இனிமே தான் இண்டேன் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா.. இந்த விஷயம் தெரியாம பண்ணிடாதீங்க!
நீங்கள் இண்டேன் கேஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றால்.. இந்த மே மாதத்திற்கான சிலிண்டரை இனிமேல் தான் புக் செய்ய போகிறீர்கள் என்றால், அதற்கு முன் நீங்கள் மூன்று விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒன்று - மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள எல்பிஜி விலை உயர்வு விவரங்கள்; இரண்டு - இருப்பதிலேயே மிகவும் எளிமையான கேஸ் புக்கிங் செயல்முறை; மூன்று - எங்கெல்லாம் அடுத்த புக்கிங் செய்ய 45 நாள் இடைவெளி ரூல்ஸ்?
மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள எல்பிஜி விலை உயர்வு விவரங்கள்: குழப்பமூட்டும் வகையில், இந்தியன் ஆயில் நிறுவனம் 19 கிலோ எல்பிஜி விலையை மே 2026 முதல் ரூ.993 முதல் ரூ.1,147 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்பிஜி விலை வரலாற்றில் முதல் முறையாக விலை நிர்ணயம் ஆனது ரூ.3,000-ஐ தாண்டியுள்ளது.

கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களில், எல்பிஜி விலை முறையே ரூ.3,300 மற்றும் ரூ.3,200-ஐயும் தாண்டியுள்ளது. கொல்கத்தாவில் மே 1 முதல் அமலுக்கு வரும் வகையில் ரூ.1,147 உயர்வு ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் ஒரு சிலிண்டரின் விலை ரூ.3,355 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம், சென்னையில் 19 கிலோ எல்பிஜி விலை ரூ.1,013 உயர்த்தப்பட்டு ரூ.3,259.5 ஆகவும், மும்பையில் ரூ.1,015.5 உயர்த்தப்பட்டு ரூ.3,046.5 ஆகவும் உள்ளது. இதற்கிடையில், டெல்லியில் இந்த எல்பிஜி சிலிண்டர் விலை ஒரு சிலிண்டருக்கு ரூ.3,071.5 ஆக உள்ளது, இது ஏப்ரல் 2026-ஐ விட ரூ.993 அதிகமாகும்.
நல்ல செய்தி என்னவென்றால் மே 2026-க்கான 14.2 கிலோ எல்பிஜி விலையில் மாற்றமில்லை. 14.2 கிலோ வீட்டு உபயோக வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. தற்போது, 14.2 கிலோ எல்பிஜி விலை டெல்லியில் ஒரு சிலிண்டருக்கு ரூ.913 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.939 ஆகவும், மும்பையில் ரூ.912.5 ஆகவும், சென்னையில் ரூ.928.5 ஆகவும் தொடர்கிறது.
இருப்பதிலேயே மிகவும் எளிமையான கேஸ் புக்கிங் செயல்முறை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆனது அதன் இன்டேன் வாடிக்கையாளர்களுக்கான மிகவும் எளிமையான ஒரு புக்கிங் செயல்முறையை கொண்டுள்ளது. அது - வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்யும் வசதி ஆகும்
இந்த செயல்முறை சில வழக்கமான புக்கிங் சிரமங்களை நீக்குகிறது - முன்பதிவு எண்களை நினைவில் வைத்திருக்கவோ தேவையில்லை, ஐவிஆர் கால்களுக்காக காத்திருக்க தேவையில்லை, டீலரை நேரில் சந்திக்க தேவையில்லை. முக்கியமாக விநியோகஸ்தரின் வேலை நேரத்திற்கு வெளியேயும் கூட, உடனடி உறுதிப்படுத்தலுடன் எந்த நேரத்திலும் முன்பதிவு செய்யலாம் - உங்கள் மொபைல் போனில் இருந்து ஒரு எளிய மெசேஜ் அனுப்பினால் போதும், உங்கள் ரீஃபில் செயல்முறை முடிந்துவிடும்.
மேலும் இந்த அமைப்பு, எந்த ஆப் பதிவிறக்கங்களும், லாக்-இன்களும், சிக்கலான வழிமுறைகளும் இல்லாமல், எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடிப்படையான இண்டர்நெட் கனெக்ஷன் இருந்தாலே போதும். அதிகபட்ச பயன்பாட்டு நேரங்களில் அடிக்கடி நெரிசலுக்கு உள்ளாகும் போன் கால் அடிப்படையிலான அமைப்புகளை விட இது மிகவும் நம்பகமானதும் கூட!
வாட்ஸ்அப் வழியாக உங்கள் இன்டேன் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்வது எப்படி? உங்கள் மொபைல் எண் ஏற்கனவே உங்கள் எல்பிஜி இணைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தால், இந்த செயல்முறை இன்னும் எளிமையானது மற்றும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் முடிந்துவிடும்:
- அதிகாரப்பூர்வ இன்டேன் வாட்ஸ்அப் எண் 7588888824-ஐ உங்கள் போனில் ''சேவ்'' (Save) செய்யவும்
- வாட்ஸ்அப்பை திறந்து இந்த எண்ணுடன் ஒரு உரையாடலை தொடங்கவும்.
- "ரீஃபில்" (REFILL) என ஆங்கிலத்தில் டைப் செய்து அனுப்பவும்.
- இந்த அமைப்பு உங்கள் பதிவு செய்யப்பட்ட விவரங்களை தானாகவே சரிபார்க்கும்.
- சரிபார்க்கப்பட்டவுடன், உங்கள் ரீஃபில் கோரிக்கை உடனடியாக பதிவு செய்யப்படும்.
- பின்னர் முன்பதிவு விவரங்களுடன் கூடிய உறுதிப்படுத்தல் மெசேஜை பெறுவீர்கள்.
எங்கெல்லாம் அடுத்த புக்கிங் செய்ய 45 நாள் இடைவெளி ரூல்ஸ்? மார்ச் மாதத்தின் ஆரம்ப நாட்களில் அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்த பிறகு, எல்பிஜி விநியோக பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்று, எல்பிஜி சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதற்கு ஒரு லாக்-பீரியட்டை (Lock-Period) அறிமுகப்படுத்தியது.
அதன்படி, அரசு எல்பிஜி கொள்முதலுக்கான 21 நாள் லாக்-பீரியட்டை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. தற்போது, நகர்ப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி லாக்-பீரியட் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு லாக்-பீரியட் ஆனது 45 நாட்களாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications