Home
News

Google Pay, PhonePe, Paytm யூஸ் பண்றீங்களா? வருமான வரிக்கு உடனே இதை பண்ணிடுங்க.. இல்லனா, அங்க இங்க அலையனும்!

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytme) இருந்தால் வரிமான வரித்துறையின் முன்பண வரி, சுய மதிப்பீட்டு வரி மற்றும் பிற நேரடி வரிகளை செலுத்தி கொள்ளலாம். ஈ-ஃபில்லிங் போர்ட்டலில் வருமான வரித்தாக்கல் செய்வதால், சில சலுகைகளை வரி செலுத்துபவர் பெற்று கொள்ளலாம்.

ஆன்லைனில் வரித்தாக்கல் செய்வது வருமான வரி ஈ-ஃபில்லிங் (Income Tax e-filing) போர்டல் மூலம் முடிக்கப்படுகிறது. எந்த வரி வகை செலுத்துகிறீர்கள், எந்த நிதியாண்டுக்கு வரி செலுத்துகிறீர்கள் போன்றவை ஈ-ஃபில்லிங் பேர்டல் வழியாகவே செய்து முடித்துவிடலாம். பணத்தை செலுத்த மட்டும் யுபிஐ ஆப்களுக்கு செல்லலாம். எங்கும் அலைய வேண்டாம்.

Google Pay, PhonePe, Paytm யூஸ் பண்றீங்களா? உடனே இதை பண்ணுங்க!

1. வருமான வரி ஈ-ஃபில்லிங் லாகின்

இந்த வருமான வரி ஈ-ஃபில்லிங் போர்டலுக்கு சென்று உங்களது பான் கார்டு (யூசர் ஐடி) மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுத்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். மின்னணு கட்டண வரி (e-Pay Tax) பக்கத்துக்கு சென்று கொள்ளுங்கள். லாகின் செய்யாமலும் மின்னணு கட்டண வரி செல்லலாம். ஆனால், லாகின் செய்வது, டிராக் செய்ய சுலபமாக இருக்கும்.

2. வருமான வரி சலான்

புது பேமெண்ட் விருப்பத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இதில் வரி வகையை தேர்ந்தெடுக்க வேண்டும். தனிநபர்கள் வரிகள் முன்பண வரி அல்லது சுய மதிப்பீட்டு வரியை (Advance Tax or Self-Assessment Tax) தேர்ந்தெடுக்கலாம். பிற நேரடி வரிகளும் இருக்கும். இதை சரியாக தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். இந்த விருப்பத்தில் பான் நம்பர், பெயர் விவரங்களை சரிபாருங்கள்.

இதில் எந்த நிதியாண்டுக்கு வருமான வரியை செலுத்த வேண்டும் என்பதையும் கொடுக்க வேண்டும். இதையெல்லாம், செய்து முடித்து பிறகு உங்களுக்கான வருமான வரி சலான் தயாராகிவிடும். இந்த சலானில் நிலுவை தொகை மற்றும் பேமெண்ட் மோட்களை ஈ-ஃபில்லிங் காட்டும். இப்போது, பேமெண்ட் மோட்களில் யுபிஐ பரிவர்த்தனையை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்

3. யுபிஐ வழியாக வருமான வரி செலுத்தல்

பேமெண்ட் மோடில் யுபிஐ பரிவர்த்தனையை தேர்ந்தெடுத்த பிறகு கியூஆர் கோட் (QR Code) அல்லது யுபிஐ ஐடி வழியாக செலுத்தலாம். கியூஆர் கோட் இருந்தால், உங்களது பேடிஎம், போன்பே, கூகுள் பே ஆப்களை ஓப்பன் செய்து, வழக்கம்போல கியூஆர் கோட் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தலாம். இதில் தொகையை உறுதிப்படுத்தினால் மட்டுமே போதும், பின் நம்பர் கொடுத்து செலுத்தலாம்.

அதேபோல யுபிஐ ஐடி (UPI ID) வழியாக பணத்தை செலுத்த வேண்டுமானால், உங்களது யுபிஐ ஐடியை கேட்கும் இடத்தில் கொடுங்கள். இந்த ஐடியுடன் இணைக்கப்பட்ட யுபிஐ செயலிக்கு சரியான தொகை கேட்கப்பட்டு, பேமெண்ட் கேட்வே ஓப்பன் செய்யப்படும். இதிலும், தொகையை சரிபார்த்துவிட்டு, பின்நம்பர் கொடுத்தால் போதும் பேமெண்ட்டை முடித்து கொள்ளலாம்.

4. வருமான வரி ரசீதை பதிவிறக்கவும்

இந்த பேமெண்ட் சில நொடிகளில் வெற்றிகரமாக முடிக்கப்படும். அடுத்து மீண்டும் ஈ-ஃபில்லிங் பக்கத்துக்கு செல்லுங்கள். பேமெண்ட் ஹிஸ்டரிக்கு சென்று, சலான் ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதில் சிஐஎன் (CIN) என்றழைக்கப்படும் சலான் அடையாள எண் (Challan Identification Number) இடம்பெற்றிருக்கும்.

அதேபோல யுடிஆர் (UTR) இருக்கும். இதுவே வருமான வரி செலுத்தப்பட்டதற்கான சான்று. ஆகவே, இதை பிடிஎப் ஆக சேமித்து கொள்ளுங்கள். உங்களது ஈமெயிலுக்கும் அனுப்பி கொள்ளலாம். யுபிஐ வழியாக வருமான வரி தாக்கல் செய்யும்போது, அந்த பணத்துக்கு வரி கிடையாது. ஆகவே, யுபிஐ லிமிட்டுக்குள் வரிமான வரி தாக்கல் செய்தால், எளிதாக முடிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Income Tax Payment UPI How to Pay Online Paytm PhonePe Google Pay Complete Information Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X