ரூ.199/- அறிமுகம்: ஜியோவை காப்பியடித்து ஜியோவையே முந்தும் ஏர்டெல்.!

ஜியோவை அபப்டியே காப்பி அடித்து காலம் தள்ளும் பார்தி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணத் திட்டமொன்றை தற்போது அறிவித்துள்ளது.

|

நீங்கள் ஜியோ வெறுப்பாளராக இருந்தாலும் சரி அலல்து ஒரு ஏர்டெல்வாசியாக இருந்தாலும், முதலில் முகேஷ் அம்பானிக்கு நன்றியை தெரிவித்தே ஆகவேண்டும்.

ரூ.199/- அறிமுகம்: ஜியோவை காப்பியடித்து ஜியோவையே முந்தும் ஏர்டெல்.!

ஒருவேளை, முகேஷ் அம்பானியின் மாஸ்டர் மைண்டில் இருந்து வரம்பற்ற டேட்டாவை வழங்கும் பிளான் பிறக்கவில்லையெனில் நாம் இன்றைய தேதி வரையிலாக, 1ஜிபி அளவிலான 2ஜி அல்லது 3ஜி டேட்டவை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி கொண்டிருப்போம்.

நம்மையெல்லாம் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பல மாதங்களுக்கு பயன்படுத்த வைத்து, அதிவேக டேட்டாவிற்கு பழக்கி, அதன் விளைவாய் இதர அனைத்து டெலிகாம் துறைகளையும் மலிவுவிலை டேட்டாவை வழங்க நிர்பந்தப்படுத்திய முகேஷ் அம்பானியின் மாஸ்டர் மூளைக்கு ஒரு பெரிய சலாம்.

கிழிந்த முகமூடிகள்.!

கிழிந்த முகமூடிகள்.!

இந்திய தொலைத்தொடர்பு துறைக்குள் ராஜாங்கம் நடத்திய பெருநிறுவனங்களின் முகமூடிகள், ஜியோவினால் கிழிக்கப்பட்டாலும் கூட ஜியோவை அப்பட்டமாக "காப்பி" அடிக்க யாரும் தயங்குவதாய் இல்லை, குறிப்பாக பார்தி ஏர்டெல்.!

காப்பி அடித்து காலம் தள்ளும் பார்தி ஏர்டெல்.!

காப்பி அடித்து காலம் தள்ளும் பார்தி ஏர்டெல்.!

நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, விரைவில் வோல்ட் சேவை மூலம் வரம்பற்ற இலவச அழைப்புகள், ரூ.2000/- மதிப்பிலான ஏர்டெல் 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போன் திட்டம் என ஜியோவை அபப்டியே காப்பி அடித்து காலம் தள்ளும் பார்தி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணத் திட்டமொன்றை தற்போது அறிவித்துள்ளது.

4ஜி/ 3ஜி / 2ஜி டேட்டா.!

4ஜி/ 3ஜி / 2ஜி டேட்டா.!

இன்றும், இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனம் என்ற பெயரை தக்கவைத்து கொண்டுள்ள ஏர்டெல் அதன் பயனர்களுக்கு 1ஐபி அளவிலான 4ஜி/ 3ஜி / 2ஜி டேட்டாவை ரூ.199/- என்ற சார்ஜ் திட்டத்தின் கீழ் அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்குமென்பது குறிப்பிடத்தக்கது.

28 நாட்களுக்கு ஒரு செல்லுபடி.!

28 நாட்களுக்கு ஒரு செல்லுபடி.!

தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த புதிய ஏர்டெல் திட்டமானது ப்ரீபெய்ட் பயனர்களுக்கானது மற்றும் 28 நாட்களுக்கு ஒரு செல்லுபடி காலம் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் அழைப்பு நன்மைகள் ஆனது உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகளை உள்ளடக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 காம்போ திட்டங்கள்.!

4 காம்போ திட்டங்கள்.!

இந்த புதிய ரூ.199/- உடன் ஏர்டெல் வழங்கும் சிறப்பான நன்மைகளை உள்ளடக்கிய 4 காம்போ திட்டங்களும் ஏர்டெல் வலைத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. அவைகள் - ரூ.349, ரூ.448, ரூ.509/- மற்றும் ரூ.549/- ஆகும்.

ஏர்டெல் 349 ரீசார்ஜ்

ஏர்டெல் 349 ரீசார்ஜ்

இந்த ரீசார்ஜ் பேக் ஆனது, டெலிகாம் நிறுவனத்தின் இணையதளத்தின்படி, 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 3ஜி / 4ஜி வேகத்திலான 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் இந்த பேக் ஆனது தேசிய வெளிவரும் ரோமிங் உட்பட வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளையும் (வணிக சேவை அல்லாத இணைப்புகள்) மேலும் நாள் ஒன்றிற்கு 100 உள்ளூர் + எஸ்டிடி எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.

ஏர்டெல் 448 ரீசார்ஜ்

ஏர்டெல் 448 ரீசார்ஜ்

இந்த ரீசார்ஜ் பேக் ஆனது, மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 3ஜி / 4ஜி வேகத்திலான 1 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் இந்த பேக் ஆனது, ரூ.349-ஐ போலவே தேசிய வெளிவரும் ரோமிங் உட்பட வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளையும் (வணிக சேவை அல்லாத இணைப்புகள்) மேலும் நாள் ஒன்றிற்கு 100 உள்ளூர் + எஸ்டிடி எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.

ஏர்டெல் 509 ரீசார்ஜ்

ஏர்டெல் 509 ரீசார்ஜ்

இந்த ரீசார்ஜ் பேக் ஆனது, டெலிகாம் நிறுவனத்தின் இணையதளத்தின்படி, 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 3ஜி / 4ஜி வேகத்திலான 1 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் இந்த பேக் ஆனது தேசிய வெளிவரும் ரோமிங் உட்பட வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளையும் (வணிக சேவை அல்லாத இணைப்புகள்) மேலும் நாள் ஒன்றிற்கு 100 உள்ளூர் + எஸ்டிடி எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.

ஏர்டெல் 549 ரீசார்ஜ்

ஏர்டெல் 549 ரீசார்ஜ்

கடைசி திட்டமான ரூ.549/- ஆனது இந்த ரீசார்ஜ் பேக் ஆனது, டெலிகாம் நிறுவனத்தின் இணையதளத்தின்படி, 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் ஆனாலும் இது ஒரு நாளைக்கு 3ஜி / 4ஜி வேகத்திலான 2.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் இந்த பேக் ஆனது மற்ற காம்போ திட்டங்களை போலவே தேசிய வெளிவரும் ரோமிங் உட்பட வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளையும் (வணிக சேவை அல்லாத இணைப்புகள்) மேலும் நாள் ஒன்றிற்கு 100 உள்ளூர் + எஸ்டிடி எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
In Rs. 199 Recharge Pack, Airtel Offers 1 GB Data, Unlimited Calling. Details Here. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X