செய்தி தாளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து மன்னிப்பு கேட்ட மார்க்.!

மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் மக்கள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியம், மேலும் மக்களுடைய தகவல்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் நாங்கள் இந்த நிறுவனத்தை நடத்தவே தகுதி இல்லதாவர்கள்.

|

பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக் பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளன.

செய்தி தாளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து மன்னிப்பு கேட்ட மார்க்.!

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் ஐந்து கோடி பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து இருக்கிறது. இதனால் பேஸ்புக் மீது பல்வேறு குற்ச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா:

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா:

இந்நிலையில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி வெளியானதை தொடர்ந்து மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார், குறிப்பாக சேனல் 4 தொலைகாட்சி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் 2014ல் அதிபர் தேர்தல் நடந்தது. அப்போதுஇ தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, பிரிட்டனைச் சேர்ந்த 'கேம்பிரிட்ஜ் அனாலிடிகா' நிறுவனம் தேர்தல் பணிகளை மேற்கொண்டது. இதற்காக, சமூக வலைதளமான பேஸ்புக்கில் உள்ள ஐந்து கோடி பேரின் தகவல்களை, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக தகவல் வெளியானது. இதனை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், இதுபோல் இனி தவறுகள் நடக்காது என மன்னிப்பு கோரினார்.

 39 ஆயிரம் கோடி:

39 ஆயிரம் கோடி:

பேஸ்புக் செயலியை ஸ்மார்ட்போனில் இருந்து டெலிட் செய்யும்படி வாட்ஸ்ஆப் துணை நிறுவனர் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் பேஸ்புக் பிரச்சனை தற்சமயம் அனைத்து இடங்களிலும் பூதாகரமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூக்கபெர்க்கின் சொத்து மதிப்பு சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

 மார்க் ஜூக்கர்பெர்க்:

மார்க் ஜூக்கர்பெர்க்:

மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் மக்கள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியம், மேலும் மக்களுடைய தகவல்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் நாங்கள் இந்த நிறுவனத்தை நடத்தவே தகுதி இல்லதாவர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்க புதிய முயற்சிகளை செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு:

மன்னிப்பு:

குறிப்பாக பேஸ்புக் மீதான மக்களின் நம்பிக்கை தற்சமயம் குறைந்து இருக்கிறது, மேலும் பல்வேறு வலைதளங்களில் பேஸ்புக் குறித்துமக்கள் மிகவும் வருத்தமான தகவல்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர், அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத்
தெரிவித்துள்ளார்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
 விதிமுறை:

விதிமுறை:

தற்சமயம் தகவல் திருட்டு மறுபடியும் நடைபெறா வகையில் பேஸ்புக் தனது விதிமுறைகளை மாற்றிக் கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு சிறிய செயலியை கூட நாங்கள் விசாரணை செய்கிறோம். சந்தேகத்துக்கு இடம் அளிக்கின்ற எந்த ஒரு செயலியும் தடை செய்யப்படும் என மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
In Full Page Newspaper Ads Mark Zuckerberg Says Sorry To Britons ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X