Home
News

2 மில்லியன் பேரில் ஒருவரா நீங்களும் இருக்கலாம்! "உடனே இதை டெலிட் பண்ணுங்க" Play Store எச்சரிக்கை.!

கூகுள் Play Store இல் TubeBox என்ற பயன்பாடு மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கொண்டிருக்கிறது. இந்த பயன்பாடானது பயனர்களை பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறது. இந்த பயன்பாட்டின் மூலம் பயனர்கள் வெகுமதிகளை சம்பாதிக்கலாம். பின் இதை நாணயமாக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பயனர்கள் தங்களுக்காக அல்ல, மோசடி செய்பவர்களுக்காக பணம் சம்பாதிக்க இந்த ஆப் வழிவகை செய்வதாக டாக்டர் வெப் ஆன்டிவைரஸ் கண்டறிந்திருக்கிறது.

மால்வேர் நிறைந்த ஆப்ஸ்

மால்வேர் நிறைந்த ஆப்ஸ்

கூகுள் ப்ளே ஆப் ஸ்டோரில் பயனர் தரவுகளை திருடக்கூடிய ஆபத்தான மால்வேர் நிறைந்த இந்த ஆப்ஸை பாதுகாப்பு நிறுவனமான டாக்டர் வெப் கண்டுபிடித்துள்ளது.

2 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள்

2 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள்

இந்த ஆப் ஆனது ப்ளே ஸ்டோரில் 2 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கொண்டிருக்கிறது. தற்போது இந்த பயன்பாடு கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கவில்லை என்றாலும் முன்னதாக பல பயனர்கள் இந்த ஆப்ஸை தங்கள் மொபைல் டவுன்லோட் செய்து வைத்திருக்கலாம். எனவே பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க அவற்றை உடனடியாக நீக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பணம் சம்பாதிக்க அனுமதிக்கும் ஆப்

பணம் சம்பாதிக்க அனுமதிக்கும் ஆப்

டாக்டர் வெப் ஆன்டிவைரஸ் கண்டுபிடித்த இந்த பயன்பாட்டின் பெயர் TubeBox ஆகும். TubeBox ஆனது 1 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டிருக்கிறது. இந்த செயலி ஆனது வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் பயனர்களை பணம் சம்பாதிக்க வழிவகுக்கிறது.

பயனர்கள் இந்த ஆப்ஸ் மூலம் வெகுமதிகளை பெறுவார்கள். பின் இது நாணயமாக மாற்றப்படும். பயனர்களை அதிகரிக்க இந்த பயன்பாடு பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த பயன்பாட்டில் பயனர்கள் ஈட்டும் வெகுமதி அவர்களுக்காக அல்ல மோசடி செய்பவர்களுக்காக என கூறப்பட்டுள்ளது.

தீங்கிழைக்கும் செயலி

தீங்கிழைக்கும் செயலி

ஃபாஸ்ட் கிளீனர் மற்றும் கூலிங் மாஸ்டர் என அழைக்கப்படும் மற்றொரு ஆப்ஸ், கூகுள் ப்ளே இல் ஓஎஸ் 'ஆப்டிமைசேஷன் கருவியாக' கிடைக்கிறது. இந்த பயன்பாடானது பயனர்கள் சாதனத்தில் ப்ராக்ஸியைப் பயன்படுத்தி தீங்கிழைக்கும் பயன்பாட்டை தொடங்குகிறது.

ட்ரோஜன் குடும்பத்துடன் கூடிய பயன்பாடு

ட்ரோஜன் குடும்பத்துடன் கூடிய பயன்பாடு

அதேபோல் Dr Web ஆனது Android.FakeApp ட்ரோஜன் குடும்பத்துடன் கூடிய பயன்பாடுகளையும் கண்டறிந்துள்ளது. இந்த போலியான ஆப்ஸ்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களுக்கு தெரியாமலேயே சேகரிக்கிறது. பொதுவாக இணைய தாக்குதல் நடத்துபவர்கள் பிரபலமான நபர்கள் மற்றும் நிறுவனங்களின் படங்களை பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆன்லைன் மோசடி

ஆன்லைன் மோசடி

ஆன்லைன் மோசடிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி CERT-In ஒரு ஆலோசனையை வெளியிட்டது. அதில்., வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் பொய்யான செய்திகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை ஆஃபர் என கூறி பரிசு இணைப்புகள் அனுப்பப்படுகிறது. இந்த இணைப்பை சக நண்பர்களிடம் பகிரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த இணைப்பை கிளிக் செய்வதன்மூலம் மோசடி செயல்கள் தொடங்குகிறது. என CERT-In ஆலோசனையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கவனிக்கத்தக்க ஒரு விஷயம்

கவனிக்கத்தக்க ஒரு விஷயம்

இதுபோன்ற வலைதளங்களில் பெரும்பாலானவை .cn என்ற டொமைன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபிஷிங் வலைதளங்களில் பெரும்பாலானவை சீனாவை சேர்ந்தவை என CERT-in விளக்கி உள்ளது. தயவு செய்து எந்தவித அதிகாரப்பூர்வமற்ற மெசேஜ்களை பகிரவும் வேண்டாம் இதில் உள்ள லிங்க்களையும் எந்த சூழ்நிலையிலும் கிளிக் செய்யவும் வேண்டாம். கேட்கப்படும் எந்த தகவலையும் நிரப்ப வேண்டாம், குறிப்பாக கிளிக் செய்யவே வேணாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

எச்சரிக்கையாக இருப்பது அவசியம்

எச்சரிக்கையாக இருப்பது அவசியம்

எச்சரிக்கையாக இருப்பது அவசியம், நீங்கள் மோசடிகளை தவிர்க்க இணைப்புகளின் உண்மைத் தன்மையை அறிவது முக்கியம். அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பேரில் ஒரு லிங்க் அனுப்பப்படும் அதை கிளிக் செய்தால் அதிகாரப்பூர்வ தளம் போன்று வேறு தளத்துக்கு அனுப்பப்படுகிறீர்கள். அதில் மொத்த தகவலும் திருடப்படுகிறது.

யோசித்து பாருங்கள், தேவையில்லாமல் அவர்கள் ஏன் உங்களுக்கு பரிசளிக்க வேண்டும். நியாயமற்ற முறையில் அதீத விலைக்குறைப்பு வழங்க என்ன காரணம் என்று. அதிகாரப்பூர்வ இணையதளத்தை நீங்களே டைப் செய்து அதற்குள் நுழைந்து சோதித்து பாருங்கள். நேரடியாக லிங்க்கிற்குள் நுழைவதை தவிர்க்கவும்.

Best Mobiles in India

English summary
Immediately Delete this Dangerous App Which Got 2 Million Downloads in Google Play Store
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X