சாதாரண ரகசியம் முதல் சிதம்பர ரகசியம் வரை.. எல்லாத்தையும் மறைக்கலாம்.. WhatsApp இல் புதிய Secret Code அம்சம்!
வாட்ஸ்அப்பில் (WhatsApp) ஏற்கனவே பல வகையான ப்ரைவஸி அம்சங்கள் மற்றும் செட்டிங்ஸ் (Privacy Features and Settings) அணுக கிடைக்கின்ற நிலையில்.. சீக்ரெட் கோட் (Secret Code) என்கிற புதிய அம்சம், எல்லாவற்றிற்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.
சீக்ரெட் கோட் என்கிற புதிய ப்ரைவஸி அம்சத்தோடு சேர்த்து, மேலும் 4 புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பிற்கு வருகின்றன. அதென்ன அம்சங்கள்? அவைகளால் என்ன பயன்? சீக்ரெட் கோட் என்றால் என்ன? இந்த அம்சத்தினால் வாட்ஸ்அப் பயனர்களுக்கு என்ன பயன்? இதோ விவரங்கள்:

05. அப்டேட்ஸ் டேப்-ல் சேர்ச் அம்சம் (Search Feature for Updates Tab): கூடிய விரைவில் வாட்ஸ்அப்பின் மேல் பக்கத்தில் உள்ள டாப் ஆப் பாரில் (Top App Bar) புதிய சேர்ச் அம்சம் சேர்க்கப்படும். இந்த அம்சம் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் (Status Updates), ஃபாலோவ்டு சேனல்கள் (Followed Channels) வெரிஃபைடு சேனல்கள் (Verified Channels) போன்றவைகளை எளிமையான முறையில் தேட அனுமதிக்கும்.
04. பின்டு மெசேஜஸ் அம்சம் (Pinned Messages Feature): கூடிய விரைவில் வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் சாட்டில் உள்ள உரையாடல்களின் (Top of Chat Conversations) மேலே ஒரு மெசேஜை பின் (PIN) செய்வதன் மூலம் அதை ஹைலைட் (Highlight) செய்ய முடியும். இதனால் குறிப்பிட்ட உரையாடலில் உள்ள முக்கியமான அல்லது அடிக்கடி குறிப்பிட்ட மெசேஜை மிகவும் எளிமையாக அணுக முடியும்.
03. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சாட் அட்டாச்மென்ட் மெனு (Redesigned Chat Attachment Menu): வாட்ஸ்அப் செயலியானது புதிய மற்றும் நவீன பாணியை கொண்ட மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சாட் அட்டாச்மென்ட் மெனுவை பெற உள்ளது. புதுப்பிக்கப்பட்ட மெனுவில் பல்வேறு வகையான கன்டென்ட்டை பகிர்வதற்கான செயல்முறைகள் (Process of Sharing Various types of Content) அணுக கிடைக்கும்.
02. வாட்ஸ்அப் கால்களின் போது ஐபி அட்ரெஸ்-ஐ பாதுகாப்பதற்கான ப்ரைவஸி அம்சம் (Privacy Feature to Protect the IP Address in Calls): இந்த அம்சத்தின் கீழ் வாட்ஸ்அப் பயனர்கள் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை செய்யும்போது கூடுதல் பாதுகாப்பை பெறுவார்கள். ஏனென்றால் இந்த அம்சத்தின் பெயர் குறிப்பிடுவது போலவே உங்கள் ஐபி அட்ரெஸை மற்றவர்கள் பெறுவதை வாட்ஸ்அப் கடினமாக்கும்.
01. சீக்ரெட் கோட் அம்சம் (Secret code feature): இந்த கட்டுரையின் மிகவும் முக்கியமான புதிய அம்சமாக பார்க்கப்படும் சீக்ரெட் கோட் ஆனது, லாக் செய்யப்பட்ட சாட்களுக்கான (Locked Chats) சீக்ரெட் கோட்-களை செட் செய்ய அனுமதிக்கும். இந்த அம்சம் உங்கள் ஸ்மார்ட்போனின் பாஸ்வேர்ட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். ஆக ஏற்கனவே லாக் செய்யப்பட்ட வாட்ஸ்அப் சாட்களுக்கு இது மேலதிக பாதுகாப்பை வழங்கும்.
மேற்கண்ட 5 புதிய வாட்ஸ்அப் அம்சங்களும் பீட்டா டெஸ்ர்ர்களுக்கு (Beta Testers) ஏற்கனவே கிடைக்கின்றன; அதாவது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவைகள் அனைத்துமே வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக வெளியான அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
அறியாதோர்களுக்கு டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ என்பது வாட்ஸ்அப்பில் சோதிக்கப்படும் மற்றும் வரவிருக்கும் அம்சங்களை (Upcoming Features) பற்றிய துல்லியமான தகவல்களை பகிரும் நம்பகமான சோர்ஸ் ஆகும். (முன்னதாக பேஸ்புக் என்று அழைக்கப்பட்ட) மெட்டாவுக்கு (Meta) சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனமானது, அடுக்கடுக்கான புதிய அம்சங்களை வெளியிடுவது முதல் முறையல்ல.
தனது ஆப்பை பயனர்களுக்கு ஏற்றதாக மாற்றவும், பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் புதிய அம்சங்களை பரிசோதித்து, அதை வெளியிடுவதையும் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளது. அந்த பட்டியலில் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள சீக்ரெட் கோட் அம்சமானது பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








