எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க- "இந்த 8 செயலி ரொம்ப மோசம்" பயனர்களின் தகவல், பணம் மோசடி!

|

மெக்காஃபி நிறுவனம் மால்வேர்களை கொண்ட புதிய 8 செயலிகளை கண்டறிந்து அறிவித்துள்ளது. இந்த செயலிகள் நீங்கள் பயன்படுத்தி வந்தால் உடனே டெலிட் செய்யும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடுகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடுகள்

ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு தேவைகளுக்கும் தொலைபேசி என்பது பிரதானமாக்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக அரசு ஆவணங்கள் சார்ந்த பயன்பாட்டு மையத்துக்கு சென்றால் அங்கு முதலில் கேட்கப்படுவது அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் இருக்கா என்பதுதான். எனவே அனைவர் கையிலும் செல்போன் என்பது அவசியமாகி வருகிறது.

செயலிகள் மற்றும் தகவல்கள் பாதுகாப்பில் கவனம்

செயலிகள் மற்றும் தகவல்கள் பாதுகாப்பில் கவனம்

ஸ்மார்ட்போன்களை எந்த அளவிற்கு பாதுகாப்பாக கையாளுகிறோம் என்பதில்தான் முழு கவனமும் செலுத்த வேண்டும். ஏதாவது ஒரு லிங்க் வருகிறது என அதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யக் கூடாது. ஸ்மார்ட்போன் கீழே விழுந்துவிடக் கூடாது என்பதில் செலுத்தும் கவனம் கூட செயலிகள் மற்றும் தகவல்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதில்லை.

McAfee அறிக்கை

McAfee அறிக்கை

இந்த நிலையில் எட்டு ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த பயன்பாடுகளானது தென்மேற்கு ஆசியா, அரேபிய தீபகற்பத்தில் உள்ள குறிவைத்து கூகுள் ப்ளே ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு நிறுவனமான McAfee அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 7,00,000 நிறுவல்கள் பெற்ற பயன்பாடுகள்

மொத்தம் 7,00,000 நிறுவல்கள் பெற்ற பயன்பாடுகள்

மேலும் McAfee வெளியிட்ட அறிக்கை குறித்து பார்க்கையில், இந்த 8 பயன்பாடுகளானது மொத்தம் 7,00,000 நிறுவல்களை பெற்றிருக்கிறது. பயன்பாடுகளில் தீம்பொருள் மறைந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பயன்பாடுகள் பயனர்களின் தகவல்களை திருடியது மட்டுமின்றி, பயனர்களின் பணத்தை பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத பர்ச்சேஸிங் மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புகைப்பட எடிட்டர்கள், வால்பேப்பர்கள், புதிர்கள்

புகைப்பட எடிட்டர்கள், வால்பேப்பர்கள், புதிர்கள்

McAfee இந்த தீம்பொருளை Android/Etinu என குறிப்பிட்டுள்ளது. இந்த பயன்பாடுகள் புகைப்பட எடிட்டர்கள், வால்பேப்பர்கள், புதிர்கள், விசைப்பலகை ஸ்கின்ஸ் மற்றும் பிற கேமரா தொடர்பான ஆப்களாக இருக்கிறது. இந்த செயலிகளானது கூகுள் ப்ளே ஸ்டோரில் மதிப்பாய்வு செய்யும் போது சுத்தமாக இருப்பது போன்று காண்பிக்கும். பின் அப்டேட் செய்யும்போது மால்வேர்களை உட்திணிக்கிறது என McAfee அறிக்கை குறிப்பிடுகிறது.

உடனடியாக டெலிட் செய்துவிடுங்கள்

உடனடியாக டெலிட் செய்துவிடுங்கள்

இந்த தீங்கிழைக்கும் பயன்பாடுகளை கண்டறிய தாங்கள் உண்மையாக முயற்சித்ததாகவும் McAfee அறிக்கை தெரிவிக்கிறது. கீழே பட்டியலில் குறிப்பிடப்படும் ஏதேனும் தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்தால் அதை உடனடியாக டெலிட் செய்துவிடுங்கள். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெலிட் செய்தவுடன் ஒருமுறை ஸ்விட்ச்ஆஃப் செய்து ஆன் செய்யுங்கள்.

ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும்

ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும்

பயனர்களின் மெசேஜ் நோட்டிபிகேஷனை திருடி அதன்மூலம் பயனர்கள் அனுமதி இல்லாமல் அவர்களது பணத்தை பயன்படுத்தி பர்ச்சேசிங் செய்யப்படுகிறது. இதுவும் சமீபத்தில் ஆண்ட்ராய்டு பயனர்களை கதிகலக்கிய எடினு ஜோக்கர் எனப்படும் ஆண்ட்ராய்டு தீம்பொருள் போன்றவை எனவும் McAfee அறிக்கை கூறுகிறது. இவைகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் தனது பயன்பாட்டில் இருந்து நீக்கினாலும் தங்களது ஸ்மார்ட்போன்களில் இருக்கும் எனவே அதை உடனடியாக நீக்க வேண்டும். தங்களது ஸ்மார்ட்போனில் இருந்து நீக்க வேண்டிய 8 செயலிகள் பட்டியலை பார்க்கலாம்.

நீக்க வேண்டிய செயலிகள்

நீக்க வேண்டிய செயலிகள்

com.studio.keypaper2021

com.pip.editor.camera

org.my.favorites.up.keypaper

com.super.color.hairdryer

com.ce1ab3.app.photo.editor

com.hit.camera.pip

com.daynight.keyboard.wallpaper

com.super.star.ringtones

அச்சுறுத்தல்களை கண்டறிந்து கண்காணிப்பு

இந்த பயன்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என மெக்காஃபி அறிவுறுத்துகிறது. மெக்காஃபி மொபைல் ஆராய்ச்சி குழு பயன்பாடுகள் அச்சுறுத்தல்களை கண்டறிந்து கண்காணித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பிழையான செயலிகளை நீக்கக் கோரி அறிவுறுத்தி வருகிறது.

Source: phonearena.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Immediately Uninstall these 8 Android Apps in Your Mobile: 8 Malware Apps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X