நக்கல் யா உனக்கு.. ChatGPT vs Bard பஞ்சாயத்துக்கு இடையில்.. சத்தமின்றி இன்னொரு வேலையை பார்த்த சுந்தர் பிச்சை!
பார்ட் (Bard) என்கிற ஏஐ சாட்பாட்டின் அறிமுகம், அதன் விளைவாக ஏற்பட்ட 100 மில்லியன் நஷ்டம் என சாட்ஜிபிடி (ChatGPT) உடனான கடும் போட்டிக்கு மத்தியில், கூகுள் (Google) நிறுவனம் சத்தம் போடாமல் இன்னொரு வேலையையும் பார்த்துள்ளது; அதனால் ஆண்ட்ராய்டு பயனர்கள் "பரவசம்" அடைந்துள்ளனர்!
பயனர்கள் பரவசம் அடையும் அளவிற்கு Google என்ன செய்துள்ளது?
கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான தனது அடுத்த ஆப்ரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ வெளியிட்டுள்ளது!
அப்சைட் டவுன் கேக் (Upside Down Cake) என்ற குறியீட்டு பெயரின் கீழ், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-இன் முதல் டெவலப்பர் ப்ரிவியூ (First developer preview) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த லேட்டஸ்ட் அப்டேட் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும்? எப்போது அனைவருக்கும் வந்து சேரும்? இந்த புதிய ஓஎஸ்-ன் கீழ் என்ன மாதிரியான புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Android 14 OS யாருக்கு.. எப்போது கிடைக்கும்?
வழக்கம் போல, கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு 14 ஆப்ரேட்டிங் சிஸ்டமும் கூட - மெல்ல மெல்ல - பல கட்டங்களாக பிரிக்கப்பட்டு தான் அனைவருக்கும் வந்து சேரும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்..
ஆண்ட்ராய்டு 14 டெவலப்பர் ப்ரீவியூ 1 - இந்த பிப்ரவரியில் வெளியாகி விட்டது.
ஆண்ட்ராய்டு 14 டெவலப்பர் ப்ரீவியூ 2 - 2023 மார்ச் மாதத்தில் வெளியாகும்
ஆண்ட்ராய்டு 14 பீட்டா 1 - 2023 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும்
ஆண்ட்ராய்டு 14 பீட்டா 2 - 2023 மே மாதத்தில் வெளியாகும்.
ஆண்ட்ராய்டு 14 பிளாட்ஃபார்ம் ஸ்டெபிலிட்டி 1 - 2023 ஜூன் மாதத்தில் வெளியாகும்
ஆண்ட்ராய்டு 14 பிளாட்ஃபார்ம் ஸ்டெபிலிட்டி 2 - 2023 ஜூலை மாதத்தில் வெளியாகும்
இப்படியாக பிளாட்ஃபார்ம் ஸ்டெபிலிட்டி முடிந்ததும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத வாக்கில் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ன் ஃபைனல் ஸ்டேபிள் வெர்ஷன் (Final Stable Version) வெளியிடப்படும்.
Android 14 Developer Preview 1 - எந்தெந்த போன்களில் அணுக கிடைக்கும்?
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-இன் முதல் டெவலப்பர் ப்ரிவியூவானது முழுக்க முழுக்க பிக்சல் போன்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பிக்சல் 4ஏ 5ஜி (Pixel 4a 5G), பிக்சல் 5 (Pixel 5), பிக்சல் 5ஏ (Pixel 5a), பிக்சல் 6 (Pixel 6), பிக்சல் 6 ப்ரோ (Pixel 6 Pro), பிக்சல் 6ஏ (Pixel 6a), பிக்சல் 7 (Pixel 7) மற்றும் பிக்சல் 7 ப்ரோ (Pixel 7 Pro) போன்ற மாடல்களில் கிடைக்கும்.
அதாவது, மேற்கண்ட பிக்சல் போன்களில் ஏதேனும் ஒன்றை வைத்து இருந்தால் தான் மட்டுமே லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஐ பயன்படுத்தி பார்க்க முடியும்.
மேலும் டெஸ்டர்கள் மட்டுமே இந்த புதிய ஓஎஸ்ஐ-ஐ பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள், ஏனெனில் இதில் பல பக்ஸ் (Bugs) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Android 14 OS-ல் என்னென்ன புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ன் கீழ் என்னென்ன புதிய அம்சங்கள் சேர்க்கப்படும் என்கிற முழு விவரம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியாகும் ஸ்டேபிள் வெர்ஷன் வழியாகவே தெரிந்துகொள்ள முடியும்.
இருப்பினும் - ஆப் குளோனிங் (App Cloning), ப்ரீ-ஆப் லேங்குவேஜ் விருப்பங்கள் (Pre-app language preferences), அட்வான்ஸ்டு மெமரி ப்ரொடெக்ஷன் (Advanced memory protection), கேரியர்-இன்ஸ்டால்டு ப்ளோட்வேர்களை டெலிட் செய்யும் ஆதரவு (Deletion of carrier-installed bloatware) மற்றும் சில மேம்படுத்தப்பட்ட கஸ்டமைசேஷன் விருப்பங்கள் போன்ற அம்சங்கள் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ல் இடம்பெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது!


Click it and Unblock the Notifications








