Home
News

யூஸ் பண்ணாத Twitter அக்கவுண்ட் காலி.. எலான் மஸ்க் போட்ட குண்டு.. உஷார் மக்களே?

சமீப காலமாக ட்விட்டர் (Twitter) நிறுவனத்தில் இருந்து வெளிவரும் செய்திகள் ட்விட்டர் யூசர்களை (Twitter Users) எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கிறது. இப்போதும் அப்படியான ஒரு செய்தியை ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க் (Twitter CEO Elon Musk) யூசர்களுக்கு கொடுத்துள்ளார்.

இந்த செய்தி பரபரப்பை மட்டுமல்லாமல், ட்விட்டரை பயன்படுத்தாமல் இருக்கும் யூசர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மிகப்பெரிய பில்லியனரான எலான் மஸ்க், 2022ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன்பின் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். பல லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து வாங்கியும், ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து எலான் மஸ்க்குக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

யூஸ் பண்ணாத Twitter அக்கவுண்ட் காலி.. எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு!

இதனால் ட்விட்டர் யூசர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் லாபத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய ட்விட்டரின் முக்கிய நிர்வாகிகளுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவே தெரிகிறது. பல லட்சம் பாலோயர்களை கொண்ட பிரபலங்களின் ப்ளூ டிக், எந்தவித அறிவிப்பும் கொடுக்கப்படாமல் நீக்கப்பட்டதே, அதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

இப்படி ட்விட்டரின் சமீப கால நடவடிக்கைகள் அதன் ஒட்டுமொத்த யூசர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. பலர் ட்விட்டரின் ப்ளூ டிக் வேண்டவே வேண்டாம் என்றே சொல்லிட்டனர். அண்மையில் கூட 80 ஆயிரத்துக்கும் அதிகமான ப்ளூ டிக் பயனர்கள் தங்களது சந்தாவை ரத்து செய்துவிட்டனர். ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு வந்த போது 1,50,000 ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இருந்தனர்.

இப்போது வெறும் 68,157 பேர் மட்டுமே இருக்கின்றனர். இந்த சூழலிலும் எலான் மஸ்க், மேலுமொரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார். நீண்ட காலமாக இன்ஆக்டிவ்வாக இருக்கும் ட்விட்டர் அக்கவுண்ட்கள் (Inactive Twitter Accounts) விரைவில் நீக்கம் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் லட்சகணக்கான யூசர்கள் தங்களது ட்விட்டரை மீண்டும் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏனென்றால், ஒருவர் கடந்த காலத்தில் பதிவிட்ட ட்வீட்கள் மொத்தமாக போய்விடும் என்பதால் மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். இந்த முடிவு குறித்து எலான் மஸ்க்கின் ட்வீட்டுக்கு பதிலளித்த யூசர் ஒருவர், "இன்ஆக்டிவ் அக்கவுண்ட் நீக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பு, ட்விட்டர் நிறுவனத்தின் மிகப்பெரிய தவறான முடிவாக மாறக்கூடும்.

பலரது 'வரலாற்று' ட்வீட்கள் அழிக்கப்பட்டுவிடும். ஆகவே, இந்த முடிவை செயல்படுத்துவதற்கு முன்பாக எலான் மஸ்க் 'மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார். இதைக்கண்ட எலான் மஸ்க் இன்ஆக்டிவ் அக்கவுண்ட்ஸ் ட்வீட்கள் 'Archived' செய்யப்படும் என்று அவருக்கு பதிலளித்துள்ளார்.

இந்த முடிவை அதிருப்தி ட்விட்டர் யூசர்கள் சிலர் வரவேற்றுள்ளதாகவே தெரிகிறது. ட்விட்டர் அக்கவுண்ட்டை நீக்கினால் நீக்குங்கள் என்று பெரிதுபடுத்தாமல் இருக்கின்றனர். ஒருவேளை நீங்கள் உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட் நீக்கம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று விரும்பினால் பின்வருவனவற்றை கட்டாயம் கடைப்பிடியுங்கள்.

நீங்கள் ஆண்டுக்கணக்கில் ட்விட்டர் ஆப் (Twitter App) பயன்படுத்தவில்லை என்றாலும், இப்போது மீண்டும் பயன்படுத்த தொடங்குங்கள். தொடர்ந்து பயன்படுத்த முடியவில்லை என்றால், 30 நாட்களுக்கு ஒரு முறையாவது லாகின் செய்வதை மறந்து விடாதீர்கள். இப்படி செய்தாலே உங்களது ட்விட்டர் அக்கவுண்ட் இன்ஆக்டிவ் லைன்னுக்கு செல்லாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Inactive Twitter accounts will be deleted soon says Its Twitter CEO Elon Musk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X