தமிழ்நாடு: செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 64,105 பேரின் ஓட்நர் உரிமம் ரத்து.!

தற்போது 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜீலை வரையிலான 7 மாதங்களில் குற்றங்களில் ஈடுபட்டு சிக்கயவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

|

தற்சமயம் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி கடந்த 7மாதங்களில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 64,105 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இது மொத்த விதமீறல் குற்றங்களில் 40 சதவீதம் என்று கூறப்படுகிறது.

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 64,105 பேரின் ஓட்நர் உரிமம் ரத்து.!

மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி போக்குவரத்து விதிகள் தற்சமயம் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விபத்துகளுக்கு அதிக காரணமாகும் முக்கிய விதிமீறல்களை வரையறுத்தபோது அதில் முக்கிய இடங்களைப் பிடிப்பது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்குவது, மதுபோதையில் வானத்தை இயக்குவது, அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குவது, அஜாக்கிரதையாக இயக்குவது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றுவது போன்றவை ஆகும்.

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 64,105 பேரின் ஓட்நர் உரிமம் ரத்து.!

இப்போது குறிப்பிட்ட இந்தக் குற்றங்களில் ஈடுபடும் வாகன ஓட்டுகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் சட்டத்திர் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டு போலீஸாரிடம் சிக்குபவர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாதம் காலத்திற்கு ரத்து செய்ய பரிந்துரைக்கலாம் என்று திருத்தப்பட்டது.

இதுபோன்று ஓவர் ஸ்பீடை அளக்கும் கருவியும் வந்துவிட்டது, இதுபோன் நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்கள் வரவுகள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் பலரும் சிக்கி வருகின்றனர்.

தற்போது 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜீலை வரையிலான 7 மாதங்களில் குற்றங்களில் ஈடுபட்டு சிக்கயவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 64,105 பேரின் ஓட்நர் உரிமம் ரத்து.!

இந்த விதிமீறல்களின் எண்ணிக்கையை போக்குவரத்துத் துறை வெளியிட்டது, அந்த எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது. போக்குவரத்து விதிமீறலினால் கடந்த 7 மாதங்களில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 706 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியூட்டும் விஷயமாக முதலிடத்தில் இருப்பது செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டி சிக்கியவர்களே. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி சிக்கியவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 105 ஆகும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இடத்தில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்ததாக 29 ஆயிரத்து 964 பேர் உள்ளனர்.

மதுபோதையில் வாகனத்தை இயக்கி சிக்கியவர்கள் 19 ஆயிரத்து 422 பேர்.

சிக்னலை மதிக்காமல் சென்று சிக்கியவர்கள் 18 ஆயிரத்து 287 பேர்.

அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கி சிக்கியவர்கள் 17 ஆயிரத்து 701 பேர்.

ஓவர் லோடு ஏற்றி சிக்கியவர்கள் 7 ஆயிரத்து 223 பேரும் அடங்குவர்.

Best Mobiles in India

English summary
In 7 months 64000 loose license for using mobile phone while driving in Tamil Nadu: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X