கறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் அம்பானி குடும்பத்தினருக்கு, ஐடி நோட்டீஸ்?

|

அம்பானி நிறுவனமான ஜியோ இந்தியாவில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

 கறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ்,

கறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ்,

இந்நிலையில் கறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ், தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள் தொடர்பான புகாரில் விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

700 இந்தியர்கள்

700 இந்தியர்கள்

கடந்த 2011-ம் ஆண்டு ஹெச்எஸ்பிசி ஜெனீவாவில் கணக்கு வைத்திருந்த 700 இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பாக கிடைத்த விவரங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை தற்சமயம் விசாரணையை தொடங்கியுள்ளது.

அம்பானி குடும்பத்திற்கு நோட்டீஸ்

அம்பானி குடும்பத்திற்கு நோட்டீஸ்

அதுவும் பல நாடுகளில் இருந்து விசாரணை அமைப்புகள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் புலனாய்வுக்குப்பிறகு, வருமான வரித்துறையின் மும்பை பிரிவு முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

சந்திரயான்-2:14நாட்கள் முடிந்த பின்பு விக்ரம் லேண்டர் என்னவாகும்? பதில் இதுதான்.!

 நீதா அம்பானி

நீதா அம்பானி

மேலும் கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் அவரது 3பிள்ளைகளுக்கு கடந்த மார்ச் 28-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டதாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன.

கறுப்பு பண தடுப்பு சட்டம்

கறுப்பு பண தடுப்பு சட்டம்

குறிப்பாக கணக்கில் இல்லாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள் தொடர்பான புகாரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகளை கண்டறிந்து வரி வசூலிக்கும் கறுப்பு பண தடுப்பு சட்டம், 10ஆவது பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏடிஎம் மோசடிக்கு முற்றுப்புள்ளி: களமிறங்கியது புதிய ஏடிஎம் சேவை!

கேபிட்டல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்

இப்போது தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பிரிட்டிஷ்விர்ஜின் தீவுகளை அடிப்படையாக கொண்ட கேபிட்டல் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் மற்றும் அதன் கீழ்வரும் சிறிய நிறுவனங்கள், கேமேன் தீவுகளை அடிப்படையாக கொண்ட இன்ஃப்ராஸ்டிரக்சர் கம்பெனி நிறுவனத்தின் இறுதிப் பயனாளர்களாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இருந்ததாகவும், இது குறித்த விவரங்களை அவர்கள் கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரவிக்கின்றன.

 ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் அடியோடு மறுத்துள்ளார்

வெளிநாட்டு வருவாய் சொத்துகள் தொடர்பான விவரங்களை உடனே தெரிவிக்குமாறும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான முதல் விசாரணை கடந்த ஏப்ரல் 12ம் தேதி நிர்ணயிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாக வெளியான தகவலை, ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் அடியோடு மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Income Tax Department Sent Notice to Mukesh Ambani wife and Children under black money act: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X