இணைய வேகத்தில் பாக்., நேபாளம் முன்னிலை: இந்தியா பிடித்த இடம் இதுதான்!

|

இணைய வேக சோதனை தளமாக உள்ள ஓக்லா, அக்டோபர் 2020-ன் நாடுகள் வாரியாக இணைய வேக வரம்பை பட்டியலிட்டுள்ளது. இதில் ஓக்லா அறிக்கையின்படி இந்தியா அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தைவிட பின்தங்கிய நிலையில் உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் நேபாளம்

பாகிஸ்தான் மற்றும் நேபாளம்

அக்டோபர் மாதம் கணக்கீட்டின்படி பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானைவிட இந்தியா முன்னிலையில் உள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை ஒப்பிடுகையில் இந்தியா குறைந்த மொபைல் டேட்டா பதிவிறக்கத்தையே பதிவு செய்துள்ளது. ஸ்பீடெஸ்ட் ஓக்லா அறிக்கையின்படி, உலகெங்கிலும் இருக்கும் இணைய வேக வரம்பை மாதாந்திர அடிப்படையில் கணக்கிடுகிறது.

இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாடு

இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாடு

ஒவ்வொரு மாதமும் ஸ்பீடெஸ்ட்டை பயன்படுத்தி மில்லியன் கணக்கில் சோதனை நடத்தப்படுகிறது. இதில் அக்டோபர் மாதத்திற்கான கணக்கீட்டின்படி இந்தியா தனது அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை விட பின்தங்கிய நிலையில் உள்ளது. உலகளவில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாடாக இந்திய இருக்கிறது. இணைய நெரிசல் அதிகமாக இருக்கும் என்று கருதப்பட்டாலும் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானைவிட அதிக இணைய வேகத்தை பதிவு செய்துள்ளது.

சராசரியாக 12.34 எம்பிபிஎஸ் பதிவிறக்கம்

சராசரியாக 12.34 எம்பிபிஎஸ் பதிவிறக்கம்

ஸ்பீடெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் அறிக்கையின்படி, இந்தியா சராசரியாக 12.34 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும், 4.52 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றுள்ளது. அக்டோபர் மாத கணக்கீட்டின்படி உலகளவில் இந்தியா 131 இடத்தை பிடித்துள்ளது. அதேசமயத்தில் பாகிஸ்தான் 106-வது இடத்தையும், நேபாளம் இரண்டு இடங்கள் குறைந்து 120-வது இடத்தையும் பிடித்துள்ளது.

முதல் ஐந்து இடங்கள்

முதல் ஐந்து இடங்கள்

உலகம் முழுவதும் உள்ள 139 நாடுகளை உள்ளடக்கி பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தென்கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, கத்தார் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.

பிராட்பேண்ட் வேக வரம்பு

பிராட்பேண்ட் வேக வரம்பு

அதேபோல் பிராட்பேண்டிற்கான பட்டியல் குறித்து ஸ்பீடெஸ்ட் குளோபல் தெரிவிக்கையில், இந்தியா 66-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நிலையான பிராட்பேண்ட் வேகத்தை பொருத்தவையில் இந்தியா 48.99 எம்பிபிஎஸ் பதிவிறக்கத்தையும், 45.65 எம்பிபிஎஸ் வேக பதிவேற்றத்தையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 176 நாடுகளில் எடுக்கப்பட்ட குளோபல் இன்டெக்ஸ் பட்டியலில் சிங்கப்பூர், ஹாங்காங், ரூமேனியா, சுவிட்சர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகியவை பிராட்பேண்ட் வேகத்தில் முதல் ஐந்து இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் மூன்றாம் காலாண்டின் கணக்கீடு

இந்திய அளவில் மூன்றாம் காலாண்டின் கணக்கீடு

சமீபத்தில் இந்திய அளவில் ஓக்லா வெளியிட்ட அறிக்கையின்படி, மூன்றாம் காலாண்டின் கணக்கீட்டில் Vi 13.74Mbps பதிவிறக்க வேகத்தையும் சராசரியாக 6.19Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது. ஏர்டெல் 13.58Mbps பதிவிறக்க வேகத்தையும் 4.15Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது. ஜியோ 9.71Mbps பதிவிறக்க வேகத்தையும் சராசரியாக 3.41Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது.

ஓக்லா அறிக்கை

ஓக்லா அறிக்கை

நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் இணைய வேகம் மாறுபடுகிறது என்று ஓக்லா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொபைல் நெட்வொர்க்கின் மூலம் சராசரியாக ஹைதராபாத் 14.35 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் 4.42 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றுள்ளது.மும்பை 13.55 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் 3.75 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும், விசாகப்பட்டினம் 13.40 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தையும் 5.16 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தையும் பெற்றுள்ளது.

source: telecomtalk.info

Best Mobiles in India

English summary
In High Speed Mobile Data, Pakistan and Nepal ahead of India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X