இனி தேடினாலும் கிடைக்காது.. இரவோடு இரவாக WhatsApp-ல் இருந்து காணாமல் போன முக்கிய அம்சம்!

|

இரவோடு இரவாக வாட்ஸ்அப்பில் (WhatsApp) இருந்து ஒரு முக்கியமான அம்சம் காணாமல் போய் உள்ளது!

அதென்ன அம்சம்? அது ஏன் திடீரென்று காணாமல் போனது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

பல நல்லது.. ஒரே ஒரு கெட்டது!

பல நல்லது.. ஒரே ஒரு கெட்டது!

பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆன வாட்ஸ்அப், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷனுக்கான அப்டேட்களை வெளியிட்டுள்ளது.

அந்தந்த அப்டேட்களின் வழியாக பல வகையான புதிய அம்சங்கள் கிடைக்க பெற்றுள்ள மறுகையில், ஒரு முக்கியமான அம்சம் நீக்கப்பட்டுள்ளது!

அட்றா சக்கை! WhatsApp செட்டிங்ஸ்-ல இப்படி ஒரு சீக்ரெட் ஆப்ஷன் இருக்கோ! இனி குவாலிட்டி பிச்சுக்கும்!அட்றா சக்கை! WhatsApp செட்டிங்ஸ்-ல இப்படி ஒரு சீக்ரெட் ஆப்ஷன் இருக்கோ! இனி குவாலிட்டி பிச்சுக்கும்!

இனிமேல்..

இனிமேல்..

வாட்ஸ்அப் ஐஓஎஸ்-க்கு கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட் ஆனது பல வகையான புதிய அம்சங்களை கொண்டுவந்துள்ளது.

- இனிமேல் நீங்கள் ஒரு க்ரூப்பை விட்டு வெளியேறினால் அது அட்மின்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படும்

- இனிமேல் க்ரூப் அட்மின்களால் உங்களின் எந்தவொரு மெசேஜையும், அனைவரின் கண்களில் இருந்தும் படாதபடி டெலிட் செய்ய முடியும்.

- இனிமேல் ஸ்டேட்டஸ் மூலம் பகிரப்பட்ட லிங்க்களுக்கு லிங்க் ப்ரீவியூ (Link Preview) அணுக கிடைக்கும்.

அதே போல இனிமேல் 'வியூ ஒன்ஸ்' கிடைக்காது!

அதே போல இனிமேல் 'வியூ ஒன்ஸ்' கிடைக்காது!

சமீபத்தில் ஒரு மெசேஜை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கும் 'வியூ ஒன்ஸ்' என்கிற அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகமானது அல்லவா? இனிமேல் அந்த அம்சம், வாட்ஸ்அப் வெப்பில் (WhatsApp Web) அணுக கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இது வழக்கம் போல ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் அணுக கிடைக்கும். ஆனால் டெஸ்க்டாப் மற்றும் வெப் வெர்ஷன்களில் இது அணுக கிடைக்காது!

போடு தகிட தகிட.. இனிமேல் கண்டுபிடிக்கவே முடியாது.. WhatsApp-க்கு வந்த புது சீக்ரெட்!போடு தகிட தகிட.. இனிமேல் கண்டுபிடிக்கவே முடியாது.. WhatsApp-க்கு வந்த புது சீக்ரெட்!

ஒரு பயனுள்ள அம்சம் திடீரென்று நீக்கப்படுவதற்கான காரணம் என்ன?

ஒரு பயனுள்ள அம்சம் திடீரென்று நீக்கப்படுவதற்கான காரணம் என்ன?

டெஸ்க்டாப் பயனர்களுக்கு கூடுதல் ப்ரைவஸி-ஐ வழங்குவதற்காகவே, வாட்ஸ்அப் வெப்பில் இருந்து வியூ ஒன்ஸ் அம்சம் நீக்கப்பட்டுள்ளது.

அதாவது WABetInfo வழியாக கிடைத்த தகவல்களின்படி, ​ஸ்கிரீன்ஷாட் செய்யப்படுவதில் இருந்து மெசேஜ்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் நோக்கத்தின் கீழ், இனிமேல் வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப்பில் இருந்து வியூ ஒன்ஸ் மெசேஜ்களை அனுப்ப முடியாது மற்றும் திறக்கவும் முடியாது.

டெஸ்க்டாப் பயனர்கள் இனிமேல் என்ன செய்ய வேண்டும்?

டெஸ்க்டாப் பயனர்கள் இனிமேல் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் வாட்ஸ்அப் வெப் அல்லது வாட்ஸ்அப் டெஸ்க்டாப்-ஐ பயன்படுத்தினால், நீங்கள் ஒரு வியூ ஒன்ஸ் மெசேஜை பெற்றால், அதை உங்கள் டெஸ்க்டாப்பில் திறக்க முடியாது. மேலும் "You received a view once message. For added privacy, you can only open it on your phone" என்கிற ஒரு அலெர்ட்டும் உங்களுக்கு காட்டப்படும்.

அதாவது "நீங்கள் ஒரு வியூ ஒன்ஸ் மெசேஜை பெற்று உள்ளீர்கள். கூடுதல் ப்ரைவஸிக்காக, அதை உங்களால் மொபைல் போன் வழியாக மட்டுமே திறக்க முடியும்" என்கிற மெசேஜை பெறுவீர்கள்!

ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!

இதுக்கெல்லாம்

இதுக்கெல்லாம் "ஸ்கிரீன்ஷாட் பிளாக்கிங்" என்கிற அம்சம் தான் காரணம்!

நினைவூட்டும் வண்ணம், சமீபத்தில் தான் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-க்கான வாட்ஸ்ஆப் வெர்ஷன்களில் ஸ்கிரீன்ஷாட் பிளாக்கிங் (screenshot blocking) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இது வியூ ஒன்ஸ் மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷார்ட் எடுப்பதை தடுக்க உதவும் ஒரு அம்சம் ஆகும்.

ஸ்கிரீன்ஷாட் பிளாக்கிங் அம்சம் அறிமுகமான வேகத்திலேயே வெப் வெர்ஷன்களுக்கான வியூ ஒன்ஸ் அம்சம் நீக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 7 முதல் அமல்!

நவம்பர் 7 முதல் அமல்!

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, டெஸ்க்டாப் வழியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனர்களுக்கு நவம்பர் 7 முதல் முதல் 'வியூ ஒன்ஸ்' அம்சம் அணுக கிடைக்காது.

முன்னரே குறிப்பிட்டபடி, உங்களுக்கு ஒரு வியூ ஒன்ஸ் மெசேஜ் வந்தாலும் கூட, அதை மொபைல் போன் வழியாக மட்டுமே திறக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Important change in whatsapp web and desktop From today users cannot send and open view once message

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X