Home
News

ஜி.. நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் இதுதான் உங்க புதிய இந்தியாவா.??

வெறும் 6% வைத்துக்கொண்டு நம்மால் என்ன செய்ய முடியும்.??

By Muthuraj

ஜிஎஸ்டி (GST) எனப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்பது இந்தியாவில் மறைமுக வரிவிதிப்பு வரிகளை ஒற்றை முறை வரியாக செலுத்தும் ஒரு முறையாகும். சமீபத்தில் இந்த ஜிஎஸ்டி ஆனது புதிய இந்தியாவை பிறக்க வைக்க பெருமளவில் உதவுமென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெருமையாக பேசினார்.

ஆனால், இந்த ஜிஎஸ்டி உண்மையில் நமக்கு நன்மைகள் வழங்குமா என்று பார்த்தால் இல்லை என்ற பதிலே ஓங்கி ஒலிக்கிறது. அதாவது நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை குறிவைத்துள்ளது இந்த ஜிஎஸ்டி.!

மொபைல்போன்களுக்கு

மொபைல்போன்களுக்கு

அதாவது விரைவில், நீங்கள் இறக்குமதி செய்யப்பட்ட மொபைல் போனை வாங்க 5 முதல்10 சதவிகிதம் வரையிலாக கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். இந்த ஜிஎஸ்டி (சரக்குகள் மற்றும் சேவைகள் வரி முறை இயங்குவதால், இறக்குமதி செய்யப்பட்ட மொபைல்போன்களுக்கு சுங்க வரி விதிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

தரமான கருவி

தரமான கருவி

சீன ஸ்மார்ட்போன்களின் இறக்குமதியை, வருவாயைக் கட்டுப்படுத்தவும், இந்தியாவில் போன்களின் உற்பத்தியை ஊக்கபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது ஒருபக்கமிருக்க சியோமி, ஒப்போ, லெனோவா போன்ற நிறுவனங்களின் கருவிகள் தான் பட்ஜெட் விலைக்கு தரமான கருவிகளாக சந்தையில் கிடைக்கிறது என்பதை மறுக்க இயலாது.

சிறப்பு சலுகைகள்

சிறப்பு சலுகைகள்

வெளிப்படையாக கூறவேண்டுமெனில் பிற நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவில் தொலைபேசிகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் கூட அதன் பெங்களூரு உற்பத்திக்கான முதல் படிகளை எடுத்துள்ளது (ஆப்பிள் நிறுவனம் வரி குறைப்புக்களைக் கேட்டது என்றும் ஆனால் அரசாங்கம் ஒரு தனிமனிதனுக்கு மட்டுமே சிறப்பு சலுகைகள் வழங்குவதற்கு ஆதரவாக இல்லை என்று மறுத்ததாகவும் கூறப்படுகிறது)

மொத்த கூறு மதிப்பில்

மொத்த கூறு மதிப்பில்

தொலைபேசிகளுக்கான பூஜ்யம் சுங்கவரியானது 'மேக் இன் இந்தியா' பிரச்சாரத்திற்கு உதவவில்லை என்று அரசாங்கம் நம்புகிறது. இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க பல்வேறு துறைகள் உள்ள அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு குழுவையும் அமைத்துள்ளது. மறுபக்கம் தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சியின் ஒரு அறிக்கையின்படி, சராசரியாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கூறுகள் தொலைபேசியின் மொத்த கூறு மதிப்பில் வெறும் 6 சதவீதம் மட்டுமே பங்களிப்பை நிகழ்த்தும் என்கிறது.

எதிர்மறை

எதிர்மறை

இறக்குமதி செய்யப்பட்ட மின்னணு பொருட்கள் மற்றும் கூறுகளின் மீது அரசாங்கம் நெருக்கடிகளை நிகழ்த்துவதின் மூலம் உள்ளூர் தொழில்துறையின் வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலேயே இருப்பதால், இந்த நடவடிக்கை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

Best Mobiles in India

English summary
Imported Mobile Phones Could Cost More, Thanks To GST. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X