வாட்ஸ்ஆப் என்க்ரிப்ஷன் : இது தான் புது சங்கதி, உங்களுக்கு தெரியுமா.!?
உலகம் முழுக்க வாட்ஸ்ஆப் பயனாளிகள் என்க்ரிப்ட் வசதி பெற்றிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. புதிய பாதுகாப்பு வசதியின் மூலம் அனைத்து குறுந்தகவல் மற்றும் அழைப்புகளும் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டிருப்பது அரசாங்கம் மற்றும் இதர நிறுவனங்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

என்க்ரிப்ஷன்
புதிய வெர்ஷன் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோர் எவ்வித கவலையும் கொள்ளாமல் பாதுகாப்பான குறுந்தகவல் அனுப்ப முடியும். ஏனெனில் புதிய வெர்ஷன் பயன்படுத்துவோருக்கு என்க்ரிபஷன் வசதி தானாக வழங்கப்படுகின்றது.

எப்படி தெரிந்து கொள்வது?
உங்களது ப்ரோஃபைல் சென்று ஏதேனும் ஒரு கான்டாக்ட்'ஐ க்ளிக் செய்தால் தகவல் பக்கத்தின் கீழ் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யும் தகவல் திரையில் காணப்படும்.

புதிய அப்டேட்
வாடிக்கையாளர்கள் எவ்வித இயங்குதளம் பயன்படுத்தினாலும் வாட்ஸ்ஆப் அப்டேட் செய்து கொள்ள முடியும். ஒரு வேலை உங்களது நண்பர்கள் யாரேனும் அப்டேட் செய்யவில்லை என்றாலும் அதனினை நீங்கள் என்க்ரிபஷன் பகுதியில் பார்க்க முடியும்.

வெரிஃபிகேஷன்
வாட்ஸ்ஆப் செயலியின் தகவல் பக்கத்தில் என்க்ரிப்ஷன் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இங்கு அப்டேட் செய்த அனைவருக்கும் என்க்ரிப்ஷன் ஆப்ஷன் தானாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும்.
என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்பட்ட பின் தாமதமாக அப்டேட் செய்தவர்கள் தங்களது கணக்கினை உறுதி செய்ய வேண்டும்.

குழப்பம்
எனினும் பெரும்பாலானோர் இந்த என்க்ரிப்ஷன் பக்கத்தை இயக்க வேண்டிய அவசியம் இல்லை. என்க்ரிப்ஷன் வசதி பெற்றோருக்கும் அவ்வப்போது சில குளறுபடிகள் ஏற்படுவதாக கூறப்படுவதாகவும் அனைத்து பிரச்சனைகளும் விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என வாட்ஸ்ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான என்க்ரிப்ஷன்
வாட்ஸ்ஆப் செயலியில் முழுமையான என்க்ரிப்ஷன் வசதி இந்த செயலியில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து அம்சங்களுக்கும் பொருந்தும் என்பதால் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியில் பயன்படுத்தும் சிறிய புள்ளிகளை கூட யாராலும் பார்க்க முடியாது. குறுந்தகவல் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் மட்டுமே பார்க்க முடியும்.

மேலும் படிக்க
வாட்ஸ்ஆப்பில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி.??
வாட்ஸ்ஆப்பில் திடீர் கோளாறு, சரி செய்வது எப்படி.??

முகநூல்
இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications