ரயில் ரத்துசெய்யப்பட்டால் உங்கள் கட்டணம் திரும்ப கிடைக்கும்: ஐஆர்சிடிசி.!

ஐஆர்சிடிசியில் பயணச்சீட்டு எடுத்தவர்கள் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் ரத்துச் செய்வதும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

|

தொடர்ந்து ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன்பின்பு சில நாட்களுக்கு முன்பு ஐஆர்சிடிசி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ரயில் ரத்து செய்யப்பட்டால் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் முன்பதிவு செய்த பயணச்சீட்டும் தானாகவே ரத்தாகி அதற்குரிய பணம் வங்கிக் கணக்கில் தானாகவே சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது, பின்பு இந்த செயல்முறை தற்சமயம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ரயில் ரத்துசெய்யப்பட்டால் கட்டணம் திரும்ப கிடைக்கும்: ஐஆர்சிடிசி.!

குறிப்பாக மழைவெள்ளம், போராட்டம், தொழில்நுட்பக் காரணங்கள் ஆகியவற்றால் ரயில்கள் ரத்து செய்யப்படும் போது கவுண்டரில் பயணச்சீட்டு எடுத்த பயணிகள் அதைக் கவுண்டரில் கொடுத்து ரத்து செய்வதும், ஐஆர்சிடிசியில் பயணச்சீட்டு எடுத்தவர்கள் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் ரத்துச் செய்வதும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎன்ஆர்:

பிஎன்ஆர்:

பொதுவாக ரயில் புறப்படும் இடத்தில் இருந்து சேருமிடம் வரை முழுவதும் ரத்து செய்யப்படும்போது ஐஆர்சிடிசியில் முன்பதிவு செய்தவர்களுக்கு பயணச்சீட்டுக்கான பிஎன்ஆர் தானாகவே ரத்தாகி அதற்குரிய கட்டணம், அவர்கள் எந்தக் கணக்கில் இருந்து செலுத்தினார்களோ அந்தக் கணக்கிலேயே வரவு வைக்கப்படும் நடைமுறை இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இ-வாலட்:

இ-வாலட்:

தற்சமயம் இ-வாலட் மூலம் ரயில் முன்பதிவு செய்யும் வசதியை பயனிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது ஐஆர்சிடிசி, மேலும் ஐஆர்சிடிசி-ன் ரயில் கனெக்ட் செயலில் இ-வாலட் மூலம் பயணிகள் ரயில் பயண சீட்டுகளை முன்பதி செய்துகொள்ள முடியும். குறிப்பாக பேடிஎம், மொபிக்விக், போன்ற இ-வாலட்கள் போலவே ஐஆர்சிடிசியின் வாலட்டையும் பயணிகள் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய திட்டம்:

புதிய திட்டம்:

மேலும் ரயில் பயணத்தின் போது ரயிலில் வழங்கப்படும் உணவுகளை வாங்குவதர்கள் தங்கள் கைகளில் எப்போதும் பணம் வைத்திருத்தல் அவசியமாகிறது. அதற்கான சில்லைறை இல்லையெனும் போதும், அல்லது பணமாக இல்லாமல் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் மூலம் பொருட்களை வாங்கும் நபர்கள் தொடர்ந்து அவதிப் பட்டு தான் வருகின்றனர். இந்நிலையில் பயணிகளின் இந்த அவதியினை போக்கும் வகையினில் ரயில்களில் POS இயந்திரங்களை பயன்படுத்தி பயணிகளிடம் பணம் பெற வழிவகை செய்யும் வகையில் ரயில்வே திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓலா :

ஓலா :

ஓலா இந்தியாவின் முன்னனி கால் டாக்ஸி நிறுவனமான ஓலா தற்சமயம் ஐஆர்சிடிசி இணையதளத்துடன் இணைந்துள்ளது. அதன்படி ரயில்வே பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் 7 நாட்களுக்கு முன்பே ஓலா வாடகை வண்டிகளை புக் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப் பயன்படுகளில் ஓலா கால் டாக்ஸி புக் செய்ய முடியும் என்பதால் மக்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளம்

ஐஆர்சிடிசி இணையதளம்

இந்த கூட்டணி மூலம் ஓலா மைக்ரோ, ஓலா மினி, பிரைம் ப்ளே, ஓலா ஆட்டோ போன்ற சேவைகளை ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் மிக எளிமையாக புக் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
In Case Your Train Is Cancelled, Entire Booking Amount To Get Credited Automatically; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X