Amazon Prime Day Sale-இல் எது வாங்கினாலும் "இதை" செக் பண்ண மறக்காதீங்க!

|

நாளை (ஜூலை 23) மற்றும் நாளைய மறுதினம் (ஜூலை 24) நடக்கும் Amazon Prime Day Sale 2022-இல் உங்களுக்கு விருப்பமான எந்த பொருளை வேண்டுனமானாலும் வாங்குங்கள்!

அது ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கட்டும்; ஒரு டிவி ஆக இருக்கட்டும் அல்லது வாஷிங் மெஷின் அல்லது ஏசி அல்லது பிரிட்ஜ் ஆக கூட இருக்கட்டும்.

உங்களுக்கு பிடித்த, உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற எந்தவொரு பொருளை வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால் எதை வாங்கினாலும் "ஒரு முக்கியமான" விஷயத்தை 'செக்' செய்ய மறக்காதீர்கள்!

ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வகையான செக்-கப்!

ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வகையான செக்-கப்!

"எதை" செக் செய்ய வேண்டும்? என்கிற ஒற்றை கேள்விக்கு இங்கே பல வகையான பதில்கள் உள்ளன.

எடுத்துக்காட்டிற்கு, நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கினால் முடிந்த வரை அது ஒரு 5ஜி போனாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் இந்தியாவில் இந்த ஆண்டே 5G நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அந்த நேரத்தில் உங்கள் கையில் ஒரு 4ஜி போன் இருந்தால், மீண்டும் செலவு செய்து புதிதாக ஒரு 5ஜி போனை வாங்க வேண்டியிருக்கும்.

இப்படியாக, நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன், ஏசி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி என ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வகையான செக்கப்-களை நிகழ்த்த வேண்டும். அதைப் பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

பொசுக்குனு Redmi K50i வாங்கிட்டா.. பொறுமையா உட்காந்து வருத்தப்படனுமா!?பொசுக்குனு Redmi K50i வாங்கிட்டா.. பொறுமையா உட்காந்து வருத்தப்படனுமா!?

புதிய TV ஒன்றை வாங்கினால்..

புதிய TV ஒன்றை வாங்கினால்..

அமேசான் ப்ரைம் டே சேல் 2022-யின் போது நீங்கள் ஒரு புதிய டிவியை வாங்கினால், உங்கள் தேவைகளை பொறுத்து அதிலுள்ள கனெக்டிவிட்டி விருப்பங்களைச சரிபார்க்கவும்.

அதாவது HDMI, USB போர்ட்கள், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ப்ளூடூத் உடனான பிற AV போர்ட்கள் போதுமான எண்ணிக்கையில் இருப்பதை உறுதிசெய்யவும்.

பெரிய டிஸ்பிளே கொண்ட டிவியை வாங்கினால்..?

பெரிய டிஸ்பிளே கொண்ட டிவியை வாங்கினால்..?

நீங்கள் ஒரு பெரிய டிவியை வாங்க விரும்பினால், அது உங்களுக்கு "வசதியான" வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை (Viewing experience) வழங்குமா என்பதை ஆராயுங்கள்.

அதாவது 40-இன்ச் மற்றும் 48-இன்ச் டிவிகளுக்கு, பரிந்துரைக்கப்படும் வியூவிங் டிஸ்டன்ஸ் (Viewing distance) சுமார் 7 அடி ஆகும். அதுவே 55-இன்ச் அல்லது 65-இன்ச் LED டிவி என்றால் குறைந்தபட்சம் 9 அடி தூரம் என்கிற வியூவிங் டிஸ்டன்ஸ் இருக்க வேண்டும்.

ரூ.30,000 க்குள் நீங்க வேற ஏதாச்சும் ஒரு 43-inch TV வாங்குனா.. நாங்க பொறுப்பில்ல!ரூ.30,000 க்குள் நீங்க வேற ஏதாச்சும் ஒரு 43-inch TV வாங்குனா.. நாங்க பொறுப்பில்ல!

பட்ஜெட் விலை டிவியை வாங்கினால்..?

பட்ஜெட் விலை டிவியை வாங்கினால்..?

பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள் "சராசரியான" ஸ்பீக்கர்களுடனேயே வருகின்றன. அவைகளின் டிஸ்பிளே குவாலிட்டி உங்களை ஈர்த்தாலும், ஆடியோ தரம் உங்களை வெறுப்படைய செய்யலாம்.

எனவே பட்ஜெட் டிவி வாங்க திட்டமிட்டால், கூடவே ஒரு சவுண்ட் பார்-ஐயும் சேர்த்தே வாங்கி விடுங்கள்.

புதிய Mobile Phone ஒன்றை வாங்கினால்..

புதிய Mobile Phone ஒன்றை வாங்கினால்..

முன்னரே குறிப்பிட்டபடி, ஒருவழியாக இந்தியா இந்த 2022 ஆம் ஆண்டே 5G நெட்வொர்க்கைப் பெற உள்ளது.

இந்த மாத இறுதியில் 5ஜி ஏலம் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தத்தம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனியா வாங்க திட்டமிட்டால், அது 5ஜி ஆதரவை வழங்கும் ஒரு போன் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அமேசானில் ரூ.25,000 க்குள் வாங்க கிடைக்கும் பல 5ஜி ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?

புதிய AC ஒன்றை வாங்கினால்..

புதிய AC ஒன்றை வாங்கினால்..

ஏசி-களின் முதன்மை நோக்கமே உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பதே ஆகும். எனவே உங்கள் தேவைக்கு ஏற்ப Tonnage, Window அல்லது Split மற்றும் Energy Efficiency-இல் கவனம் செலுத்துங்கள்.

மேலும் லேட்டஸ்ட் ஏசி-கள் சில கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு உட்பட பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகின்றன. எனவே நீங்கள் வாங்கும் ஏசியில் பொதுவான அம்சங்களை தவிர்த்து, எக்ஸ்டரா-வாக வேறு என்னென்ன அம்சங்கள் அணுக கிடைக்கும் என்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

ஸ்பிலிட் ஏசி Vs விண்டோ ஏசி: எது பெஸ்ட்?

ஸ்பிலிட் ஏசி Vs விண்டோ ஏசி: எது பெஸ்ட்?

பலரும் ஸ்பிலிட் ஏசி மாடல்களையே வாங்குகின்றன. அதற்காக விண்டோ ஏசி மாடல்கள் வழக்கற்றுப் போய்விட்டன என்று அர்த்தம் கொள்ள வேண்டாம்.

ஒருவேளை உங்கள் அறையில் எக்ஸ்ட்ரா ஜன்னல் அல்லது விண்டோ ஏசி பொருத்தும் வசதி இருந்தால், அதை வாங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

மேலும் நீங்கள் வாடகை வீட்டில் தங்கினால், விண்டோ ஏசி ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஏனெனில் அதை நிறுவுவதும் மற்றும் பிரிப்பதும் எளிது.

ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!

Installation கட்டணம் மீதும் ஒரு கண் வைக்கவும்!

Installation கட்டணம் மீதும் ஒரு கண் வைக்கவும்!

ஏசிகளை விற்கும் பெரும்பான நிறுவனங்கள் அதற்கான இன்ஸ்டாலேஷன் செலவுகளை பற்றி குறிப்பிடாது. எனவே விண்டோ ஏசியாக இருந்தாலும் சரி, ஸ்பிலிட் ஏசியாக இருந்தாலும் சரி, இன்ஸ்டாலேஷன் செலவுகளை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு, பின்னர் அதை ஆர்டர் செய்யவும்.

புதிய Fridge ஒன்றை வாங்கினால்..

புதிய Fridge ஒன்றை வாங்கினால்..

உங்கள் குடும்பத்தின் அளவு, அவர்களின் தேவைகள் மற்றும் அதை எங்கே வைக்க போகிறீர்கள் என்பதை பொறுத்தே, எந்த பிரிட்ஜை வாங்கலாம் என்கிற முடிவுக்கு நீங்கள் வர வேண்டும்.

மேலும் முடிந்த வரை, Frost-free மற்றும் Auto clean மாடல்களை தேர்வு செய்யவும்.

இல்லையெனில், அடிக்கடி பிரிட்ஜினுள் உருவாகும் "ஐஸ் கட்டிகளை" அகற்ற வேண்டியிருக்கும். ஆட்டோமேட்டிக் ஆக சுத்தம் செய்யும் பிரிட்ஜை தேர்வு செய்தால், அதை பராமரிக்கும் வேலை கொஞ்சம் குறையும் (நினைவில் வைத்துக்கொள்ளவும், 250 லிட்டருக்கு மேல் உள்ள எந்தவொரு பிரிட்ஜூமே ஃப்ராஸ்ட்-ப்ரீ மாடல் தான்).

கூடவே பிரிட்ஜின் கம்ப்ரசர் உத்தரவாதத்தையும் சரிபார்க்கவும். குறைந்தது 5 வருட உத்தரவாதத்துடன் வரும் கம்ப்ரசர்-ஐ கொண்ட பிரிட்ஜை வாங்கவும்.

புதிய Washing Machine ஒன்றை வாங்கினால்..

புதிய Washing Machine ஒன்றை வாங்கினால்..

Top-load அல்லது Side-door வாஷிங் மெஷினை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் இடத்தையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வழக்கமாக, டாப்-லோட் வாஷிங் மெஷின்கள் தான் மிகவும் நேர்த்தியானவைகளாக இருக்கும் மற்றும் சைட்-டோர் மாடல்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலான இடத்தில் "அமரும்". இருப்பினும், அவைகளில் இடை இடையே துணிகளை போட முடியாது!

வாடகை வீட்டுக்காரர்கள் Fully Automatic-ஐ தவிர்க்கலாம்!

வாடகை வீட்டுக்காரர்கள் Fully Automatic-ஐ தவிர்க்கலாம்!

ஏனெனில் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்கள் சரியாக வேலை செய்ய ஒரு நிலையான நீர் விநியோக ஆதாரம் மற்றும் வடிகால் தேவை.

மேலும், வாஷ் மோட்கள் (wash modes) மீதும் கவனம் செலுத்தவும்; குறிப்பாக பட்ஜெட் விலையிலான வாஷிங் மெஷினை வாங்கும் போது! எப்போதும் பல்வேறு வகையான ஃபேப்ரிக்ஸ் மற்றும் க்ளாத்-களை துவைக்க வெவ்வேறு 'மோட்'களை வழங்கும் வாஷிங் மெஷின்களையே தேர்வு செய்யவும்.

Photo Courtesy: Amazon

Best Mobiles in India

English summary
Important Things Should Check While buying Phone TV AC Washing Machine in Amazon Prime Day Sale 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X