சியோமி, ரெட்மி போன் கையில் இருக்கா? உங்க காட்டில் மழை தான்.. உடனே இதை பண்ணுங்க!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் நிறுவனம் Xiaomi. சமீபத்தில் சியோமி இந்தியாவின் சிறந்த தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ உடன் கூட்டு சேர்ந்தது. இந்த நிலையில் 13 எம்ஐ மற்றும் ரெட்மி போன்கள் ஜியோ 5ஜிக்கான ஆதரவை பெற்றிருக்கிறது.
சியோமி நிறுவனம் அதன் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி ஆதரவைக் கொண்டு வர ரிலையன்ஸ் ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதன்படி தற்போது குறிப்பிட்ட சியோமி மற்றும் ரெட்மி போன்களில் 5ஜி ஆதரவு அணுகல் கிடைக்கத் தொடங்கி உள்ளது. உங்களிடம் கீழே வழங்கப்பட்டுள்ள சியோமி மற்றும் ரெட்மி போன்கள் இருந்தால் அதில் தற்போதே ஜியோவின் "True 5G" சேவையைப் பயன்படுத்த முடியும்.

முன்னதாக ஜியோ ட்ரூ 5ஜி சேவை தன்மையை உறுதி செய்வதற்காக ரெட்மி கே50ஐ மற்றும் ரெட்மி நோட் 11டி 5ஜி போன்களில் சோதனை செய்யப்பட்டது. அதன்படி சியோமி மற்றும் ரெட்மியின் பெரும்பாலான 5ஜி ஆதரவு ஸ்மார்ட்போன்களில் ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவை தற்போது கிடைக்கத் தொடங்கி உள்ளது.
இந்த கூட்டாண்மை குறித்து சியோமியின் இந்திய தலைவர் முரளி கிருஷ்ணன் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளில் Xiaomi, #IndiaReady5G உருவாக்க உறுதி ஏற்றிருக்கிறது. நேர்மையான விலையில் சிறந்த அம்சங்களுடன் 5G அனுபவத்தை வழங்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமாக 5ஜி புரட்சியை நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம். வாடிக்கையாளர்களின் இணைப்பையும் அனுபவத்தையும் மேம்படுத்த ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரூ 5ஜி உடன் கூட்டாளராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கூட்டாண்மை ஆனது Xiaomi மற்றும் Redmi போன் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவையை சிறந்த வேகத்தில் அனுபவிக்க உதவும் என நாங்கள் நம்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
புதிய தொழில்நுட்பங்களை தட்டி எழுப்பவும், அதிநவீன கண்டுபிடிப்புகளை அதன் வாடிக்கையாளர்களின் கைகளில் கொண்டு வரவும் Xiaomi ஒரு தொழில்துறை முன்னோடியாக உள்ளது. பொதுமக்களுக்கு ட்ரூ 5G அணுகலை இயக்குவது ஜியோவின் ஒரு நிலையான பணியாகும். சியோமியின் 5ஜி சாதனங்கள் ஜியோ True 5G ஐ ஆதரிக்கும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது என ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் சுனில் தத் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி சியோமி மற்றும் ரெட்மியின் குறிப்பிட்ட 5ஜி போன்கள் வைத்திருப்பவர்கள் தங்களது போனில் ஜியோ ட்ரூ 5ஜி சேவையை இணைக்க முடியும். ஆனால் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதியில் இருக்க வேண்டும் என்பது மிக கட்டாயமாகும். 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் ஜியோ 5ஜி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நிபந்தனை குறித்து பார்க்கையில், அது நீங்கள் ரூ.239க்கு மேல் உள்ள திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதாகும். சியோமி, ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம்.
Xiaomi 11T Pro 5G
Xiaomi 11 Lite NE 5G
Xiaomi 11i 5G
Xiaomi 11i HyperCharge 5G
Mi 11 Ultra 5G
Mi 11X 5G
Mi 11X Pro 5G
Xiaomi 12 Pro 5G
Redmi Note 10T 5G
Redmi Note 11T 5G
Redmi 11 Prime 5G
Redmi Note 11 Pro+ 5G
Redmi K50i 5G
இந்த ஸ்மார்ட்போன் கொண்ட பயனர்கள் தங்களது போனில் ஜியோ ட்ரூ 5ஜி சேவையை பயன்படுத்தத் தொடங்கலாம். சியோமி, ரெட்மி மட்டும் அல்ல அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் அந்தந்த ஸ்மார்ட்போனுக்கான 5ஜி ஓஎஸ் அப்டேட்டை வெளியிடத் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.


Click it and Unblock the Notifications