Home
News

Netflix கஸ்டமர்களே.. மனச கல் ஆக்கிக்கோங்க.. இந்தந்த நாடுகளில்.. Basic Plan-ஐ நிறுத்த போறாங்களாம்.. ஏன்னா?

நெட்பிளிக்ஸை (Netflix) பற்றியும், விளம்பரங்கள் இல்லாத அதன் மலிவு-விலை பேஸிக் பிளானை பற்றியும் பெரிய அளவிலான அறிமுகம் தேவைப்படாது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ அளவிற்கு நெட்பிளிக்ஸும் கூட பட்டித்தொட்டி எங்கும் ஃபேமஸ்; இந்தியாவில் மட்டுமல்ல உககளவில்!

இந்நிலைப்பாட்டில் தான் நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளான் (Basic Plan) ஆனது நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நெட்பிளிக்ஸின் இந்த நடவடிக்கை இந்திய வாடிக்கையாளர்களுக்கு எந்த சிக்கலையும் அல்லது இடையூரையம் கொண்டுவரப்போவதில்லை. நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளாக் ஆனது இப்போதைக்கு யுகே (UK) மற்றும் கனடா (Canada) உள்ளிட்ட சில நாடுகளில் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Netflix கஸ்டமர்களே.. Basic Plan-ஐ நிறுத்த போறாங்களாம்.. ஏன்னா?

ஏன் இந்த திடீர் நடவடிக்கை? எப்போது முதல் நிறுத்தப்படும்? இது முழுக்க முழுக்க நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வருவாயை (Revenue) மேலும் அதிகரிக்க உதவும் ஒரு முயற்சியாகும். யுகே மற்றும் கனடா உட்பட சில நாடுகளில் நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளான் ஆனது நிறுத்தப்பட உள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி, 2024 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டிற்குள் (நிறுவனத்தால் திட்டமிடப்பட்டு உள்ள நாடுகளில் இருந்து) முழுவதுமாக அகற்றப்படலாம்.

நினைவூட்டும் வண்ணம் நெட்பிளிக்ஸ் பேஸிக் பிளான் ஆரம்பத்தில் $10 அல்லது £7 ஆக இருந்தது, ஆனால் கடந்த அக்டோபரில் இந்த விலைகள் $12 அல்லது £8 ஆக உயர்த்தப்பட்டன. மேலும் கடந்த ஜூலை முதல், புதிய நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு (New Netflix Customers) பேஸிக் திட்டம் அணுக கிடைக்கவில்லை.

Netflix கஸ்டமர்களே.. Basic Plan-ஐ நிறுத்த போறாங்களாம்.. ஏன்னா?

இதற்கிடையில் விலையை உயர்வை (Price Hike) திட்டமிடாமல், அதற்குப் பதிலாக புதிய மற்றும் பழைய சந்தாதாரர்கள் அனைவருக்குமே பேஸிக் திட்டத்தை நீக்கி, அவர்களுக்கு விலையுயர்ந்த விளம்பரமில்லா திட்டம் (மாதம் $16.49 அல்லது £11 முதல்) அல்லது விளம்பரங்களை கொண்ட மலிவான திட்டத்தை ($6 அல்லது மாதத்திற்கு £5) வழங்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

"2023 ஆம் ஆண்டு நான்காம் காலாண்டை போலவே, எங்கள் ஆட்ஸ் மெம்பர்ஷிப் எண்ணிக்கை காலாண்டில் ஏறக்குறைய 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த மேம்பாடு எங்களின் புதிய மற்றும் மீண்டும் சேரும் உறுப்பினர்களுக்கான பேஸிக் திட்டத்தை படிப்படியாக நீக்கியதன் மூலம் வந்துள்ளது" என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Netflix கஸ்டமர்களே.. Basic Plan-ஐ நிறுத்த போறாங்களாம்.. ஏன்னா?

மேலும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதன் முதலீட்டாளர் குறிப்பில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதன் வருவாயை பெருக்க அது பின்பற்றும் மூன்று உத்திகளை சுட்டி காட்டியும் உள்ளது. முதல் உத்தி - விலை நிர்ணயம்: போட்டி தொடக்க விலைகளை பராமரிப்பதில் முக்கியத்துவம் அளித்து, பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான விலை திட்டங்களை வழங்குவதை நோக்கமாக கொண்டிருப்பதாக நெட்பிளிக்ஸ் கூறுகிறது.

மேலும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது சேவைகளை மேம்படுத்தி விரிவுபடுத்தும்போது, ​​இந்த மேம்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் அதன் விலைகளை அவ்வப்போது சரிசெய்கிறது. இரண்டாவது உத்தி - விளம்பரங்கள்: நெட்பிளிக்ஸ் தனது பிஸ்னல் மாடலில் விளம்பரங்களை இணைத்துக்கொள்வதை நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு கூடுதல் வருவாயின் முக்கிய ஆதாரமாக பார்க்கிறது.

எனவே, 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கனடா மற்றும் இங்கிலாந்தில் தொடங்கி, மேலும் சில நாடுகளில் பேஸிக் திட்டத்தை படிப்படியாக அகற்ற திட்டமிட்டுள்ளது. மூன்றாவது உத்தி - ஷேரிங் அக்கவுண்ட் (Sharing Account): நெட்பிளிக்ஸ் நிறுவனம் அக்கவுண்ட் ஷேரிங்கை பணமாக்குவதற்கான உத்தியையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

கட்டுப்பாடுகளுடன் டிரான்ஸ்பர் ப்ரொபைல் (Transfer Profile) மற்றும் எக்ஸ்ரா மெம்பர் ( Extra Member) போன்ற அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஷேரிங் அக்கவுண்ட் சிக்கல்களை வெற்றிகரமாக சமாளித்ததாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது முதலீட்டாளர்களிடம் கூறியுள்ளது. இந்த நடவடிக்கைகள் இந்தியாவிற்கும் வருமா என்பது குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை!

More from GizBot

Best Mobiles in India

English summary
In Which Countries Netflix planning to discontinue its Basic plan without ads and What is the reason
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X