மலிவு விலையில் அட்டகாசம் செய்யும் ஆம்ப்ளிஃபையர் ஸ்பீக்கர் அறிமுகம்.!!

Written By:

இந்தியாவில் ப்ளூடூத் மூலம் இயங்கும் ஸ்பீக்கர் வகைகளுடன் இதர மின்சாதன கருவிகளை விற்பனை செய்வதில் பிரபலமான செப்ரானிக்ஸ் நிறுவனம் டெக் சந்தையில் புதிய வகை வயர்லெஸ் ஸ்பீக்கர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

மலிவு விலையில் அட்டகாசம் செய்யும் ஆம்ப்ளிஃபையர் ஸ்பீக்கர் அறிமுகம்.!!

ஆம்ப்லிஃபை என்ற பெயரில் புதிய வயர்லெஸ் ஆடியோ இன்டக்ஷன் ஸ்பீக்கர் செப்ரானிக்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 330 கிராம் எடையில் எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் ஆனது இசையை ஆம்ப்ளிஃபை செய்து சிறப்பான அவுட்புட் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய வகை இன்டக்ஷன் ஸ்பீக்கர், ப்ளூடூத் அல்லது வை-பை என எவ்வித தொழில்நுட்பத்தோடும் இணைக்க வேண்டிய அவசியமில்லாமல் இசையை அதிர வைக்கிறது.

மலிவு விலையில் அட்டகாசம் செய்யும் ஆம்ப்ளிஃபையர் ஸ்பீக்கர் அறிமுகம்.!!

ஸ்பீக்கரை ஆன் செய்து மொபைல் ஹோல்டரில் வைத்தால் அற்புத இசையை அசாத்தியமாக இயக்குகிறது. இந்த ஸ்பீக்கர் பல்வேறு ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து வேலை செய்யுமாம். எல்லாமே வயர்லெஸ் முறையில் மாறி வரும் நிலையில் செப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய வகை ஆண்ப்லிஃபையர் ஸ்பீக்கர் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்க்க அழகாக இருக்கும் இந்த ஸ்பீக்கர் அடியில் ரப்பர் க்ரிப் கொண்டுள்ளது. இத்துடன் 1000 எம்ஏஎச் திறன் கொண்ட லி-அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதன் பிளேபேக் டைம் இன்டக்ஷன் மோடில் 6 மணி நேரமும், ஆக்ஸ் மோடில் 8 மணி நேரம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அம்சங்களுடன் ஆன்லைனில் ஆம்ப்லிஃபை ஸ்பீக்கர் விலை ரூ.999/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்வாட்ச் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்English summary
Immerse in music with the new Zebronics Portable Induction Speaker
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot