ரூ. 4999 விலையில் 32' இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க வாய்ப்பு..ஆனா டிவிஸ்ட் மேல டிவிஸ்ட் இருக்கு..கொஞ்சம் உஷார்..

|

கம்மி விலையில் பெஸ்ட்டாக ஒரு ஸ்மார்ட் டிவி கிடைத்தால் நாம் வேண்டாம் என்ற சொல்லப்போகிறோம், மாட்டோம் தானே. அப்படி நாம் வேண்டாம் என்று சொல்ல முடியாத அளவிற்கு மிகவும் மலிவு விலையில் இப்போது வெறும் ரூ.4999 விலையில் ஒரு அற்புதமான 32' இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்குவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை ஜூம்ஷாப் (Zoomshop) நிறுவனம் உருவாக்கியுள்ளது. சரி, எப்படி இந்த டிவியை இதே விலையில் வாங்குவது என்று பார்க்கலாம்.

லக் பை சான்ஸ் (Luck By Chance) சலுகையில் கீழ் விற்பனை

லக் பை சான்ஸ் (Luck By Chance) சலுகையில் கீழ் விற்பனை

ZOOMSHOP வலைப்பக்கத்தில் நடைபெறும் லக் பை சான்ஸ் (Luck By Chance) என்ற இந்த சலுகையின் கீழ் மட்டும் தான் இந்த ஸ்மார்ட் டிவி இப்படி ஒரு நம்ப முடியாத விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. Luck By Chance என்ற இந்த வாக்கியத்தைப் படித்ததும் சிலருக்கு விஷயம் புரிந்திருக்கும். இந்த சலுகை ஒரு லாட்டரி முறை போல் செயல்படுகிறது. இந்த சலுகையில் பங்கேற்பதன் மூலம், நீங்கள் இந்த LED டிவியை வெறும் ரூ. 4999 என்ற விலையில் வாங்க முடியும்.

வெறும் ரூ. 4999 விலையில் விற்பனை செய்ய காரணம் என்ன?

வெறும் ரூ. 4999 விலையில் விற்பனை செய்ய காரணம் என்ன?

உண்மையை சொல்லப் போனால், இந்த டிவியின் அசல் விலை ரூ .14,999 -க்கும் அதிகமாகும். இந்த சலுகையில் பின்னணியில் ஒளிந்துள்ள ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் கவனிக்க மறக்கக் கூடாது. 32' இன்ச் கொண்ட ஸ்மார்ட் டிவியை ஏன் இந்த நிறுவனம் வெறும் ரூ. 4999 விலையில் விற்பனை செய்ய வேண்டும்? ஏனென்றால், இந்த வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் எல்லாம் ரிஃபர்பிஷ்டு (refurbished) செய்யப்பட்டவை. அதாவது சான்றளிக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட சாதனங்கள் என்பது தான் இதன் பொருள்.

'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!

சான்றளிக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட ஜூம் ஷாப் பொருட்கள்

சான்றளிக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட ஜூம் ஷாப் பொருட்கள்

ZOOMSHOP என்பது சான்றளிக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களைப் புதுப்பித்து, குறைந்த விலையில் மறுவிற்பனை செய்யும் ஆன்லைன் சந்தையாகும். இந்த இணையதளத்தில் விற்கப்படும் அனைத்து தயாரிப்புகளும் தரமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. இந்த பொருட்களைத் தான் நிறுவனம் லக் பை சான்ஸ் என்ற சலுகையின் அடிப்படையில் மிகவும் கம்மியான விலையில் விற்பனை செய்து வருகிறது.

விலை குறைவு தான்.. ஆனா ஏதோ இடிக்குதே.! சிக்கல் இருக்குமோ?

விலை குறைவு தான்.. ஆனா ஏதோ இடிக்குதே.! சிக்கல் இருக்குமோ?

விலை என்னவோ கம்மியாக தான் இருக்கிறது, ஆனால் நாங்கள் சொல்லும் விஷயத்தை எல்லாம் கேட்டு எப்படி நம்பி இதை வாங்குவது என்று ஒரு சின்ன தயக்கம் உங்களுக்குள் இருக்கலாம். அந்த தயக்கத்தை நீக்கவே நிறுவனம் நீங்கள் வாங்கும் புதுப்பிக்கப்பட்ட டிவி மற்றும் இதர சாதனங்களுக்கு 1 ஆண்டு வாரன்டியை வழங்குகிறது. வாங்கிய தேதியிலிருந்து அடுத்த 1 ஆண்டுக்கு உற்பத்தியாளர் உத்தரவாதம் உங்களுக்கு இந்த சாதனத்துடன் கிடைக்கிறது.

இந்த சுலபமான வழி இத்தனை நாளாய் தெரியுமே போச்சே.! உங்கள் சிம்-க்கான USSD கோடு இது தான்..இந்த சுலபமான வழி இத்தனை நாளாய் தெரியுமே போச்சே.! உங்கள் சிம்-க்கான USSD கோடு இது தான்..

இந்த முக்கிய குறிப்பை படிக்க மறக்காதீர்கள்.. கொஞ்சம் கவனம் தேவை

இந்த முக்கிய குறிப்பை படிக்க மறக்காதீர்கள்.. கொஞ்சம் கவனம் தேவை

இறுதியாக நிறுவனம் கூறியுள்ள முக்கிய குறிப்பில் இருக்கும் விஷயத்தையும் போட்டு உடைத்துவிடுகிறோம். நீங்கள் இந்த சலுகையில் கீழ் கலந்துகொள்ள ரூ.4,999 ஆன்லைன் மூலம் செய்திட வேண்டும். லக் பை சான்ஸ் உங்களுக்கு இந்த டிவி கிடைத்துவிட்டால் கூடுதலாக எந்த கட்டணமும் வழங்க வேண்டியதில்லை. ஸ்டாக் தீர்ந்துவிட்டால் மட்டும், நீங்கள் செலுத்திய கட்டணத்திற்கு நிகரான ஜூம்ஷாப் வாலெட் ரூபாயை நிறுவனம் வழங்கும் என்று கூறியுள்ளது. இதற்கான பொருள் ரிபண்டு (refund) தொகை அசல் காசாக வழங்கப்படமாட்டாது.

ஆண்ட்ராய்டு பயனர்களே இந்த 9 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்.! ஏன் தெரியுமா?ஆண்ட்ராய்டு பயனர்களே இந்த 9 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்.! ஏன் தெரியுமா?

ரூ.2899 விலையில் REALME 5 PRO வாங்க வாய்ப்பு

ரூ.2899 விலையில் REALME 5 PRO வாங்க வாய்ப்பு

இதற்குப் பதிலாக, நீங்கள் ஜூம்ஷாப் வலைப்பக்கத்தில் உள்ள எந்த பொருளை வேண்டுமானாலும் ஜூம்ஷாப் கேஷ் மூலம் வாங்கிக்கொள்ளலாம் என்று நிறுவனம் அதன் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் வாங்குவதற்கான பொருள்கள் ஏராளமாக இருக்கிறது என்பதனால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இன்று நடைபெறும் மற்றொரு லக் பை சான்ஸ் விற்பனையில் வெறும் ரூ.2899 விலையில் நீங்கள் REALME 5 PRO வாங்க வாய்ப்புள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Impact Feature 32 inch Smart LED TV Is Available For Rs 4999 But Dont Forget To Note The Conditions Mentioned : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X