பிளாஸ்டிக் பாட்டிலை நொறுக்கினால் ரூ.5 பரிசு: அசத்தும் ரயில்வே துறை.!

குறிப்பாக ரயில் நிலையங்களில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களை, பயணிகள் ரயில் நிலையங்களில் வீசி செல்வது வாடிக்கையாகிவிட்டது.

|

இந்தியாவில் தற்சமயம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது, அதன்படி பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க இந்திய ரயில்வே துறை புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது, கண்டிப்பாக பல்வேறு மக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் உள்ளது.

பிளாஸ்டிக் பாட்டிலை நொறுக்கினால் ரூ.5 பரிசு: அசத்தும் ரயில்வே துறை.!

இப்போது பிளாஸ்டிக் இல்லா ரயில்வே நிலையங்களை உறுவாக்கும் முயற்சியில் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் புதிய இயந்திரத்தை கொண்டுவந்துள்ளது ரயில்வே துறை. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் இந்த புதிய இயந்திரம் பல்வேறு வரவேற்புகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரயில் நிலையங்களில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களை, பயணிகள் ரயில் நிலையங்களில் வீசி செல்வது வாடிக்கையாகிவிட்டது, எனவே இந்த பிளாஸ்டிக் குறைக்கும் நோக்கத்தில் இந்த புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டிலை நொறுக்கினால் ரூ.5 பரிசு: அசத்தும் ரயில்வே துறை.!

மேலும் தற்சமயம் வதோதராவில் மட்டும் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து இடங்களிலும் இந்த புதிய இயந்திரத்திம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த புதிய இயந்திரம் வெளிவந்துள்ளது.

அதன்பின்பு இந்த பாட்டில் நொறுக்கும் இயந்திரத்தில் பயணிகள் பாட்டிலை நொறுக்குவதன் மூலம் ரூ.5 வரை பரிசாக பெற முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக அனைத்து பயனர்களும் இதைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் பாட்டலை நொறுக்குவதற்கு முன்னதாக தங்களது மொபைல் நம்பரை அந்த இயந்திரத்தில் உள்ளிட வேண்டும், பின்பு பாட்டிலை நொறுக்க வேண்டும், மேலும் சிறிது நேரத்தில் பயனிகளின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட 'பேடிஎம்'
கணக்கிற்கு பணம் வந்து சேரும் என ரயில்வே துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டிலை நொறுக்கினால் ரூ.5 பரிசு: அசத்தும் ரயில்வே துறை.!

இப்போது வெளிவந்துள்ள இந்த புதிய இயந்திரம் வதோதராவில் இருக்கும் ரயில் நிலையங்களில் மட்டும் தான் வந்துள்ளது, மேலும் இதன் வரவேற்கை பொறுத்து அனைத்து ரயில்நிலையங்களிலும் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
In Vadodara, Railways offers Rs 5 cashback for dropping plastic bottle in crushing machine : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X