Home
News

ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் புதிய வசதிகள்!

By Super

ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் புதிய வசதிகள்!
ஐஓஎஸ்-6 என்ற ஆப்பிளின் புதிய இயங்குதளத்தில் பெற கூடிய வசதிகளை பற்றி இங்கே பார்க்கலாம். இதில் முக்கியமாக ஃபேஸ்புக் இன்டிகிரேட் சோஷியல் நெட்வொர்க் வசதியினை பெறலாம். பொதுவாக ஃபேஸ்புக்கில் அனைவரும் அதிக நேரம் இருக்கின்றனர். இதனால் இந்த புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளத்தின் மூலம் ஃபேஸ்புக் நண்பர்களின் பிறந்த நாளை ஐபோனில் உள்ள கேலன்டரில் பார்க்க முடியும்.

புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் ஃபேஸ் டைம் வீடியோ சாட் வசதியினை பெறலாம். இதன் மூலம் சிறப்பாக வீடியோ சாட் வசதியினை பயன்படுத்த முடியும்.

புதிதாக மெயில் அப்ளிக்கேஷன் வசதியினையும் ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் பயன்படுத்த முடியும். இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி முக்கியமானவர்களின் பெயரை விஐபி பட்டியலில் வைக்க முடியும். இதனால் இவர்களிடம் இருந்து மெயில் வந்தால் அதில் பிரத்தியேகமாக கொடி போன்ற குறியீடு காட்டப்படு்ம்.

இந்த புதிய இயங்குதளத்தில் டெக்ஸ்டு மெசேஜ் வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மிஸ்டுகால் கொடுக்கப்பட்ட நபரின் மொபைல் எண்ணிற்கு எளிதாக டெக்ஸ்டு மெசேஜ் கொடுக்க முடியும்.

ஆப்பிள் எலக்ட்ரானிக் சாதனத்தில் பயன்படுத்தப்படும் சஃப்பாரி வெப் பிரவுசரில் உள்ள தகவல்களை எளிதாக டவுன்லோட் செய்து, அதை இன்டர்நெட் சேவை இல்லாத பொழுதும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

மேம்படுத்தப்பட்ட சிரி அப்ளிக்கேஷனை ஆப்பிளின் புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் பயன்படுத்த முடியும். ஐபோன்-4 எஸ் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை அதிகம் கவர சிரி அப்ளிக்கேஷன் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.

அந்த சிரி அப்ளிக்கேஷன் இன்னும் மேம்படுத்தப்பட்ட முறையில் ஐஓஎஸ்-6 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பெற முடியும் என்றால், இந்த வசதி வாடிக்கையாளர்களை இன்னும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிறகு ஆப்பிள் மேப்ஸ் அப்ளிக்கேஷன் வசதியினையும் இதில் எளிதாக பெறலாம். இந்த மேப்ஸ் அப்ளிக்கேஷன், சிரி அப்ளிக்கேஷனுடன் இணைந்தும் பல வசதிகளை வழங்கும். 3டி மேப்ஸ், வெக்டார் கிராஃபிக், சினிமேட்டிக் சூமிங் போன்ற வசதிகளையும் இதில் பன்படுத்தலாம்.

இந்த புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளத்தின் மூலம் ஃப்ரீஅப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்யும் போது, ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டை டைப் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X