ஆதார் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை.. தெரியாம கூட இதை செஞ்சுடாதீங்க மக்களே.. உஷார்..
ஆதார் அட்டை பயனர்களுக்கு ஒரு புதிய எச்சரிக்கை செய்தியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆணையம் இப்போது வெளியிட்டுள்ளது. ஆதார் பயனர்கள் அவர்களுடைய ஆதார் அட்டை விபரங்களை அப்டேட் செய்யக்கோரி செப்டம்பர் 14 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை அப்டேட் (Aadhaar card update) செய்வதற்கு முன்பாக ஆதார் அட்டை பயனர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களை ஆதார் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ஆதார் அட்டை பயனர்கள் எந்த காரியங்களை செய்ய கூடாதென்ற தகவலையும் ஆதார் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஆதார் ஆணையம் மக்களின் ஆதார அட்டை விபரங்களை அப்டேட் (Aadhaar update 2023) செய்யகோரிய பிறகு, மோசடிக்காரர்கள் அவர்களின் மோசடி வலையில் மக்கள் சிக்க வைப்பதற்கான மோசடி வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதன் தொடர்பாக இந்திய அரசாங்கம் ஆதார் பயனர்களுக்கு சிவப்புக் கொடியை UIDAI உயர்த்தியுள்ளது. மோசடி நடவடிக்கைகள் அதிகரிப்பதைக் குறித்து அவர்களை எச்சரித்துள்ளது.
"UIDAI உங்கள் அடையாளச் சான்று (POI) அல்லது முகவரிச் சான்று (POA) ஆவணங்களை ஆதார் புதுப்பிப்புகளுக்காக மின்னஞ்சல் அல்லது Whatsapp வழியாக ஒருபோதும் கோராது. பாதுகாப்பான சேனல்களைப் பயன்படுத்தி உங்கள் ஆதாரைப் பாதுகாக்கவும்: #myAtadhaar ஆன்லைனில் அல்லது உங்களுக்கு அருகில் வசதியாக அமைந்துள்ள ஆதார் மையங்களை நேரில் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் அப்டேட் செய்யலாம் என்று கூறியுள்ளது.
ஆதார் தொடர்பான முக்கியமான தகவல்களைப் பகிரும் போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த அறிவுரை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. UIDAI அத்தகைய நடைமுறைகளில் ஈடுபடவில்லை என்பதை தெளிவாக கூறியுள்ளது. ஆதார் பயனர்கள் அதிகாரப்பூர்வ ஆன்லைன் போர்ட்டலை நம்பியிருக்க வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துகிறது.

இந்தியாவில் உள்ள ஆதார் அட்டையில் கார்டுதாரரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட முக்கிய மக்கள்தொகைத் தகவல்கள் உள்ளன. கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தரவுகளும் இதில் அடங்கும். இத்தகைய முக்கியமான விஷயங்களை மக்கள் எப்போதும் அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளம் மூலம் மட்டும் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
ஆதார் அட்டை விவரங்களை எப்படி பாதுகாப்பாக அப்டேட் செய்வது?
1. அதிகாரப்பூர்வ ஆதார் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலைப் பார்வையிடவும்.
2: உங்கள் ஆதார் எண் மற்றும் OTP மூலம் உள்நுழையவும்.
3: நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
4: சரியான தகவலை உள்ளிட்டு, தேவைப்பட்டால் துணை ஆவணங்களைப் பதிவேற்றவும்.
5: விவரங்களை மதிப்பாய்வு செய்து உறுதிப்படுத்தவும்.
6: கண்காணிப்பதற்கான URN ஐப் பெறவும். URN என்பது ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் போது வழங்கப்படும் 14 இலக்க எண்ணாகும்.
7: தேவைப்பட்டால் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்காக ஆதார் பதிவு மையத்திற்குச் செல்லவும்.
8: திருத்தப்பட்ட தகவலுடன் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை நீங்கள் இப்போது பெறுவீர்கள்.
இந்த முறையில் மட்டும் உங்கள் ஆதார் அட்டை விபரங்களை மக்கள் அப்டேட் செய்யும் படி கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. முக்கியமாக, வாட்ஸ்அப் மற்றும் மற்ற சமூக வலைத்தளம் வழியாக ஆதார் அட்டையை புதுப்பிக்கும் படி ஆதார் ஆணையம் ஒரு போதும் கேட்காது என்று தெளிவாக அறிவித்துள்ளது. ஆதார் அட்டைகளை புதுப்பிக்க விரும்பும் மக்கள் மோசடிகளில் சிக்கமால் பாதுகாப்பாக இருக்கும் படி வலியுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








