நம்பமுடியாத அரிய வகை 'பேபி டிராகன்கள்'.! இரகசிய குகையிலிருந்து இனி மக்களின் பார்வைக்காக.!

|

டிராகன்கள் அழிந்துவிட்டது, கிராபிக்ஸில் மட்டும் தான் டிராகன்களை பார்க்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் திகைப்பூட்டக் கூடிய நம்பமுடியாத காட்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. டிராகன்களின் சந்ததி இன்னும் அழியவில்லை என்று கூறி, மூன்று பேபி டிராகன்களை ஸ்லோவேனிய குகையில் மக்களின் காட்சிக்கு வைத்துள்ளனர். உண்மையில் இவை டிராகன் குட்டிகள் தானா? விரிவாகப் பார்க்கலாம்.

 100 வருடங்களுக்கு மேல் வாழக்கூடிய அரிய உயிரினம்

100 வருடங்களுக்கு மேல் வாழக்கூடிய அரிய உயிரினம்

டிராகன் என்று சொன்னதும் பலரின் மனதில் ஒரு ராட்சச உருவம் வானத்தில் பார்ப்பது போலவும், வாயிலிருந்து நெருப்பைக் கக்கும் காட்சி எல்லாம் வந்துபோய் இருக்கும், ஆனால், இது அப்படிப் பறந்து நெருப்பைக் கக்கும் டிராகன் வகையைச் சேர்ந்தது இல்லை. ஓல்ம் (Olm) அல்லது ப்ரோடியஸ் அங்குன்னஸ் (Proteus anguinus) என்று அழைக்கப்படும் இந்த உயிரினம் முற்றிலுமாக நீருக்கு அடியில் 100 வருடங்களுக்கு மேல் வாழக்கூடிய ஒரு அரிய வகை உயிரினமாகும்.

உணவு இல்லாமல் கூட உயிர் வாழும் பேபி டிராகன்

உணவு இல்லாமல் கூட உயிர் வாழும் பேபி டிராகன்

டிராகன் தலையுடன் பக்கவாட்டில் கொம்புகள் போலச் செதில்களுடன் நீண்ட நெளிந்த பாம்பு போன்ற உடல் அமைப்புடன், முன்னாள் இரண்டு கால்களும் மற்றும் பின்னால் இரண்டு கால்களும் என்று பார்ப்பதற்கு அப்படியே டிராகன் போலவே காட்சியளிக்கிறது இந்த பேபி டிராகன்கள். குகைகளில் நீருக்கு அடியில் இருட்டில் தான் பெரும்பாலும் இந்த ஓல்ம் உயிர்வாழ்கிறது. இந்த உயிரினத்தால் பல தசாப்தங்களுக்கு உணவு இல்லாமல் கூட உயிர் வாழ முடியுமாம்.

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்

டிராகன்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

டிராகன்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

டிராகன் தோற்றத்தில் உள்ள இந்த பேபி டிராகன்களுக்கும், டிராகன்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? உண்மையில் இவை எந்த வகை உயிரினத்தைச் சார்ந்தது என்ற பல சந்தேகம் இதன் தோற்றத்தைப் பார்த்ததும் உங்கள் மனதில் எழுந்திருக்கும்.

மிகவும் அரிதாக காணப்படும் புரோட்டிடே

மிகவும் அரிதாக காணப்படும் புரோட்டிடே

புரோட்டிடே (Proteidae) என்று அழைக்கப்படும், இந்த காலகட்டத்தைச் சேர்ந்த சாலமாண்டார் குடும்பத்தைச் சேர்ந்தது உயிரினம் தான் இந்த பேபி டிராகன்கள். இவை பெரும்பாலும் மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவின் கார்ட் மற்றும் தெற்கு ஸ்லோவேனியா பகுதியில் மட்டுமே மிகவும் அரிதாக காணப்படுகிறது.

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பேபி டிராகன்கள்

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பேபி டிராகன்கள்

ஸ்லோவேனிய குகையில் தற்பொழுது இந்த மூன்று "பேபி டிராகன்கள்" காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவை கடந்த 2016 ஆம் ஆண்டில் ஒரு அரிய வெற்றிகரமான இனப்பெருக்கத்திற்குப் பின்பு குஞ்சு பொரித்துள்ளது என்று இதன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த பேபி டிராகன்களை நேரில் காண ஒரு நாளைக்கு வெறும் 30 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைத்துக் கூட பார்க்க முடியாத விலை: Nokia 5310 ஜூன் 16 அறிமுகம்!நினைத்துக் கூட பார்க்க முடியாத விலை: Nokia 5310 ஜூன் 16 அறிமுகம்!

ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம்

ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம்

இந்த ஓல்ம் உயிரினத்தில் பெண் ஓல்ம்கள், ஆண் ஓல்ம்களை விட அளவில் பெரியதாக இருக்கிறது. 100 ஆண்டுகள் வரை வாழக்கூடிய மற்றும் ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறை மட்டுமே இனப்பெருக்கம் செய்யக்கூடிய இந்த பழங்கால உயிரினம், கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றிகரமாக இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு ஒட்டுமொத்தமாக 60 முட்டைகளை ஈன்றுள்ளது. அதில் வெற்றிகரமாக 21 ஓல்ம் குஞ்சுகள் பிறந்துள்ளன, அதில் ஆரோக்கியமான 3 பேபி டிராகன்களை தற்பொழுது காட்சிக்கு வைத்துள்ளனர்.

டிராகனின் சந்ததி என்று புகழ்பெற்ற ஓல்ம்

டிராகனின் சந்ததி என்று புகழ்பெற்ற ஓல்ம்

''உலகப் புகழ்பெற்ற 'டிராகனின் சந்ததி' என்ற 21 பேபி ஓல்ம்களில் மூன்றை 2016 ஆம் ஆண்டு முதல் நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்'' என்று போஸ்டோஜ்னா குகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 20 முதல் 35 சென்டிமீட்டர் நீளத்தில் வளரக்கூடிய இந்த உயிரினத்தில், சில ஓல்ம்கள் 40 சென்டிமீட்டர் வரையிலும் கூட வளர்கிறதாம்.

Vu அல்ட்ரா 4K டிவி ஆன்லைனில் அறிமுகம்! 43' இன்ச் டிவி இவ்வளவு தான் விலையா?Vu அல்ட்ரா 4K டிவி ஆன்லைனில் அறிமுகம்! 43' இன்ச் டிவி இவ்வளவு தான் விலையா?

இரகசிய குகையில் வைத்து பாதுகாப்பு

இரகசிய குகையில் வைத்து பாதுகாப்பு

இவற்றின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கும், உயிரினங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிப்பதற்கும், குகை அதிகாரிகள், இரகசிய குகை ஆய்வகத்தில் பார்வையாளர்களிடமிருந்து இவற்றைத் தனியாகப் பாதுகாத்து வருகின்றனர். இப்பொதுவரை, இத்தனை ஆண்டுகளாக மக்களின் பார்வைக்கு இன்றி, இவை "மிகச் சிறந்த மற்றும் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்பட்ட இரகசிய கூடாரத்தில்" வைக்கப்பட்டிருந்தது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

மனித மீன்

மனித மீன்

சில நேரங்களில் இவற்றை "மனித மீன்" என்றும் அழைக்கின்றனர், இதற்குக் காரணம் இதன் உடலின் தோல் பிங்க் நிறத்தில் உட்புற உறுப்புகளைக் வெளிப்படையாக காட்டுகிறது. இவற்றின் கண்களுக்கு மேல் தோள்கள் மூடப்பட்டுள்ளது, இதற்குப் பார்வை சக்தி கிடையாது, இது ஒரு பார்வையற்ற குருட்டு விலங்கு என்று தெரிவித்துள்ளனர்.

மோப்ப சக்தி மற்றும் உணர் திறன் சக்தி

மோப்ப சக்தி மற்றும் உணர் திறன் சக்தி

அதற்கு பதிலாக, மோப்ப சக்தி மற்றும் உணர் திறன் சக்தி இவற்றிற்கு அதிகம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். சிறிய மூச்சு துவாரம் மற்றும் சிறிய பற்கள் இவற்றிற்கு உள்ளது. இந்த அறிய உயிரினம் முதல் முதலில் 1689 ஆம் ஆண்டில் உள்ளூர் இயற்கை ஆர்வலர் வால்வாசர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இ-பாஸ் இல்லாமல் பயணம்., சொன்னா கேட்கனும்., ஒரு நபரால் ஒரு பகுதியே லாக்: என்ன நடந்தது தெரியுமா?இ-பாஸ் இல்லாமல் பயணம்., சொன்னா கேட்கனும்., ஒரு நபரால் ஒரு பகுதியே லாக்: என்ன நடந்தது தெரியுமா?

டிராகனின் சந்ததியினர் நீர் டிராகன்

டிராகனின் சந்ததியினர் நீர் டிராகன்

வால்வாசர் எழுதிய 'குளோரி ஆஃப் டச்சி ஆஃப் கார்னியோலா' என்ற பதிப்பில் இதைப் பற்றிய தகவல்கள் 1689 ஆம் ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடும் மழைக்குப் பிறகு, நிலத்தடி நீரிலிருந்து ஓல்ம்கள் மேற்பரப்பிற்கு அடித்துவரப்பட்டுள்ளது என்றும், உள்ளூர் மக்களால் இவை, குகை டிராகனின் சந்ததியினர் என்று நம்பப்பட்டு 'நீர் டிராகன்' என்ற பெயரையும் பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Incredibly Rare 'Baby Dragons' Have Just Gone On Display In Slovenia Cave : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X