Home
News

சியோமி எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு நம்பமுடியாத சலுகைகள் அறிவிப்பு.! முழு விவரம்.!

சியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு நம்பமுடியாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் 14 ஹாரிசன் எடிஷன் எனும் மாடல் இணையத்தில் அதிகம் விற்பனையான அல்ட்ரா-ஸ்லிம் ஐ7 விண்டோஸ் லேப்டாப் என்ற பெருமையை பெற்றுள்ளது.

சியோமி எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு நம்பமுடியாத சலுகைகள் அறிவிப்பு.!

எனவே இந்த எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை கொண்டாடும் வகையில் சியோமி நிறுவனம் தனது எம்ஐ நோட்புக் இ லேர்னிங் எடிஷன், எம்ஐ நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன், எம்ஐ நோச்புக் 14 ஐசி சீரிஸ் போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக இந்த லேப்டாப் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு சலுகை வரும் 15-ம் தேதி வரை இருக்கும் என்றும் சியோமி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே இப்போது சலுகை விலையில் கிடைக்கும் இந்த லேப்டாப் மாடல்களை பார்ப்போம்.

சியோமி எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு நம்பமுடியாத சலுகைகள் அறிவிப்பு.!

சலுகை விலையில் கிடைக்கும் எம்ஐ நோட்புக் மாடல்கள்
எம்ஐ நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன்(i5/8G/512G/MX350 ) விலை ரூ.49,999-ஆக உள்ளது.
எம்ஐ நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன் (i7/8G/512G/MX350) விலை ரூ.54,999-ஆக உள்ளது.
எம்ஐ நோட்புக் இ லெர்னிங் எடிஷன் (i3/8G/256G/UHD/Camera) விலை ரூ.35,999-ஆக உள்ளது.
எம்ஐ நோட்புக் 14 ஐசி (i5/8G/256G/UHD/Camera) விலை ரூ.40,999-ஆக உள்ளது.
எம்ஐ நோட்புக் 14 ஐசி (i5/8G/512G/UHD/Camera) விலை ரூ.43,999-ஆக உள்ளது.
எம்ஐ நோட்புக் 14 ஐசி (i5/8G/512G/MX250/Camera) விலை ரூ.47,999-ஆக உள்ளது.

மேலும் இப்போது சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.

சியோமி எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு நம்பமுடியாத சலுகைகள் அறிவிப்பு.!

சியோமி எம்ஐ நோட்புக் 14 மாடலை அறிமுகப்படுத்தியதன் மூலம் 2019 ஆம் ஆண்டில் இந்திய மடிக்கணினி சந்தையில் சியோமி நுழைந்தது. இந்த மடிக்கணினி விலைக்கேற்ற அம்சம் என்றாலும் இதில் வெப்கேம் இல்லை என்பது முக்கிய குறைபாடாக இருந்தது. இந்த சிக்கலை தீர்க்க சியோமி யூஎஸ்பி வெப்கேமை இலவசமாக வழங்கியது. இந்த நிலையில் இதை முழுமையாக போக்க சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு நம்பமுடியாத சலுகைகள் அறிவிப்பு.!

சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி இன்டெல் யுஎச்டி கிராபிக்ஸ் 10-வது ஜெனரேஷன் இன்டெல் கோர் 5-10210 யு குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 512 ஜிபி
இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஹை-எண்ட் வேரியண்ட் என கிடைக்கிறது.

எம்ஐ நோட்புக் 14 ஐசி லேப்டாப் 14 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே முழு எச்டி (1920 x 1080p) தெளிவுத்திறனை கொண்டுள்ளது. இதன் காட்சிக்கு மேல் ஒரு வெப்கேம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் வழக்கமான மடிக்கணினிகளை போலவே இது 720பி எச்டி வெப்கேமை கொண்டுள்ளது. இது வீடியோ கான்பரன்சிங் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தாராளமானது.

சியோமி எம்ஐ நோட்புக் மாடல்களுக்கு நம்பமுடியாத சலுகைகள் அறிவிப்பு.!

எம்ஐ நோட்புக் 14 ஐசி லேப்டாப் இரண்டு யூஎஸ்பி-ஏ 3.1 ஜெனரேஷன் 1 போர்ட்கள், எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய ஆதரவுகளை கொண்டுள்ளது. எம்ஐ நோட்புக் 14 போல் விசைப்பலகை நோட்புக் 14 ஐசி வழங்கப்படவில்லை. இந்த லேப்டாப்பில் யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்படவில்லை. எம்ஐ நோட்புக் 14 ஐசி இணைப்பு ஆதரவுகளாக ப்ளூடூத் 5.0, இரட்டை வைஃபை ஆதரவுகள் உள்ளது. இரட்டை 2 வாட்ஸ் ஸ்பீக்கர்களும் வழங்கப்படுகின்றன. இந்த லேப்டாப்பில் 3660 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. 10 மணிநேர பேட்டரி ஆயுள் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Incredible Offers Announcement for Xiaomi Mi Notebook Models: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X