IMCL அறிமுகம் செய்த இலவச பேக் மற்றும் 400 சேனல்களின் விபரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இண்டஸ்இண்ட் மீடியா அண்ட் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (IMCL) ஊரடங்கு காலத்தின் மத்தியில், அதன் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு (LCO) உதவ புதிய புதுமையான மற்றும் குறைந்த கட்டண முறையை அறிவித்துள்ளது. இத்துடன், அதன் மில்லியன் கணக்கான சந்தாதாரர்களுக்குத் தரமான உள்ளடக்கத்தையும் வழங்க முன்வந்துள்ளது. இதன் முயற்சியாக 400 தொலைக்காட்சி சேனல்களை வழங்க முடிவு செய்துள்ளது.

மக்கள் பொழுதுபோக்குக்காக ஐ.எம்.சி.எல் செய்த வேலை
COVID-19 பாதிப்பினால் முழு தேசமும் ஊரடங்கின் கீழ் உள்ள நிலையில், மக்கள் தங்கள் பொழுதுபோக்குக்காக OTT மற்றும் TV தளங்களை நம்பியே வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். சிறப்பு குறைந்த கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஊரடங்கு காலத்தில் அதன் சந்தாதாரர்கள் பிரீமியம் தரமான உள்ளடக்கத்தை அனுபவித்து வீடுகளில் மக்கள் பாதுகாப்பாகவும், பொழுதுபோக்கு அம்சத்துடனும் இருக்க முடியும் என்று ஐ.எம்.சி.எல் தெரிவித்துள்ளது.

விஷேஷ் மனோரஞ்சன் பேக்
ஐ.எம்.சி.எல் தற்பொழுது அறிமுகம் செய்துள்ள சிறந்த குறைந்த விலை திட்டத்திற்கு விஷேஷ் மனோரஞ்சன் பேக் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐ.எம்.சி.எல் அதன் சந்தாதாரர்களுக்காக விஷேஷ் மனோரஞ்சன் பேக்கை ஊரடங்கு காலகட்டத்தில், மக்களின் பொழுதுபோக்கு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கியுள்ளது. நிறுவனத்தின் பிரத்தியேக பேக் அதன் சந்தாதாரர்களுக்கு சுமார் 400 தொலைக்காட்சி சேனல்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

400 சேனல்களுடன் கூடுதல் சேவையும் இருக்கு
குறைந்த விலையில் 400 தொலைக்காட்சி சேனல்களை வழங்குவது மட்டுமின்றி, சந்தாதாரர்கள் பேக்கிலிருந்து அதிகபட்ச மதிப்பு கிடைக்கும் என்பதை உறுதி செய்வதற்கு IMCL மேலும் ஒரு உள்ளடக்கத்தை 400 சேனல்களுடன் சேர்த்து உள்ளடக்கியுள்ளது. IMCL இதனுடன் மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளான NXT மூலம் தனது சந்தாதாரர்களுக்குக் கூடுதலாக 20 தனிப்பட்ட சேனல்கள் வரை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Easebuzz மூலம் கட்டணம் செலுத்தலாம்
ஐ.எம்.சி.எல் சந்தாதாரர்கள் உடனடியாக இந்த புதிய சேவையை அனுபவிக்க முடியும். மேலும் லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர் கள் ஏப்ரல் 16, 2020 தேதியில் பணம் செலுத்தினால் போதும். சந்தாதாரர்களுக்கும் எல்.சி.ஓ-க்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் தொடர்பு இருப்பதை உறுதிசெய்ய, ஐ.எம்.சி.எல் அதன் ஆன்லைன் ரீசார்ஜ் வசதியை ஈஸ்ப்பஸ் (Easebuzz) மூலம் விரிவுபடுத்தியுள்ளது. சந்தாதாரர்கள் இதன் மூலம் நேரடியாக ஆன்லைனில் பணம் செலுத்திக்கொள்ளலாம்.

பூஜ்ஜியம் செலவில் சிறப்பு Infopack
இதுமட்டுமின்றி ஐ.எம்.சி.எல் சிறப்பு இன்போபேக்கையும் செயல்படுத்தியுள்ளது. சந்தாதாரர்கள் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது, தற்போதைய நிலைமை என்ன என்பதைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள IMCL மேலும் செய்தி மற்றும் பொழுதுபோக்கு அடங்கும் சேவைகளை இலவசமாக வழங்க முடிவு செய்து, அனைத்து தூர்தர்ஷன் சேனல்களை பூஜ்ஜியம் செலவில் சிறப்பு Infopack என்ற பெயரில் வழங்கியுள்ளது.

சந்தாதாரர்கள் மற்றும் எல்.சி.ஓ-க்களின் நல்வாழ்வை நோக்கி ஐ.எம்.சி.எல் சிறப்புத் திட்டங்களை IMCL
அறிமுகப்படுத்தியபோது, ஐ.எம்.சி.எல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் வின்ஸ்லி பெர்னாண்டஸ், நிறுவனம் தனது மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள் மற்றும் எல்.சி.ஓ-க்களின் நல்வாழ்வில் கவனம் கொண்டுள்ளதாகக் கூறினார். முழு உலகமும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலை அனைவரும் சமாளித்துவிடுவோம் என்று நம்பிக்கை வார்த்தை கூறியுள்ளார்.

விமர்சன விழிப்புணர்வையும் வழங்கியுள்ள IMCL
அதுமட்டுமின்றி, இந்த தொற்றுநோய் பற்றி மக்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்ய, ஐ.எம்.சி.எல் பல்வேறு ஊடகங்கள் மற்றும் பல மொழிகள் மூலம் விமர்சன விழிப்புணர்வையும் வழங்கியுள்ளது. மேலும், சந்தாதாரர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகப் பூஜ்ஜிய செலவில் இன்போபேக் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளதாக IMCL தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications