Home
News

31 ஆம் தேதி கெடு.. ரூ.5,000 செலுத்த வேண்டி வரும்.. ITR Filing செஞ்ச மட்டும் போதாது.. இ-வெரிஃபை இருக்கு!

வருமான வரி தாக்கல் செய்யும் காலம் நெருங்கும்போது, கடைசித் தேதி குறித்த குழப்பம் வரி செலுத்துவோர் மத்தியில் எழுவது இயல்பு. இந்த ஆண்டு வருமான வரித் தாக்கல் (ITR Filing) காலக்கெடுவில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, அனைவருக்குமே ஜூலை 31 தான் கடைசித் தேதி என்று பொதுப்படையாக சொல்லிவிட முடியாது.

உங்கள் வருமான வகையைப் பொறுத்து காலக்கெடு மாறுபடுகிறது. ஊதியம் பெறும் தனிநபர்கள் (Salaried Individuals) மற்றும் ஐடிஆர்-1 (ITR-1) அல்லது ஐடிஆர்-2 (ITR-2) படிவங்களை நிரப்பும் முதலீட்டாளர்கள், வரித் தணிக்கை (Tax Audit) தேவையில்லாதவர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

31 ஆம் தேதி கெடு.. ரூ.5,000 செலுத்த வேண்டி வரும்.. ITR Filing போதாது!

தொழில் அல்லது வணிகம் மூலம் வருமானம் ஈட்டி, தணிக்கை தேவையில்லாத பிரிவில் வருபவர்கள் (ஐடிஆர்-3 அல்லது ஐடிஆர்-4 படிவங்கள்) இந்த தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மாற்றமாக இருக்கிறது. வரித் தணிக்கை (Tax Audit) கட்டாயமாக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இந்த தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

சர்வதேச பரிவர்த்தனைகள் அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொண்டு, ட்ரான்ஸ்பர் பிரைசிங் (Transfer Pricing) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியவர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வரி தாக்கல் செய்யத் தவறினால் அபராதங்கள் விதிக்கப்படும். தாமதக் கட்டணம் (Late Filing Fee) விதிக்கப்படலாம்.

ஆகவே, பிரிவு 234எப் (Section 234F) இன் கீழ், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அதேசமயம், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருப்பவர்களுக்கு அபராதம் ரூ.1,000 ஆக மட்டுமே இருக்கும். வரி பாக்கி வைத்திருப்பவர்கள், காலக்கெடு முடிந்த நாளிலிருந்து ஒவ்வொரு மாதமும் 1 சதவீத வட்டி (பிரிவு 234ஏ) செலுத்த வேண்டியிருக்கும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யாவிட்டால், வணிக நஷ்டம் அல்லது மூலதன ஆதாய நஷ்டத்தை (Capital Loss) அடுத்தடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு சென்று (Carry Forward) சரிசெய்யும் வாய்ப்பை இழக்க நேரிடும். டிசம்பர் 31ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு வரையில் அபராதத்துடன் தாமதமான வருமான வரி தாக்கல் (Belated Return) செய்யும் வசதி இருக்கிறது.

இருப்பினும், கடைசி நிமிடம் வரை தள்ளிப்போடாமல் முன்கூட்டியே தாக்கல் செய்வது அபராதங்களைத் தவிர்க்க உதவும். வருமான வரி தாக்கல் செய்தால் மட்டுமே போதாது. இ-வெரிஃபிகேஷன் (e-Verification) கட்டாயமாக செய்யப்பட வேண்டும். இ-வெரிஃபை (e-Verify) செய்ய பான் (PAN) மற்றும் ஆதார் (Aadhaar) விவரங்களை பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால், வருமான வரி இணையதளத்தில் ஆதார் ஓடிபி (Aadhaar OTP) வெரிபிகேஷன் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும், மின்னணு சரிபார்ப்பு குறியீடு (EVC) வழியாக செய்ய முடியும். பேங்க் அக்கவுண்ச் (Bank Account), டிமேட் அக்கவுண்ட் (Demat Account) அல்லது ஏடிஎம் (ATM) மூலமாகவும் மின்னணு சரிபார்ப்பு குறியீட்டை (Electronic Verification Code - EVC) உருவாக்கி இ-வெரிஃபிகேஷன் செய்யலாம்.

நெட் பேங்கிங் வழியாகவும் நேரடியாக இ-வெரிஃபை செய்யும் வசதி கிடைக்கிறது. இதை பேங்குகள் கொடுக்கின்றன. ஆகவே, நெட் பேங்கிங் லாகின் செய்து, டாக்ஸ் ஃபில்லிங் (Tax Filing) அல்லது இ-வெரிஃபிகேஷன் விருபத்துக்கு சென்று, இ-வெரிஃபிகேஷனை செய்து முடிக்கலாம். ஆகவே, ஆன்லைனில் இதை உடனடியாக செய்து கொள்ள முடியும்.

இதை செய்த பிறகு மீண்டும் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். இ-பைல் (e-File) விருப்பத்துக்கு செல்லவும். பிறகு வருமான வரித் தாக்கல் (Income Tax Returns) விருப்பத்துக்கு சென்று இ-வெரிஃபை தாக்கல் (e-Verify Return) என்பதை கிளிக் செய்யவும். இதில் தேவையான விவரங்களை கொடுத்தால், இ-வெரிஃபை செய்யப்பட்டதா இல்லையா என்பதை பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Income Tax Return Filing 2026 July 31 Deadline Explained for All Taxpayers And How To E-Verify
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X