திருடனில் நல்ல திருடன்.! வைரல் ஆகும் திருடனின் ஈமெயில்.!

பொதுவாகத் திருடர்கள் என்றாலே கெட்டவர்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்களிலும் உண்மையான நல்ல உள்ளம் கொண்ட திருடர்களும் இருக்கிறார்கள்.

|

பொதுவாகத் திருடர்கள் என்றாலே கெட்டவர்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்களிலும் உண்மையான நல்ல உள்ளம் கொண்ட திருடர்களும் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக அன்மையில் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு பற்றிய டிவிட்டர் பதிவு தற்பொழுது உலகளவில் வைரல் ஆகிவருகிறது.

மன்னிப்பு கேட்டு ஈமெயில்

மன்னிப்பு கேட்டு ஈமெயில்

பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் லேப்டாப்பை திருடிச் சென்ற திருடன், அந்த மாணவனுக்கு மன்னிப்பு கேட்டு ஈமெயில் ஒன்றையும் அனுப்பியுள்ளான். தற்பொழுது அந்த ஈமெயில் இன் புகைப்படம் டிவிட்டர் மற்றும் அனைத்துச் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. இப்பொழுது சமூக வலைத்தளம் மற்றும் டிவிட்டரில் அந்தத் திருடன் தான் சூப்பர் ஸ்டார்.

பணத்தேவைக்காக லேப்டாப் திருட்டு

பணத்தேவைக்காக லேப்டாப் திருட்டு

ஸ்டீவ் வாலெண்டின் என்ற டிவிட்டர் பயனர், திருடன் மன்னிப்பு கேட்டு அனுப்பிய ஈமெயில் இன் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். மாணவனின் லேப்டாப்பை தெரிந்தே திருடியதற்கு மிகவும் மனம் வருந்துவதாகவும், அவனுக்கு பணத்தேவை இருப்பதனால் தான் லேப்டாப்பை திருடி சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.

படிப்பு சம்மந்தப்பட்ட தகவல்

படிப்பு சம்மந்தப்பட்ட தகவல்

இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், நீங்கள் பல்கலைக்கழக மாணவன் என்பது எனக்கும் தெரியும். உங்கள் படிப்பு சம்மந்தப்பட்ட தகவல்கள் ஏதேனும் லேப்டாப் இல் இருந்தால், இந்த ஈமெயில் ஐ.டி-க்கு மெயில் செய்யுங்கள். உங்களுக்கு தேவையான படிப்பு சம்மந்தப்பட்ட தகவல்களை அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளான்.

மொபைல் போன் மற்றும் பர்ஸ்

உங்கள் லேப்டாப்பை திருடுகையில், அருகிலிருந்த உங்களின் மொபைல் போன் மற்றும் உங்களின் பர்ஸ்ஸை உங்களின் தேவை கருதி விட்டு வந்துவிட்டேன். உங்கள் படிப்பு சம்மந்தப்பட்ட ஏதேனும் ஃபைல் அல்லது படிப்பு சம்மந்தப்பட்ட தகவல்கள் வேண்டுமெனில் இந்த ஈமெயில் இல் குறிப்பிடுங்கள், நான் அனுப்பி வைக்கிறான் என்று சொல்லி மறுபடியும் தெரிந்தே உங்களின் லேப்டாப்பை திருடியதுக்கு மன்னியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளான்.

59,000 முறை ரீடிவீட்

59,000 முறை ரீடிவீட்

இந்த ஈமெயில் பற்றிய டிவிட்டர் பதிவு இதுவரை 59,000 முறை ரீடிவீட் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை 1.8 லட்சத்திற்கும் மேல் லைக் செய்யப்பட்டு டிவிட்டரில் வைரல் ஆகியுள்ளது. திருடன் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Im Extremely Poor Thief Steals Laptop Writes Apologetic Email To Owner : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X