ்அப் போன்றவற்றின் முலம் முன்பதிவு செய்வதும், ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது என பல சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இணையதளத்தில் இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்யமுடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..Android vs iPhone: ஆண்ட்ராய்டை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா? காரணம் தெரிஞ்சு ஐபோன் வாங்குங்க..

சந்தீப் சர்மா

சந்தீப் சர்மா

எனவே இதை தொடர்ந்து இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் இது தொடர்பாக விளக்கம் ஒன்று கொடுத்துள்ளது. அதாவது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி சந்தீப் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீட்டு உபயோகத்திற்குப் பயன்படும் இண்டேன் கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் கடந்த இரண்டு நாட்களாக பிரச்சனை இருந்தது.

வியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமாவியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமா

ஐபிஎஸ் மற்றும் ஆரக்கிள்

ஐபிஎஸ் மற்றும் ஆரக்கிள்

தற்போது தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய ஐபிஎஸ் மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கம்மி விலையில் புதிய போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.! என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?கம்மி விலையில் புதிய போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.! என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

சிலிண்டர்பதிவு செய்ய வழிமுறைகள்

சிலிண்டர்பதிவு செய்ய வழிமுறைகள்

அதேபோல் பயனர்கள் வழக்கம்போல் தங்களது கேஸ் சிலிண்டர்பதிவு செய்ய கீழே உள்ள வழிமுறைகள் பின்பற்றலாம்

1.எஸ்எம்எஸ் அல்லது ஐவிஆர்எஸ் எண் 77189 55555

2.மிஸ்டுகால் 84549 55555 அல்லது வாட்ஸ்அப் மூலம் 75888 88824

3.விநியோகஸ்தர்களை நேரிடையாகவோ அல்லது கேஷ் பில்லில் இருக்கும் தொலைபேசி எண் வாயிலாகநுகர்வோர்கள் தொடர்பு கொண்டு மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குழப்பம் வேண்டாம் நாங்க இருக்கோம்: குழப்பம் வேண்டாம் நாங்க இருக்கோம்: "டாப் அம்சம்"., தொழில் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான சிறந்த லேப்டாப்கள்!

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன்

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன்

மேலும் இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

டைமன்சிட்டி 700 சிப் ஆதரவோடு அறிமுகமான ரியல்மி வி20 5ஜி- பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்: ஆனா ஒரு டுவிஸ்ட்!டைமன்சிட்டி 700 சிப் ஆதரவோடு அறிமுகமான ரியல்மி வி20 5ஜி- பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்: ஆனா ஒரு டுவிஸ்ட்!

ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ்

ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ்

அதேபோல் ஆரம்பகட்டத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்வது என்பது நீண்ட மற்றும் சலிப்பான செயலாக இருந்தது. அதாவது எல்பிஜி டீலரை நேரில் பார்ப்பது புக் செய்வது தான் ஒரே வழியாக இருந்தது. ஆனால் தற்போது ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் மிக எளிமையான முறையில் முன்பதிவு செய்ய முடிகிறது.

இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!

புதிய தொழில்நுட்பங்கள்

அதேபோல் தற்போது சிலிண்டர்களை பெற ஆன்லைன் மூலம் பணம் செலுத்தமுடிகிறது. பின்பு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டவுடன், நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் கூட வருகிறது. குறிப்பாக புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு பல்வேறு வகையில் மிகவும் உதவியாக இருக்கிறது என்றுதான்கூறவேண்டும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Indane LPG booking and delivery system down: Alternative arrangements announced: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X