ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து இந்தியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.!

இந்திய சந்தையில் அதிக அளவிலான விற்பனையை சந்தித்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 பிளஸ் மாடலின் சோதனை தயாரிப்பானது, பெங்களூரில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தொடங்க உள்ளது

|

இந்திய சந்தையில் அதிக அளவிலான விற்பனையை சந்தித்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 பிளஸ் மாடலின் சோதனை தயாரிப்பானது, பெங்களூரில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தொடங்க உள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியாளரான விஸ்டிரான் நிறுவனத்தின் வழியாக நிகழவுள்ளது.

பெங்களூரில் நடக்கும் இந்த சோதனை தயாரிப்பின் விளைவாக, இந்திய ஆப்பிள் பயனர்களுக்கு ஏதேனும் நன்மைகள் இருக்குமா என்கிற கேள்விக்கு, ஐபோன் 6 ப்ளஸ் மாடலின் மீது குறிப்பிட்ட அளவிலான விலைகுறைப்பு ஏற்படலாம் என்று நிறுவனத்தின் இரண்டு மூத்த தொழில் நிர்வாகிகள் பதில் அளித்துள்ளனர்.

விஸ்டிரான் நிறுவனமானது, அதன் ஐபோன் 6 பிளஸ் உற்பத்தியை அடுத்த இரண்டு வாரங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாகிகளின் படி, உள்நாட்டில் நிகழும் இந்த உற்பத்தி காரணமான ஐபோன் 6 பிளஸ்-ன் விலையானது சுமார் 5-7% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து இந்தியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.!

"எனினும், இந்த விலை திருத்தம் உடனடியாக பிரதிபலிக்காது. ஏனெனில் தற்போது வரையிலாக விஸ்டிரான் நிறுவனத்தின் மூலம் ஐபோன் 6 பிளஸ்-ன் முழு இந்திய தேவையையும் பூர்த்தி செய்ய முடியவில்லை மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி தொடரும்" என்றும் நிறுவனத்தின் மூத்த தொழில் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது உள்ளூர் உற்பத்தி திறன் அதிகரிக்கும் போது தான் விலைகள் குறைக்கப்படும் என்று அர்த்தம்.

​நேற்றுவரையிலாக விஸ்டிரான் ஆலைகளில் (உள்ளூரில்) உற்பத்தி செய்யப்பட்ட ஒரே ஆப்பிள் மாடல் ஐபோன் எஸ்இ தான் என்பதும், இந்தியாவிற்கு தேவையான ஐபோன் 6 தொடர் ஆனது (மூன்றில் ஒரு பங்கு) ஹாங்காங்கை அடிப்படையாக கொண்ட கவுன்டர்பாயிண்ட் மூலம் உற்பத்தி செய்யப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil

உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டதின் விளைவாக தான், இந்திய சந்தையில், கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ஐபோன் எஸ்இ மாடலின் விலை குறைந்துள்ளது. இதே மாதிரியானதொரு விலைகுறைப்பை, மிக விரைவில் ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் மாடல் மீதும் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
In 2 weeks, Apple could start making iPhone 6s Plus here. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X