Home
News

2026 இல் எவ்ளோ சம்பளம் வாங்கினால் வரி கட்ட தேவையில்லை? புதிய Income Tax விதிகள்.. எப்போது அமல்?

ஆதார் -பான் இணைப்பு தொடங்கி சிம் கார்டு வரையிலாக.. 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஏற்கனவே பல வகையான புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையி புதிய இன்கம் டேக்ஸ் விதிகளும் இந்த 2026 ஆம் ஆண்டில் அமலுக்கு வர உள்ளன.

2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் டேக்ஸ் சிஸ்டம் (Indian Tax System) ஆனது ஒரு பெரிய மாற்றத்தை காண உள்ளது. ஏப்ரல் 1, 2026 முதல், நாடு முழுவதும் வருமான வரி தொடர்பான புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இந்திய அரசாங்கம் ஆனது 1961 ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்தை புதிய வருமான வரிச்சட்டம் 2025 (New Income Tax Act 2025) உடன் மாற்றுகிறது,.

2026 இல் எவ்ளோ சம்பளம் வாங்கினால் வரி இல்லை? புதிய Income Tax விதிகள்!

இந்த மாற்றம் - வரி விதிகளை எளிதாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் கூட வருமான வரியை பற்றி நன்றாக புரிந்துகொண்டு சிரமமின்றி வரி செலுத்த முடியும். புதிய சட்டத்தின் அடிப்படை அமைப்பு ஆனது அப்படியே தான் இருக்கும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது, ஆனால் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். இது வரி தொடர்பான சர்ச்சைகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம் ஆனது தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு வரிச்சட்டங்களை எளிதாக்கும் மறுகையில் 2026 ஆம் ஆண்டில் எந்த அளவிலான வருமானத்திற்கு வரி இல்லை என்கிற வரம்பையும் கொண்டுள்ளது. அதன்படி ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. அதாவது 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகை 2026 ஆம் ஆண்டிலும் தொடரும்.

புதிய வரி ஆட்சியின் (New tax regime) கீழ், ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி இருக்காது. இந்த அமைப்பில் விலக்குகள் மற்றும் கழிவுகள் இருக்காது, ஆனால் வரி அடுக்குகள் குறைந்த விகிதங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி விதிக்கப்படும், அதே நேரத்தில் ரூ.24 லட்சத்திற்கு மேல் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும்.

எதற்கெல்லாம் கூடுதல் வரி? 2026 ஆம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிகரெட்டுகளுக்கான கலால் வரி அதிகரிக்கப்படும், மேலும் பான் மசாலா மீது புதிய செஸ் வரி விதிக்கப்படும். இந்த வரிகள் தற்போதுள்ள ஜிஎஸ்டிக்கு கூடுதலாக இருக்கும். மேற்குறிப்பிட்ட பொருட்களிலிருந்து அரசாங்க வருவாயை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

2026 இல் ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்கள் இருக்குமா? 2026 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி விகிதங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. இது செப்டம்பர் 2025 இல் செயல்படுத்தப்பட்ட புதிய ஜிஎஸ்டி முறையின் முதல் முழு ஆண்டாகும். இந்த சீர்திருத்தத்தின் கீழ், தோராயமாக 375 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரிகள் குறைக்கப்பட்டன. தற்போது, ​​பெரும்பாலான பொருட்கள் 5% அல்லது 18% ஜிஎஸ்டியை ஈர்க்கின்றன.

புதிய விதிகள் வரி செலுத்துவோரை எவ்வாறு பாதிக்கும்? 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள் ஆனது வரி முறையை சாதாரண மக்கள் எளிதாக புரிந்துகொள்ள உதவும். சர்ச்சைகளை குறைக்கும், மேலும் டிஜிட்டல் வரி தாக்கல் நேரத்தையும், அதற்கான பணத்தையும் மிச்சப்படுத்தும். ஒட்டுமொத்தமாக 2026 வரி முறை ஆனது வரி செலுத்துவோருக்கு எளிமையான மற்றும் வெளிப்படையான அமைப்பை நோக்கிய ஒரு முக்கிய படியாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Income Tax New Rules 2026 Came To Effect From April 1 Taxpayers Need to Face These Changes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X